இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் தகவல்களையும், உதவிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இணையதளங்களில், கோவிட்ரிலிப் (https://covidrelief.glideapp.io/ ) ஒன்றாக விளங்குகிறது.
தோற்றத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி மிக மிக எளிமையாக இருக்கும் இந்த தளம், அதன் நோக்கத்தை சரியாகவே நிறைவேற்றுகிறது.
இந்த முகப்பு பக்கத்தில், உதவி, மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன், பிளாஸ்மா கோரிக்கை மற்றும் உணவு உதவி ஆகிய தலைப்புகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தலைப்புகளை கிளிக் செய்தால் மேலதிக தகவல்களை அணுகலாம். உதவி எனும் தலைப்பை கிளிக் செய்தால் கொரோனா உதவி தொடர்பான டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை காணலாம்.
மருத்துவமனை படுக்கைகள் பகுதியை கிளிக் செய்தால், அகமதாபாத், அல்மோரா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவமனை இடங்களை தெரிந்து கொள்ளலாம். ஆக்சிஜன் உதவி தலைப்பின் கீழ், சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆக்சிஜன் கிடைக்குமிடங்களை அறிந்து கொள்ளலாம்.
இதே போலவே பிளாஸ்மா உதவி மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிப்பவர்களையும் இந்த தளம் மூலம் அணுகலாம்.
மூன்று ஐஐடி பட்டதாரிகள் இணைந்து இந்த தளத்தை அமைத்துள்ளதை அறிய முடிகிறது. இதற்காக கோவ்ரிலிப் மற்றும் கோவிட் சர்வைவர் போர்ஸ் இந்தியா ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியாகவும் இது அமைந்துள்ளது.
பொதுவெளியில் இருக்கும் தகவல்கள் இந்த தளத்தில் தொகுத்தளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக மிக அடிப்படையான தளம் தான். ஆனால், தற்போதையை கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தன்னளவில் கைகொடுக்கும் இணையதளம்.
இணையதள முகவரி: https://covidrelief.glideapp.io/