உங்களை ஏமாற்றும் இணையதளம் – துணை போகும் கூகுள்

Screenshot_2021-04-14 Ask-A-Librarian – Real People Real Helpகூகுள் மீதான எனது அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது தனிப்பட்ட அதிருப்தி இல்லை என்பதால், எல்லோரும் இதை உணர வேண்டும் என விரும்புகிறேன்.

இதற்கு உதாரணம் தேவை எனில், ’ஆஸ்க் ஏ லைப்ரரியன்’ இணையதளம் என ஆங்கிலத்தில் கூகுளில் தேடிப்பாருங்கள்.

இந்த தேடலுக்கு பட்டியலிடப்படும் முடிவில், ’ஆஸ்க் ஏ லைப்ரரியன்.இன் எனும் இணையதளத்தை கிளிக் செய்து பாருங்கள். அநேகமாக ஒரு சில நிமிடங்களில் அல்லது தளத்தில் நுழைந்ததுமே வெறுத்துபோய் வெளியேறிவிடுவீர்கள். ஏனெனில், இந்த தளம் மோசமான வடிவமைப்பையும், அதைவிட மோசமான உள்ளடக்கத்தையும் கொண்டிருப்பதால், பயனில்லா தளம் என்பது உடனே புரிந்திருக்கும்.

நானும் இந்த தளத்தை பார்த்து வெறுத்துப்போனேன். இது நமக்கான தளம் அல்ல என உணர்த்தும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. இவற்றை எல்லாம் மறுமுறை பார்க்க நினைக்காமல் மறந்துவிடுவதே நல்லது.

எனினும், இந்த இணையதளத்தை பயனில்லா தளம் என எளிதாக கடந்து சென்று விடாமல், நின்று நிதானமாக கடுமையாக விமர்சிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இந்த தளம் விமர்சனத்தை நாடுவதற்கான முதல் காரணம், இதன் நோக்கத்திற்கு நியாயமாக இல்லாதது தான். இந்த தளத்தின் பெயர் உணர்த்தும் செய்தி என்ன? ’நூலகரிடம் கேளுங்கள்’ என ஊக்குவிக்கும் வகையில் தளத்தின் முகவரி அமைந்துள்ளது.

எனில் இந்த தளத்தில் உள்ளே நுழந்ததுமே நீங்கள் எதிர்பார்க்க கூடிய அம்சம், நூலகரிடம் கேட்பதாக தானே இருக்க வேண்டும். ஆனால், ஏமாற்றம் தரும் வகையில் தளத்தின் முகப்பு பக்கத்தில் அதற்கான அடையாளம் கூட இல்லை.

பயனாளிகளை பகடி செய்வது போல், ஒரு நூலகரிடம் கேளுங்கள் (Ask-A-Librarian ) எனும் வாசகத்திற்கு கீழே, உண்மையான மனிதர்கள், உண்மையான உதவி எனும் துணை வாசகமுமே இடம் பெற்றிருக்கிறதேத்தவிர, எந்த நூலகரிடம், எப்படி கேட்பது என்பதற்கான வழிமுறை இல்லை.

சரி, இந்த தளத்தில் வேறு என்ன இருக்கிறது என்று பார்த்தால், இரண்டாம் முறை பெரிதாக இடம் பெறும் ஒரு நூலகரிடம் கேளுங்கள் எனும் வாசகத்தின் கீழ், உங்கள் நூலகத்தை ஓபன் சோர்ஸ் நுட்பங்கள் மூலம் நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான சுட்டியை கிளிக் செய்து உள்ளே சென்றால், நூலக நிர்வாகத்திற்கான ஓபன் சோர்ஸ் கருவிகளையும், வழிகாட்டுதல்களையும் எதிர்பார்த்தால் அதுவும் பொய்த்துப்போகிறது. கோஹா, டி-ஸ்பேஸ் மற்றும் வேர்டுஸ்பேஸ் ஆகிய மூன்று மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளனவேத்தவிர பெரிதாக வேறு தகவல்கள் இல்லை.

இந்த மென்பொருள்கள் தொடர்பான மேலதிக தகவல் தரும் சுட்டியும், யூடியூப் வீடியோவுக்கான இணைப்பை மட்டுமே கொண்டுள்ளது.

இதேபோலவே, ஆசிரியர்கள் மற்றும் நூலகர்களுக்கு என்று அமைகப்பட்டுள்ள தனி பகுதிகளும் தகவல் இன்மையால் பள்ளித்து வெறுப்பேற்றுகிறது.

இந்த தளத்திற்கான அறிமுக பக்கத்தில், பிரதீப் எனும் நூலகர் இந்த தளத்தை அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு, இன்னும் பலரின் உதவியோடு தகவல்கள் இடம்பெறச்செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தளத்தின் அதற்கான செயலாக்கத்தை தான் பார்க்க முடியவில்லை.

இப்படி ஒரு இணையதளத்தை எதற்காக அமைக்க வேண்டும்?

நூலகரிடம் கேளுங்கள் என பொருள் கொண்ட தளத்தில் அதற்கான வசதி இல்லாமல் இருப்பதோடு, நூலக மென்பொருள்கள் தொடர்பான தகவல்களையும் அளிக்காமல் இருக்கும் இந்த தளம், அதற்கான பாசாங்கை மட்டும் கொண்டுள்ளது.

தேடி வரும் பயனாளிகளை ஏமாற்றும் செயல் அல்லவா இது?

மேலும், நூலகங்களுக்கான ஓபன் சோர்ஸ் மென்பொருள் எனும் தலைப்பில், மிக எளிதாக பயனுள்ள தகவல்களை அழகாக பட்டியலிட்டு வழிகாட்டலாம். அதிலும், தேர்ச்சியும் திறனும் மிக்க நூலகர் இதை மிக எளிதாக செய்யலாம்.

ஆனால், இந்த தளமே இந்த இரண்டையுமே செய்யாமல், குப்பை என சொல்லக்கூடிய தகவல்களோடு ஏமாற்றம் அளித்துக்கொண்டிருக்கிறது. இதைவிட, வெறும் பெயராலும், கீவேர்டுகளாலும் இணையவாசிகளை கவர்ந்து விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள வணிக நோக்கிலான மேம்பாக்கு இணையதளங்களை கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் பொறுப்பின்மையின் அடையாளமாக விளங்கும் இந்த தளம் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

இந்த இணையதளம், இணைய உருவாக்குனர்களுக்கு இரண்டு முக்கிய விஷயங்களை உணர்த்துகிறது. தலைப்பு அல்லது நோக்கத்திற்கு பொருத்தமான உள்ளடக்கத்தை தளம் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒன்று. அப்படி இல்லாத தளங்கள், தேடி வரும் இணையவாசிகளை ஏமாற்றும் செயலாக அமையும்.

ஒரு இணையதளத்தின் மைய நோக்கத்திற்கு ஏற்ப அதன் உள்ளடக்கத்தை உருவாக்கி, வடிவமைப்பதில் குறைந்தபட்ச கவனமேனும் தேவை என்பது இரண்டாவது விஷயம்.

நிற்க, இந்த அரைவேக்காட்டுத்தனமான தளத்தை விடுங்கள், இந்த தளத்தை முதல் பக்கத்தில் பட்டியலிடும் கூகுளை என்னவென சொல்வது. எதன் அடிப்படையில் சற்றும் பயனில்லாத இந்த தளத்தை கூகுள் தேடல் பட்டியலில் முதல் பக்கத்தில் அளிக்கிறது?

தளங்களை பரிசீலிக்கவும் பட்டியலிடவும் நூற்றுக்கணக்கான காரணிகளையும், அளவுகோள்களையும் வைத்திருக்கும் கூகுள் இது போன்ற வெற்று இணையதளங்களை தனது பட்டியலின் முன்னிலையில் இருந்து நீக்காமல் இருப்பது ஏன்?

இந்த தளங்களை முன்னிறுத்துவதன் மூலம் கூகுள் இணையவாசிகளை ஏமாற்றவில்லையா?

இணையதள முகவரி: http://www.askalibrarian.in/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *