கொரோனா வைரஸ் சில குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய இழப்பில் இருந்து மனதளவில் மீண்டு வருவது வலி நிரம்பியது எனும் போது, கொரோனா விதவைகள் நிலை இன்னும் சோகமானது. கொரோனாவால் கணவரை இழந்த பெண்கள், இழப்பின் வேதனையோடு, பொருளாதார நோக்கில் வாழ்க்கையின் சவாலையும் எதிர்கொண்டாக வேண்டும்.
இத்தகைய இரட்டை சோகத்திற்கு உள்ளான கொரோனா விதவைகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது ’கோவிட் விட்டோஸ்.இன்’ இணையதளம். (https://covidwidows.in/).
கொரோனா விதவைகள் தங்கள் முன் இருக்கும் பொருளாதார சவாலை எதிர்கொள்ளும் வகையில், பொருத்தமான வேலைவாய்ப்பை பெற வழிகாட்டும் நோக்கத்துடன் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு வர்த்தக நிறுவனங்களுடம் இந்த தளம் கைகோர்த்துள்ளது. தன்னார்வலர்களையும் இணைத்துக்கொண்டுள்ளது.
கொரோனாவால் வாழ்க்கைத்துணைவரை இழந்த பெண்கள் இந்த தளத்தின் மூலம் வேலைவாய்ப்புக்கு உதவி கோரலாம். இவ்வாறு உதவி கோரும் பெண்களுக்கு, தன்னார்வலர்கள், ஆறுதலும் ஆலோசனையும் வழங்கி வழிகாட்டுவதோடு, வேலை வாய்ப்புக்கும் வழிகாட்டுவார்கள். வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கு தயாராகவும் உதவுகின்றனர். வேலைவாய்ப்புக்கு தேவையான திறன் வளர்ச்சிக்கும் கைகொடுக்கின்றனர்.
யுத்விர் மோர் (Yudhvir Mor) எனும் மென்பொருளாலர் தனது லிங்க்டுஇன் தொடர்புகளுடன் இணைந்து இந்த தளத்தை அமைத்துள்ளார். நெருங்கிய சகா ஒருவர் கொரோனாவுக்கு பலியான போது, அவரை இழந்து தவிக்கும் குடும்பம் இனி என்ன செய்யும் நினைத்து பரிதவித்த போது, கொரோனாவால் கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் உதவும் இணையதளத்தை அமைக்கும் எண்ணம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
கொரோனாவால் மிக மிச சோதனையான காலத்தில் வசிக்கிறோம். ஆனால், இது போன்ற இணைய உதவிகள், நம்பிக்கை இழக்காமக் இருக்கச்செய்கின்றன.
–