கூகுளில் கண்டறிய முடியாத மேதைகள்

03_Kulick-book-cover-683x1024டான் கூலிக்கை உங்களுக்கு தெரியுமா? கூலிக்கை உங்களுக்கு தெரியாவிட்டாலும் கூட, சில வரி அறிமுகத்திலேயே அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படும் மனிதராக தான் கூலிக் இருக்கிறார். கூலிக்கை பற்றி மேலும் பார்ப்பதற்கு முன், கூலிக் போன்ற மேதைகளை நாம் அறிந்து கொள்ளும் வழி என்ன என்று பார்க்கலாம்.

இதென்ன பெரிய விஷயம், கூலிக் பற்றி கூகுளில் தேடினால் போதுமே என நீங்கள் நினைக்கலாம். சரி தான். கூலிக் பற்றி கூகுள் தேடலில் விரிவாக அறிந்து கொள்ளலாம் தான். ஆனால், பிரச்சனை என்னவெனில், கூலிக் பற்றி உங்களுக்கு தெரியாத போது அவரை கண்டறிவது எப்படி என்பது தான்?

கூலிக் மிகச்சிறந்த மானுடவியலாளராக அறியப்படுகிறார். மொழி சார்ந்த மானுடவியல் ஆய்வில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக அழியும் நிலையில் இருக்கும் மொழிகள் பற்றிய ஆவணப்பதிவுகளுக்காக அறியப்படுகிறார்.

எனவே, மானுடவியலில் ஆர்வம் இருந்தால் அல்லது மொழி சார்ந்த தேடல் இருந்தால் கூலிக்கை தெரிந்து கொள்ளலாம். அனால், அப்போது கூட கூகுள் தேடலில் கூலிக்கை அறிய முடியுமா எனத்தெரியவில்லை. ஏனெனில், புகழ்பெற்ற மானுடவியலாளர்கள் என்று தேடினாலோ அல்லது அழியும் மொழிகள் (dying language ) என தேடினாலோ கூகுள் முன்வைக்கும் முதல் பக்க முடிவுகளில் கூலிக் வருவதில்லை.

ஆனால், டயப் (tayap) எனும் சொல்லை தேடினால், கூலிக்கை சுற்றி வளைத்து அறிமுகம் செய்து கொள்ளலாம். ஆய்வின் அடிப்படையில் அவர் எழுதிய புத்தகம் தொடர்பான செய்திகள் அல்லது கட்டுரைகளை பார்க்க முடிகிறது. இதற்கு முதல் நாம் டயப்பை அறிந்திருக்க வேண்டுமே!

டயப், பாப்புவா நியுகினியாவில் பேசப்படும் மொழி. அந்த மொழியை பேசுபவர்கள் ஐம்பதுக்கும் குறைவானவர்கள் என்பதும், அவர்களும் கபூன் எனும் குறிப்பிட்ட கிராமம் ஒன்றைச்சேர்ந்தவர்கள் என்பதும் ஆச்சர்யம் அளிக்கும் தகவல்கள். இந்த தேசமே கொஞ்சம் ஆச்சர்யமானது தான். இங்கு மட்டும் 800 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக அறிய முடிகிறது.

எனவே மொழியியல் அறிஞர்களை பொருத்தவரை இந்த நாடு பொக்கிஷம் போன்றது. கூலிக் இந்த நாட்டை தேடிச்சென்றதில் வியப்பில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம். டான் கூலிக்கை அறிந்திராத போது, கூகுள் தேடலில் அவரை கண்டறிவது எப்படி? இது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன்.

கூலிக் போன்ற மேதைகளை கூகுள் தேடலில் கண்டறிய வாய்ப்பில்லை. ஏனெனில் இணைய தேடலில் அவர்களை நீங்கள் தற்செயலாக அறிந்து கொள்வதே வழி. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். கூகுளை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் அது சாத்தியம் இல்லை.

எல்லாம் தேட வல்ல கூகுள் மீது இப்படி ஒரு புகாரா? எனும் கேள்விக்கு பதிலாக டான் கூலிக்கை நான் கண்டறிந்த விதத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

கூலிக்கை எதிர்பார்த்து என் தேடலை துவக்கவில்லை. தற்செயலாக கூலிக் வந்து நின்றார். ஆனால் அதற்கு முன் இரண்டு ஆச்சர்யங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

முதல் ஆச்சர்யம், ஜேஸ்மின் டைரக்டரி. இப்படி ஒரு இணைய டைரக்டரி இருக்க கூடும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

இந்த இடத்தில் டைரக்டரி எனப்படும் இணைய கையேடுகள் பற்றி சில வார்த்தைகள். வெப் டைரக்டரி என குறிப்பிடப்படும் இணைய கையேடுகளை இணையத்தின் ஆதிகால அம்சம் என சொல்லலாம். தொலைபேசி காலத்தில் பிரபலமாக இருந்த டைரக்டரிகள் போல, வலையின் ஆரம்ப காலத்தில், இணையதளங்களை தனித்தனி பிரிவுகளின் கீழ் பட்டியலிட்டு தொகுத்தளிக்கும் சேவையை வலை டைரக்டரி தளங்கள்  வழங்கின.

இணையத்தில் உதயமாகும் புதிய, பயனுள்ள சுவாரஸ்யமான இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ள இந்த டைரக்டரி தளங்கள் உதவியாக இருந்தன. கூகுளுக்கு முன் இணையத்தின் கூகுளாக இருந்த யாஹு தளம் இத்தகைய டைரக்ட்ரியாக துவங்கி பின்னர் வலைவாசல் தளமாக விரிவானது. யாஹு தவிர வேறு பல பிரபலமான டைரக்டரி தளங்களும் இருந்தன.

ஆனால், இதெல்லாம் அந்த கால கதை. இப்போது டைரக்டரிகளை பெரும்பாலனோர் அறிந்திருப்பதில்லை, அறிந்தவர்களும் கூட அவற்றை நாடுவதில்லை.

டைரக்டரிகள் செல்வாக்கை இழந்து விட்டனவேத்தவிர வழக்கொழிந்து போய்விடவில்லை. அதோடு, இணையதளங்களை கண்டறிய சிறந்த வழிகளில் ஒன்றாக இன்னமும் டைரக்டரி தளங்கள் விளங்குகின்றன என்பது என் நம்பிக்கை.

அதற்கேற்பவே, டைரக்டரி தொடர்பான பரிந்துரை கட்டுரைகளையும் இணையத்தில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இந்த சுட்டிக்காட்டல்களால், இப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கும் டைரக்டரி தளங்களை கண்டறியலாம் என தேடிய போது தான், ஜாஸ்மின் டைரக்டரி கண்ணில் பட்டது.

கைகுத்தல் அரசி போல, செயற்கை நுண்ணறிவு காலத்திலும், மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்படும் இணையதளங்கள் மற்றும் வர்த்தக முகவரிகளை பட்டியலிடும் சேவையாக ஜாஸ்மின் டைரக்டரி இருப்பதாக் விக்கிபீடியா சொல்கிறது. ஆச்சர்யப்படும் வகையில், 2009 ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்னமும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதையும் அறிய முடிகிறது.

பழங்கால டைரக்டரி போல, கலைகள் & மனிதநேயம், வர்த்தகம் & நிதி, கம்ப்யூட்டர் & தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இணையதளங்களை பட்டியலிடும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது.

இந்த தளம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருவதே ஆச்சர்யமான விஷயம் எனும் போது, இதன் பட்டியல் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கிறது என பார்க்கலாம் என்பதற்காக, செய்திகள் மற்றும் இதழ்கள் பிரிவை கிளிக் செய்து, அதில் இதழ்களின் பட்டியலை பார்க்கும் போது, தோல்வியை குறிக்கும் பைலியர்  (http://failuremag.com/ ) எனும் ஒரு இணைய இதழை பார்க்க முடிந்தது.-  https://www.jasminedirectory.com/news-politics/magazines-ezines/

தோல்வியை முதன்மை படுத்த ஒரு இணைய இதழா எனும் வியப்புடன் இந்த இதழை கிளிக் செய்து பார்த்தால், இதன் கட்டுரைகளி இன்னமும் வியப்பை அளிக்கின்றன.

தோல்வியே வெற்றிக்கு முதல் படி என சொல்லப்பட்டாலும், இந்த உலகில் வெற்றி கொண்டாடப்படும் அளவுக்கு தோல்வி கவனிக்கப்படுவதில்லை. ஆனால், தோல்வியால் துவள வேண்டியதில்லை என வலியுறுத்துவது போல, தோல்வியை மட்டுமே அடிப்படையாக கொண்ட கட்டுரைகளை இந்த இதழ் வெளியிட்டு வருகிறது.

மனிதகுலத்தின் துணிச்சலான தவறான் அடிகளால் நிறைந்திருக்கும் ஆன்லைன் இதழ் என பைலியர் மேகசைன் பற்றி அதன் அறிமுக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்பவே அதன் கட்டுரைகள் ஏதோ ஒரு வகையில் தோல்வியை கொண்டாடும் வகையில் அமைந்திருக்கிறது.

ஆச்சரயமாக தான் இருக்கிறது அல்லவா? அமெரிக்காவின் ஜேசன் ஜாக்சி என்பவர் புத்தாயிரம் ஆண்டு முதல் இந்த இணைய இதழை நடத்தி வருகிறார்.

இந்த இணைய இதழில் உள்ள கட்டுரைகளை துழாவிக்கொண்டிருந்த போது தான்,  மழைக்காட்டில் ஒரு மரணம் (A Death in the Rainforest ) எனும் புத்தக அறிமுகத்துடன் டான் கூலிக் நேர்காணலை பார்க்க முடிந்தது.

ஸ்வீடனைச்சேர்ந்த மானுடவியலாலரான கூலிக், பாப்பாவா நியுகினியாவில் உள்ள கபூனில் பேசப்படும் ஒரு மொழி எவ்வாறு அழிகிறது எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதற்காக அவர் தேர்வு செய்த மொழி தான் டயப். பசுபிக் பிராந்தியத்தில் இருக்கும் பாப்பாவா நியுகினியாவில் கபூன் எனும் ஒரே ஒரு கிராமத்தில் உள்ள சொற்பமானவர்களால் பேசப்பட்டும் வரும் இந்த மொழியின் நிலையை ஆய்வு செய்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். சும்மாயில்லை, சுமார் 30 ஆண்டுகள் அந்த மக்களுடனே தங்கியிருந்து ( தொடர்ச்சியாக அல்ல, இடைவெளிவிட்டு தான்), அந்த மொழி அழிவை நோக்கி செல்வதை பதிவு செய்திருக்கிறார்.

எழுத்து வடிவம் இல்லாத அந்த மொழிக்கான இலக்கணம் மற்றும் அகராதியையும் அவர் உருவாக்கி இருக்கிறார். இப்போது சொல்லுங்கள், கூலிக்கை பற்றியை இந்த அறிமுகம் அவரைப்பற்றியும், அவரது ஆய்வு பற்றியும் மேலும் அறியும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது அல்லவா!

இனி அவரைப்பற்றி கூகுளில் தேடிப்பாருங்கள், ஆனால் அவரை கூகுளில் நேர் தேடலில் உங்களால் கண்டறிந்திருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், கூகுள் தரும் பட்டியலில் உங்களால் கூலிக் போன்வர்களை அறிய முடியாது. அதற்கு என பிரத்யேகமாக உள்ள தளங்களை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும்.

இப்படி தான் கூலிக்கை கண்டடைந்தேன். டைரக்டரி தேடலில் இருந்து தான் இது துவங்கியது. ஆனால், இந்த தேடலும் கூகுள் மூலம் நிகழந்தது தானே என நீங்கள் கேட்கலாம். உண்மை தான் என்றாலும், கூகுள் என்றில்லை டக்டக்கோ உள்ளிட்ட வேறு எந்த தளத்திலும் இந்த பொதுவான தேடலை மேற்கொள்ளலாம் என்பது மட்டும் அல்ல: தேடும் போது நீங்கள் எத்தகைய கண்டறிதலில் ஈடுபடுகிறீர்கள் என்பதே முக்கியம். ஆக, கூகுள் வெறும் கருவி தான். அதை கொண்டு நீங்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளும், சீர் தூக்கி பார்த்தலும் தான் பிரதானம்.

இந்த எளிய உண்மையை அறிய முதலில், கூகுளில் எல்லாவற்றையும் தேடலாம் எனும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

புதிய இணையதளங்களை கண்டறிய இணைய மலர் மின்மடலை பின் தொடருங்கள்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *