இமோஜியாக மீண்டும் வருகிறது ’கிளிப்பி’

E6Rn-0qWUAQCMoZ90 ஸ் கிட்ஸ் மட்டுமே அறிந்திருக்க கூடிய இணைய சேவையான கிளிப்பியை (Clippy ) மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பேப்பர் கிளிப் சேவை, இமோஜியாக பயன்பாட்டிற்கு வர உள்ளது.

கிளிப்பி சேவையை மீண்டும் கொண்டு வர வேண்டுமா என மைக்ரோசாப்ட் நிறுவனம் டிவிட்டர் மூலம் நடத்திய போட்டியில், பயனாளிகளிடம் இருந்து கிளிப்பிக்கு ஆதரவாக லைக்குகள் குவிந்ததால், வழக்கமான பேப்பர் கிளிப்பிற்கு பதிலாக கிளிப்பியை இமோஜியாக அறிமுகம் செய்ய இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஒரு பேப்பர் கிளிப்பிற்கு இத்தனை ஆர்பட்டமா? என வியப்பவர்கள், கிளிப்பி வரலாற்றை தெரிந்து கொண்டால், இந்த சேவையை கைத்தட்டி வரவேற்பார்கள். ஏனெனில் கிளிப்பி சாதாரண டிஜிட்டல் பேப்பர் கிளிப் மட்டும் அல்ல: இணைய உலகின் முதல் டிஜிட்டல் உதவியாளர் கிளிப்பி.

அது மட்டும் அல்ல, அந்த காலத்திலேயே ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவின் அம்சங்களை கொண்டிருந்தது என்பதும் கூடுதல் சிறப்பு.

டிஜிட்டல் உதவியாளர்

இன்று ஸ்மார்போன் யுகத்தில், கூகுள் அசிஸ்டண்ட் சேவைக்கும் ஆப்பிளின் சிரி டிஜிட்டல் உதவியாளர் சேவைக்கும் பலரும் பழகிவிட்டனர். அமேசானின் அலெக்சா சேவை கூட பெரும்பாலனோருக்கு நெருக்கமாக இருக்கிறது.

இந்த டிஜிட்டல் உதவியாளர் சேவைகள் எல்லாம் அறிமுகம் ஆவதற்கு பல ஆண்டுகள் முன்பே, 1996 ல் மைக்ரோசாப்ட் தனது ஆபிஸ் மென்பொருள் தொகுப்பில் கிளிப்பிட் எனும் பெயரில் டிஜிட்டல் பேப்பர் கிளிப் வசதியை அறிமுகம் செய்தது.

புத்திசாலி கிளிப்

வளைந்து நெளிந்த பேப்பர் கிளிப் உடலில் மனித கண்களோடு, அழகான கார்ட்டூன் தோற்றம் போல அறிமுகமான கிளிப்பிட், பின்னர் கிளிப்பி என அழைக்கப்பட்டது.

கிளிப்பி வெறும் பேப்பர் கிளிப்பாக மட்டும் இருக்கவில்லை. ஒருவிதத்தில் அது புத்திசாலி பேப்பர் கிளிப்பாக இருந்தது. அதாவது பயனாளிகள், வேர்டு கோப்பில் டைப் செய்த்துவங்கும் போதே, கிளிப்பி பேப்பர் கிளிப் தானாக தோன்றி, அவர்கள் டைப் செய்யும் வார்த்தைகளுக்கு ஏற்ப பரிந்துரைகளை மேற்கொள்ளும்.

கிளிப்பியை திரையில் இருந்து தள்ளிவிடலாம் என்றாலும், மீண்டும் அது எட்டிப்பார்த்து, வேறு ஒரு பரிந்துரையை சொல்லும் அல்லது தவறு இருந்தால் சுட்டிக்காட்டும்.

இணைய வெறுப்பு

கம்ப்யூட்டரில் டைப் செய்யும் போது, பயனாளிகள் டைப் செய்வதன் அடிப்படையில், அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய திறன் கொண்ட மென்பொருளாக கிளிப்பி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் உதவியை மனிதர்கள் விரும்புவார்கள் எனும் எதிர்பார்ப்பில் அதற்கு மனித தோற்றமும் அளிக்கப்பட்டது.

ஆனால், கிளிப்பியின் போதாத நேரம் அந்த காலத்தில் பலரும் அதை இடையூறாகவே பார்த்தனர். கம்ப்யூட்டர் பயன்பாட்டின் போது அழையா விருந்தாளியாக கிளிப்பி எட்டிப்பார்த்து, பரிந்துரைகள் செய்ததை பலரும் விரும்பவில்லை. இது வேண்டாத வேலை என்றே பலரும் புலம்பினர்.

இதன் விளைவாக கிளிப்பி பெரிய அளவில் வரவேற்பை பெறாமல், விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் கிளிப்பி சேவை பல மாற்றங்களுக்கு உள்ளானாலும், அதன் மீதான வெறுப்பு மாறவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல், மைக்ரோசாப்ட் இந்த சேவையை கிடப்பில் போட்டு விட்டது.

இமோஜி வடிவம்

ஆனால், இதெல்லாம் டிஜிட்டல் உதவியாளர்கள் சேவை பிரபலமாவதற்கு முன் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இப்போது கிளிப்பி அறிமுகம் ஆகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை.

இந்நிலையில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம், கிளிப்பி பேப்பர் கிளிப்பை இமோஜியாக கொண்டு வருவது பற்றி யோசித்தது. இந்த யோசனையை டிவிட்டரில் வெளியிட்டு ஆலோசனையும் கேட்டது. கிளிப்பிக்கு 20 ஆயிரம் லைக்குகள் கிடைத்தால் அது மறு அவதாரம் எடுக்கும் என தெரிவித்தது.

எதிர்பார்த்ததை விட கிளிப்பிக்கு அதிக ஆதரவு கிடைக்கவே, சாதாரண பேப்பர் கிளிப்பிற்கு பதிலாக, ஆபிஸ் மென்பொருள் மற்றும் விண்டோசில் கிளிப்பி இமோஜியாக அறிமுகம் ஆகும் என தெரிவித்துள்ளது. சும்மாயில்லை, முப்பரிமான இமோஜியாக கிளிப்பி வருகிறது.

ஆனால், இந்த கிளிப்பி டிஜிட்டல் உதவியாளர் தன்மை கொண்டதாக இருக்குமா என்பது தெரியவில்லை.

கிளிப்பி மட்டும் அல்ல, அனைத்து இமோஜிகளையும், 3டியில் மறுவடிவமைப்பு செய்து மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்கிறது. இது தவிர ஐந்து புதிய இமோஜிகளையும் கொண்டு வருகிறது. வீட்டில் இருந்தே பணியாற்றும் சூழலில் பயன்படுத்தக்கூடிய கம்ப்யூட்டர் முன் பல வேலைகள் செய்வது, பேசாமல் இருப்பது, வெப்கேமை மூடி வைப்பது ஆகிய செயல்களை குறிக்கும் புதிய இமோஜிகள் அறிமுகம் ஆக உள்ளன.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *