கூகுளும், தமிழக தேர்தலும்- சில கேள்விகள்!

artதமிழக தேர்தல் தொடர்பான உரையாடல்கள் பெரும்பாலும், சமூக ஊடகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சமூக ஊடகத்தில் பகிரப்படும் மீம்களும், குறும்பதிவுகளும், பதிவுகளுமே இதற்கான கருப்பொருளாக அமைகின்றன. இந்த பின்னணியில், கட்சிகளில் ஐடி குழுக்களும், வாக்குகளை குறி வைக்கும் நோக்கத்தோடு களமாடிக்கொண்டிருக்கின்றன.

எனினும், தேர்தல் களம் தொடர்பான நிதர்சனத்தை உணர்த்த சமூக ஊடகங்கள் சரியான தளமாக இருக்குமா என்பது தெரியவில்லை. அதைவிட முக்கியமான விஷயம்,பெரும்பலானோர் தேர்தல் சார்ந்த உரையாடலில் சமூக ஊடகங்களை கவனிக்கும் அளவுக்கு தேடியந்திரமான கூகுளை கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது.

இந்த தேர்தலில் கூகுளின்பங்கு என்ன? நிச்சயமாக நேரடியாக எந்த பங்கும் இல்லை. கூகுள், தமிழக தேர்தலுக்காக இன்னும் ஒரு டூடுலை கூட வெளியிடவில்லை.

ஆனால், தேர்தல் செயல்பாடு தொடர்பாக மக்கள் மனதில் தாக்கம் செலுத்தும் வகையில் கூகுள் தேடல் அமைகிறதா? எனும் கேள்வியை ஏன் யாருமே கேட்டுக்கொள்வதில்லை.

இதை இரண்டுவிதமாக பார்க்கலாம். பிரதான தேடியந்திரம் எனும் முறையில், தமிழக தேர்தல் தொடர்பாக கூகுளில் முன்னிறுத்தப்படும் செய்திகளும், தகவல்களும் எத்தகையவை? யாருக்கு சாதகமானவை? இதையே வேறுவிதமாக கேட்பதாயின் கூகுளில் தேடப்படும் தேர்தல் தகவல்களை கொண்டு, தேர்தல் போக்கை கணிக்க முடியுமா? அதைவிட முக்கியமாக, கூகுள் தேடலில் முன்னிறுத்தப்படும் தகவல்கள், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தொடர்பான மனநிலையில் தாக்கம் செலுத்துமா?

இந்த கேள்விகளின் பின்னணியில், தமிழக தேர்தலுக்கு தொடர்பில்லாத ஒரு விஷயம் பற்றி பார்க்கலாம்.

கொரோனா கால கலை இணையதளங்கள் தொடர்பான தகவல்களை கூகுளில் தேடிக்கொண்டிருந்த போது, மிகவும் வித்தியாசமான ஒரு இணையதளம் கண்ணில் பட்டது. தனியார் மருத்துவமனை ஒன்றின் இணையதளம் அது.

கொரோனா கலை இணையதளங்கள் (covid art websites) எனும் தேடலுக்கான முடிவுகள் பட்டியலில் இரண்டாம் பக்கத்திலேயே அந்த மருத்துவமனையின் இணையதளத்தை பார்க்க முடிந்தது. மற்ற முடிவுகள் எல்லாமே ஏதே ஒரு விதத்தில் கொரோனா கால கலை தொடர்பானவையாக இருக்கும் போது, இந்த முடிவு மட்டும் சற்றும் பொருத்தம் இல்லாமல் அமைந்திருந்ததை பார்க்கும் போது, கூகுளின் தேடல் லட்சனம் இது தானா எனும் எண்ணம் தோன்றியது.

அந்த முடிவுக்கான தலைப்பில், கோவிட்டிற்கு சென்னையில் சிறந்த மருத்துவமனை எனும் வாசகமும் இருக்கிறது. இதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், கோவிட் கலை தளங்களுக்கான பட்டியலில், மருத்துவமனை தொடர்பான முடிவை எதிர்கொள்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

மருத்துவமனை தளத்தின் பக்கத்தில், கோவிட், ஆர்ட் ( நவீன தொழில்நுட்பத்தை குறிக்கும் ஆங்கில பதம்) மற்றும் சைட் ( தளம்) எனும் வார்த்தைகளை மட்டும் கொண்டு, கூகுள் இந்த மருத்துவமனையை பட்டியலில் சேர்த்து முன் வைக்கிறது.

பொருத்தமில்லா இந்த சுட்டிக்காட்டல் கூகுளின் தேடல் தரம் பற்றி கேள்வி எழுப்ப வைக்கிறது. இது சாதாரண விஷயம் என்று கடந்து போக முடியவில்லை.

கோவிட் கால கலை இணையதளங்களை தேடும் போது, அத்தகைய தளங்கள் தானே முதன்மை படுத்தப்பட வேண்டும். இந்த பட்டியலில் 2 ம் பக்கத்திலேயே ஒரு தனியார் மருத்துவமனை தளம் வருவதும், அதன் அறிமுக வாசகம் சென்னையின் கோவிட் சிகிச்சைக்கு சிறந்த இடம் என குறிப்பிடப்பட்டிருப்பதும் முக்கியமானது அல்லவா?

மருத்துவமனை சார்பில் தளத்தை உருவாக்கியவர், கூகுள் தேடலில் முதன்மை பெறுவதற்கான எஸ்.இ.ஒ உத்தியை நன்கு கையாண்டிருப்பதால் இவ்வாறு நிகழ்ந்திருப்பதாக புரிந்து கொள்ளலாம்.

ஆக, எஸ்.இ.ஒ உத்தி தெரிந்தால் கூகுளில் முதன்மை பெறலாம். இது தெரிந்த விஷயம் தான். ஆனால், இப்போது தமிழக தேர்தலை இணைந்து யோசித்துப்பாருங்கள். குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமான தகவல்களை கொண்ட ஒரு இணையதளத்தை இவ்வாறு கூகுளில் முதன்மை பெற வைக்க முடியும் தானே. அப்படி செய முடிந்தால் அது மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தும் தானே? இப்போது கூகுளில் இவ்வாறு நிகழவில்லை என நம்மால் உறுதியாக கூற முடியுமா? இதை அறியாமல் இருப்பது சரியா?

பொதுவாக பார்தால், இப்படி கூகுளில் முன்னிலை பெறும் வகையில் தளத்தை அமைப்பதில் கூட தவறில்லை தான். ஆனால், கூகுள் முடிவுகளை தூய்மையானதாக நம்பி, கண்களை மூடிக்கொண்டு அதன் முடிவுகளை கேள்வியோ, சிந்தனையோ இல்லாமல் ஏற்பது சரி தானா?

யோசியுங்கள்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *