ஒரு சிறந்த பிழை செய்தியை எழுதுவது எப்படி?

p0998n3gசாருவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் சாருவை மேற்கோள் காட்டி அவர் வலைப்பதிவை படிக்க வைப்பது நல்லது தான். இப்போது சாரு, சிறுகதை பயிற்சி பட்டறை நடத்துவதாக அறிவித்திருக்கிறார். ஜூம் காணொலி வழியாக அவர் ஆற்றி வரும் இலக்கிய பேரூரைகள் வரிசையின் நீட்சியாக இந்த பயிற்சி பட்டறை அமைகிறது.

சிறுகதை எழுதுவது எப்படி என இந்த பயிற்சியில் சொல்லித்தர இருப்பதாக சாரு தெரிவித்திருக்கிறார். சாருவை போன்றவர்கள் இத்தகைய பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என விரும்புகிறவன் நான்.

நிற்க, சிறுகதை எழுதுவதற்கு பயிற்சி அவசியம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இதே அளவு, உழைப்பும், சிந்தனையும், தேர்ச்சியும், அனுபவமும் தொழில்நுட்ப விஷயங்களிலும் தேவை என்பதை எப்பேதேனும் உணந்திருக்கிறீர்களா?

இணையத்தில் நாம் மிக சாதாரணமாக நினைக்கும் விஷயங்களுக்கு பின்னே இருக்கும் அழகியல் தத்துவமும், வடிவமைப்பு கோட்பாடுகளும் வியக்க வைப்பதாக இருக்கின்றன. பயனர் நலன் எனும் கொள்கையை வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது இவற்றை விட முக்கியமாக அமைகிறது. சாதாரண விஷயம் என இங்கே குறிப்பிடுவது இணைய பட்டன்களை தான். இவற்றை நாம் கவனிக்காத விஷயம் என்றும் கூட சொல்லலாம். (வடிவமைப்பாளர்கள் மன்னிக்கட்டும்!)

கூகுளில் கிளிக் செய்து தேடுவது,அமேசான் அல்லது பிளிப்கார்ட் தளத்தில், ஆர்டர் செய்த பொருளுக்கு பணம் செலுத்த கிளிக் செய்வது போன்றவற்றுக்கு எல்லாம் வழிகாட்டுவது இணைய பட்டன்கள் தான்.

இந்த பட்டன்கள் பற்றி தனியே எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த வரிசையில் இப்போது பிழை செய்திகள் எழுதும் கலையை பார்க்கலாம். உண்மையில், க.நா.சு போன்றவர்கள் இன்றிருந்தால், பிழை செய்தி கலைஞர்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதி தள்ளியிருப்பார்கள். சுந்தர ராமசாமியின் ஜேஜே கூட நவீன காலத்தில் வாழ்ந்திருந்தால், தமிழர்கள் இணைய கலை நுட்பங்களை அறிந்திருக்கவில்லை என குறை பட்டுக்கொண்டிருப்பார். புதுமைபித்தன் நம் இணையதள வடிவமைப்புகளை பகடி செய்து ஒரு சிறுகதை எழுதியிருப்பார்.

இலக்கிய மேதைகளை எல்லாம் இப்படி துணைக்கு அழைக்க காரணம், பிழை செய்திகளை எழுதுவதில் ஒளிந்திருக்கும் நுட்பங்களை சுட்டிக்காட்டுவதற்காக தான். சொல்லப்போனால், ஒரு சிறுகதை எழுதுவது போன்றதே பிழை செய்திகளை எழுதுவதும். ( தடாலடி தான், இருக்கட்டும்!)

பிழை செய்திகள் என்றால், இணையத்தில் உலாவும் போது, தேடிச்சென்ற இணைய பக்கம் இல்லாத நிலையில் அல்லது குறிப்பிட்ட இணைப்பு வேலை செய்யாமல் இணைய முட்டுச்சந்தை எதிர்கொள்ளும் போது, திரையில் தோன்றும் வாசகமாகும்.

’மன்னிக்கவும் நீங்கள் தேடி வந்த இணைய பக்கம் இல்லை’ என தெரிவிப்பதன் இதன் நோக்கம். இந்த பிழை செய்திகள் அலுப்பூட்டாமல், இயன்ற வரை சுவாரஸ்யமானதாகவும், புதுமையானதாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவது தொடர்பான இணைய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். எப்படி எல்லாம் ஈடுப்பாட்டுடன் யோசிக்கிறார்கள் என்றும் நினைத்திருக்கிறேன்.

ஆனால், பிபிசி தளத்தில் பயனுள்ள பிழை செய்திகளை எழுதுவது எப்படி? எனும் கட்டுரையை படித்த போது அசந்துவிட்டேன்.

புனிதமாக கருதப்படும் பயனர் அனுபவம் (User experience (UX) ) கோட்பாடு அடிப்படையில், பிழை செய்திகளை எழுதுவதற்கான வழிகாட்டியாக அமைந்துள்ள இந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு விஷயமும், இணைய பயன்பாட்டிற்கான கண் திறப்பு தான்.

பிழை செய்திகள் (Error messages) நிறைய விஷயங்களை செய்தாக வேண்டும் எனும் எளிய வாசகத்துடன் துவங்குகிறது கட்டுரை. ஆனால், இதற்கான விரிவான விளக்கம் உண்மையில் சொக்கிப்போக வைக்கிறது. பயனர் அனுபவத்தில் பல்வேறு அமசங்களான, தகவல், கட்டளை, இடைமுகம் மற்றும் நுண் விவரிப்பு ஆகிய அனைத்து அம்சங்களையும் பிழை செய்திகள் நிறைவேற்றியாக வேண்டும். இதையும் சொற்ப வார்த்தைகளில் சொல்லியாக வேண்டும்.

ஏதேனும் தவறு நிகழும் போது பயனர்களுக்கு வழிகாட்டுவது எனும் பொது இலக்கிற்கான தேடலில் இவை எல்லாம் இணைந்திருக்க வேண்டும்.

முதல் வரியை தொடர்ந்து வரும் இந்த வரிகள், பேசப்படும் விஷயம் எத்தனை நுணுக்கமானது என்பதை உணர்த்துகிறது.

இப்படி சொல்வது கூட மிகை எளிமையாக்கல் தான் என குறிப்பிட்டு, பிழை செய்தியை எழுதும் போது, உங்கள் இணையதளத்தின் அமைப்பு, ஒட்டுமொத்த பயனர் அனுபவம், பிராண்டின் குரல் ஆகிய அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும் என்கிறது கட்டுரை.

இதன் பிறகு தான், பிழை செய்திகளை எப்படி எழுதுவது என கட்டுரை வழிகாட்டுகிறது.

ஆனால், இந்த கட்டத்தில் எதையும் எழுத துவங்காதீர்கள், முதலில் புரிந்து கொள்ளுங்கள் என்கிறது.

இணையதள செயல்பாட்டில் ஒரு குறிப்பிட்ட அம்சம் அல்லது சேவை பழுதானால், அதற்கு விளக்கம் அளிப்பதற்காக எழுதப்படும் சாதாரண பிழை வாசகத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டாமா என்று கூட நினைக்கலாம்.

ஆனால் அடுத்து வரும் வரிகளில் வெளிப்படும் பொறுப்புணர்வு நம் தலையில் குட்டுகிறது.

புதிய இணையதளங்களை உருவாக்கும் போது, நிறைய பிழை செய்திகளை எழுத வேண்டியிருக்கலாம் என்பதால் நிதானமாக யோசிக்க வேண்டும் என்பதோடு, இதில் தொடர்பு கொண்டுள்ள வடிவமைப்பாளர்கள், டெவலப்பர்கள், பிராண்ட் உருவாக்குனர்கள் மற்றும் முக்கியமாக பயனர்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறது கட்டுரை.

ஆகவே, பிழை செய்திகளை எழுதாமல், உருவாக்குங்கள் என்கிறது. அதாவது குழுவினருடன் இணைந்து பிழை செய்திகளை உருவாக்க வேண்டும்.

இதற்கு முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், எதற்காக எல்லாம் பிழை செய்திகளை இடம்பெற வைக்க வேண்டி வரும் என யோசிப்பது. இணைய பக்கங்கள் காணாமல் போகலாம், பயனர்கள் தவறான விவரங்களை சமர்பிக்கலாம் …இப்படி பல தவறுகள் நிகழலாம். இவற்றை எல்லாம் தொகுத்து வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக, இந்த தவறுகள் பயனர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய அதிருப்தி அளவை கணக்கிட வேண்டும்.

வெறுத்துப்போவது, அதிருப்தி கொள்வது மற்றும் ஆவேசம் அடைவது என மூன்று நிலைகளில் இது அமையலாம் என்பதை புரிந்து கொண்ட பிறகு,, இனி பிழை செய்திகளை வடிவமைக்கத்துவங்கலாம்.

இப்போது மூன்று முக்கிய கேள்விகள் இருக்கின்றன.

யாரால் பிழை ஏற்பட்டது?

பிழை உண்டான காரணம் தெரியுமா?

பிழைக்கான தீர்வு தெரியுமா?

இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையில் தான் பிழை செய்தி எழுதப்பட வேண்டுமாம்!.

பிழை உண்டாக காரணம், பயனர் எனில், பிழை செய்தியில் மன்னிப்பு கேட்க வேண்டாம். விளக்கம் மட்டும் இருந்தால் போதும். பிழை ஏற்பட நிறுவனம் காரணம் எனில் பயனருக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும்.

அதே போல, பிழைக்கான காரணம் தெரிந்தால் அதற்கான விளக்கம் அளிக்க வேண்டும். காரணம் தெரியாவிட்டால், பிரச்சனை சரி செய்யப்படும் எனும் உறுதி அளிக்க வேண்டும்.

மூன்றாவதாக, பிழையை சரி செய்ய முடியும் எனில், அதற்காக பிழை செய்தி வழிகாட்ட வேண்டும். இல்லை எனில், மீண்டும் முயற்சிக்க பொருத்தமான யோசனையை அளிக்க வேண்டும்.

பிழை செய்திகளுக்கான அமைப்பு பிடிப்பட்டு விட்டதால் இனி செய்தியை எழுத துவங்கலாம்.

இங்கும் நுட்பமான விவரங்கள் இருக்கின்றன என்கிறது கட்டுரை.

பிழை வாசகங்கள், எளிமையாக நேரடி பொருள் தரும் வகையில், கூடுதலாக ஒற்றை வார்த்தை கூட இல்லாமல் இருக்க வேண்டுமாம்.

உதாரணமாக இணைய இணைப்பை கண்டறிய முடியவில்லை என சுற்று வளைத்து எழுதாதீர்கள். இணைப்பு பெற முடியவில்லை என சுருக்கமாக சொல்லுங்கள் என வலியுறுத்தப்படுகிறது.

அதோடு பிழை செய்தியில் உங்கள் குரல் வெளிப்பட வேண்டும் என்கிறது கட்டுரை. உதாரணமாக பயனர் உண்டாக்கிய பிழை என்றால், ( இமெயில் முகவரியை தவறாக சமர்பிப்பது), வழிகாட்டல் நட்பாகவும், சற்று நகைச்சுவையாகவும் இருக்க வேண்டுமாம்.

ஐயோ, உங்கள் கணக்கு மூடப்பட்டு விட்டது, என்று எழுதுவதற்கு பதில் உங்கள் கணக்கை மீட்டெடுக்க வேண்டும் என நேரடியாக குறிப்பிட வேண்டுமாம்.

பாஸ்வேர்டுக்கான கட்டளை, உங்கள் பாஸ்வேர்டு குறைந்தது எட்டு எழுத்துகள் கொண்டதாக, குறைந்தது ஒரு எண் கொண்டதாக, ஒரு அடைப்புக்குறி கொண்டதாக இருக்க வேண்டும் என்பது போல மூச்சுவிடாமல் பேசுவதாக இல்லாமல், உங்கள் பாஸ்வேர்டுக்கு … குறைந்தது எட்டு எழுத்துகள், ஒரு எண், ஒரு அடைப்புக்குறி தேவை என தனித்தனியே தெளிவாக குறிப்பிட வேண்டுமாம்.

எத்தனை நுணுக்கமாக இருக்கிறது பாருங்கள்,

கட்டுரையின் இறுதியில், நல்ல எழுத்திற்கான குறிக்கோள்கள் எனும் தலைப்பில், எளிமையான மொழியை பயன்படுத்துங்கள், வாக்கியங்களை சின்ன சின்ன வரிகளாக உடையுங்கள், தேவையில்லா வார்த்தைகளை கத்திரியுங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுகதைகளையும், சிறுகதைகளுக்கான உத்திகளையும் படித்து ரசித்தவன் என்ற முறையில் இந்த கட்டுரையை வெகுவாக ரசித்து மகிழ்ந்தேன். எழுதிய ஜேம்ஸ் கிளிவருக்கு பிரத்யேக பாராட்டுகள். இது போன்ற பயனர் இடைமுக அனுபவம் சார்ந்த கட்டுரைகளுக்காக என்றே பிபிசி தளத்தில் தனிப்பகுதி இருக்கிறது. https://www.bbc.co.uk/gel

கட்டுரை இணைப்பு: https://www.bbc.co.uk/gel/guidelines/how-to-write-useful-error-messages

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *