கூகுளை நம்பாதே வரிசை – எழுத்துக்களை தேடுவதற்கான தேடியந்திரம்

Screenshot_2021-03-24 List of Abbreviations and Full Forms Index A - Page #1இந்த பதிவை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் இருந்து துவக்குவது பொருத்தமாக இருக்கும். காரணம் அவர் இயக்கி வெளியான ‘கோ’ திரைப்படம்.

கோ’ திரைப்படம் வெளியான காலத்தில், படத்தின் தலைப்புக்கு என்ன அர்த்தம் என்பது தொடர்பாக விவாதம் உணடானது நினைவிருக்கலாம். பொருத்துமில்லாமல் தலைப்பு வைத்திருப்பதாக சிலர் கருதியதற்கு மாறாக, கோ என்றால் அரசன் எனும் அர்த்தம் தமிழில் உண்டு என்பது தெளிவானது.

இதே போல, ஒற்றைச்சொல்லில் பொருள் கொள்ளக்கூடிய எழுத்துகளின் தமிழின் தனிச்சிறப்பாக கருதலாம். இது பற்றி தமிழ் ஆர்வலர்களிடம் தான் விரிவாக கேட்க வேண்டும்.

இப்போதைய கேள்வி என்னவென்றால், ‘அ’ என்றால் ஏதேனும் பொருள் இருக்கிறதா? என்பது தான்.

இதையே கொஞ்சம் மாற்றி ஆங்கிலத்தில் “A “ எனும் எழுத்திற்கு என்ன பொருள் என்று கேட்டால் எப்படி இருக்கும். இந்த கேள்விக்கான பதிலை கூகுளில் தேடினால் எப்படி இருக்கும்? அதாவது A என்றால் என்ன என தேடக்கூடாது. மாறாக, A எனும் எழுத்தை மட்டும் கூகுளில் சமர்பித்து தேடினால் என்ன முடிவுகள் கிடைக்கும்?

A எனும் எழுத்தில் தேட என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். கூகுளில் தேடினாலும், இந்த எழுத்துக்கான அகராதி அர்த்தம் மற்றும் விக்கிபீடியா விளக்கம் உள்ளிட்ட தேடல் முடிவுகளே பட்டியலிடப்படுகின்றன.

ஆம், அதற்கென்ன என கேட்பதாக இருந்தால், முழு வடிவங்கள் எனும் பொருளில் அமைந்துள்ள ‘ஃபுல்பார்ம்ஸ் (A ) இணையதளத்தில் தேடிப்பாருங்கள், A எனும் எழுத்திற்கு இத்தனை விதமான பொருள் உண்டா என வியந்து போவீர்கள்.

A என்பது மின்சாரத்தை அளவிடுவதற்கான ஆம்பியரை (Ampere  ) குறிக்கும் என்பதில் துவங்கி, இரத்த வகையை குறிக்கும், மருத்துவத்தில் அடினைனை குறிக்கும், வைட்டமின் வகையை குறிக்கும், ஆர்கன் வாயுவை என வரிசையாக இந்த எழுத்து எதற்கெல்லாம் சுருக்கெழுத்தாக அல்லது முதலெழுத்தாக பயன்படுகிறது எனும் விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதே போல ஆங்கில எழுத்தான B பற்றி தேடினால், பிட்டை (bit ) குறிக்கும், பைட்டை (Byte ) குறிக்கும், அழுத்தமான எழுத்தை (bold) குறிக்கும் , பில்லியனை குறிக்கும், என்றெல்லாம் விளக்கம் அளிக்கிறது. கூகுளில் b என தேடினால் இதெல்லாம் வருவதில்லை.

ஃபுல்பார்ம்ஸ் தளத்தில் முகப்பு பக்கத்தில் உள்ள ஆங்கில அகர வரிசை எழுத்துகளில் எந்த எழுத்தை கிளிக் செய்து தேடினாலும், அந்த எழுத்து எத்தைகைய பொருள் மற்றும் பயன்பாட்டை கொண்டுள்ளது என்பதற்கான விளக்கம் வருகிறது.

எழுத்துக்கான ஒவ்வொரு பயன்பாடு தொடர்பான விளக்கம் தவிர, அதன் வகை, சுருக்கமான வரையறை மற்றும் உலக அளவிலான பயன்பாடு விவரம் ஆகிய தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதே விதமாக, அப்ரிவேஷன் எனப்படும் சுருக்க எழுத்துக்களுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இந்த தளம் சுருக்க எழுத்து மற்றும் முதலெழுத்துக்களுக்கான விளக்கத்தை அறிவதற்கான தளம் தான். அருமையான இந்த தளத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சுருக்கெழுத்து அல்லது முதலெழுத்து தொடர்பான விளக்கத்தை தேட விரும்பினால், கூகுளில் தேடுவதற்கு பதில் நேரடியாக இந்த தளத்தில் தேடுங்கள்.

ஏனெனில், கூகுள் எல்லாம் வல்ல தேடியந்திரமாக கொண்டாடப்பட்டாலும், அடிப்படையில் கூகுள் ஒரு பொது தேடியந்திரம் தான். குறிப்பிட்ட நோக்கிலான தகவல்கள் தேவை எனில் கூகுளில் தேடுவதை விட, பிரத்யேக தேடியந்திரங்களை நாடுவது தான் சரியானது. அந்த வகையில், ஃபுல்பார்ம்ஸ் தளத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.

இணையத்தில் சுருக்கெழுத்துகளை தேட வேறு சில இணையதளங்களும் இருக்கின்றன. ஆனால், இந்த தளங்களில் காணக்கூடிய விளக்க வேறுபாடு அல்லது குழப்பத்தன்மைக்கு இடமில்லாமல், சுருக்கெழுத்துகளுக்கான சீரான விளக்கத்தை அளிப்பதாக ஃபுல்பார்ம்ஸ் தெரிவிக்கிறது. இதற்கென தனி ஆசிரியர் குழு பணியாற்றி விளக்கங்களுக்கான தர நிர்ணயத்தை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *