கொரோனா சூழலில் அமைக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலில் வருகிறது குவாரண்டைன் பட்டி (https://www.qtinebuddy.com/ ) இணையதளம்.
கொரோனாவை கட்டுப்படுத்த அமல் செய்யப்பட்ட பொதுமுடக்க சூழலில், தனிமை தோழமையை தேடிக்கொண்டு ஆறுதல் அடைய வழி செய்தது இந்த தளம். அந்த வகையில், கொரோனா கொடுஞ்சூழலில் பெரும் ஆசுவாசம் அளித்த இணையதளமாக இது அமைகிறது.
இணையத்தில் நட்பு வளர்க்க உதவும் இணையதளங்களு குறைவில்லை. நன்கறியப்பட்ட பேஸ்புக் வகை வலைப்பின்னல் தளங்கள் முதல், திடிர் உரையாடலுக்கு வழி செய்யும் சாட்ரவுளெட் ( ) அரட்டை இணையதளம் வரை எண்ணற்ற சேவைகள் இருக்கின்றன.
இருப்பினும், கொரோனா சூழலில் பிரத்யேக தளங்களும் தேவைப்பட்டன. அந்த வகையில் உருவானது தான் குவாரண்டைன் பட்டி தளம்.
கொரோனா பொதுமுடக்கத்தால், வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக்கொள்ள நேர்ந்தவர்கள், தங்களுக்குள் இணைய நட்பை உருவாக்கி கொள்வதற்கான இணைப்பு பாலமாக இந்த தளம் செயல்பட்டது.
அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஜோர்டைன் கோல்டுவைஸ் மற்றும் அவரது சக மாணவர் சாம் பிரிக்மேன் இணைந்து இந்த தளத்தை உருவாக்கினர்.
பொதுமுடக்கம் உண்டாக்கிய சூழல் எல்லோரையும் எந்த அளவு தன்மையில் உணர வைத்திருக்கும் என்பதை புரிந்து கொண்டவர்கள், தொழில்நுட்பம் மூலம் மக்களை இணைத்து வைக்க ஏதேனும் செய்ய வேண்டும் எனும் உந்துதலில் தனிமையில் இருப்பவர்களை இணைக்கும் தளத்தை அமைத்தனர்.
இருவரும் ஏற்கனவே, கல்லூரி மாணவர்களுக்கான ஜிங் (“Zing” ) எனும் இணையதளத்தை ஏற்கனவே உருவாக்கியிருந்தனர். அந்த அனுபவத்தில் தான், குவாரண்டைன் பட்டி தளத்தை அமைத்தனர்.
தனிமையில் இருப்பவர்கள், பேச்சுத்துணை தேடிக்கொள்ள இந்த தளத்தில் தங்களைப்பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள் அடிப்படையில், இதே போல பதிவு செய்து கொண்டிருந்தவர்களில் பொருத்தமானவர்களை தேர்வு செய்து இந்த தளம் இணைத்து வைக்கும். அதன் பிறகு அவர்கள் இணையத்தில் உரையாடலாம்.
நான்கு சுவற்றைக்குள் அடைப்பட்டு கிடந்தவர்கள் தங்களைப்போலவே உணரும் மனிதர்களுடம் பேசி ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பக இது அமைந்தது.
இப்படி அமெரிக்கா மட்டும் அல்லாது, நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கொரோனா கால தனிமையில் தவித்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள வழி வகுத்தது இந்த தளம்.
மருத்துவ பணியாளர்கள் துவங்கி, வயதான முதியவர்கள் வரை பல தரப்பட்ட மனிதர்கள் இந்த தளத்தின் மூலம் தனிமையில் இருந்து தங்களை மீட்கும் நட்பை தேடிக்கொண்டனர். இவர்கள் தொடர்ந்து உரையாடலை மேற்கொள்வதற்கான இடமாகவும் விளங்குகிறது.
நட்புக்கான இணைப்பு பாலமாக அமைந்ததோடு, வாரந்தோறும் மெய்நிகர் சந்திப்புகளையும் ஏற்பாடு செய்து அதில் பங்கேற்கவும் இந்த தளம் வழி செய்கிறது. பரஸ்பர ஆர்வத்தின் அடிப்படையில் மெய்நிகர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
இந்த தளம் தொடர்பான வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை, நேரில் சந்திதிராமல், இந்த தளம் மூலம் நண்பர்களான, ஸ்டேசி மற்றும், ஷரான் இடையிலான நட்பை அழகாக விவரிக்கிறது. குளிர்காலத்தில் தனிமையை உணர்ந்தால், விடுமுறைக்காக என் வீட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம், ஜாலியாக விளையாட நாய்க்குட்டியும். தனியே ஒரு கூடுதல் அறையும் இருக்கிறது என அன்பாக ஸ்டேசியை ஷரான் அழைப்பதை இந்த கட்டுரை விவரிக்கும் விதம் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
–
https://www.washingtonpost.com/nation/2020/10/13/quarantine-buddy-cornell-students/
—
( புதிய இணையதளங்களை அறிமுகம் செய்யும் இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்: https://cybersimman.substack.com/p/–75d