அசுடோஷ் கவுசிக் இணையம் தன்னை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக அவர் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இணையத்தின் மன்னிப்பை வேண்டி எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனும் கேள்வி எழுவது நியாயம் தான். அசுடோஷ் உண்மையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவரது வழக்கின் சாரம்சம் இணையம் தன்னை மறக்க வேண்டும் என்பது. இதன் மூலம் தான் மனிக்கப்பட்ட விடுவோம் என்றும் அவர் நம்புகிறார்.
இதென்ன புது கதையாக, புரியாத புதிராக இருக்கிறதே என நினைத்தால், இந்த வழக்கு தொடர்பான பின்னணியை தெரிந்து கொள்வோம். அதற்கு முன்னர் அசுடோஷை தெரிந்து கொள்வோம்.
அசுடோஷ் பலருக்கும் அறிமுகமானவர் தான். ரியாலிட்டி நட்சத்திரம் என குறிப்பிடப்படும் அசுடோஷ், 2007 ல் எம்டிவி ரோடீஸ் எனும் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பின்னர் 2009 ல் பிக்பாசிலும் வெற்றி பெற்று பிரபலமானார். அசுடோஷ் இப்போது சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
ஆனால், அசுடோஷுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அவர் மறக்க விரும்பும் சர்ச்சை முகம். ஆம், 2009 ல் அசுடோஷ் குடி போதையில் பைக் ஓட்டி கைதாகியிருக்கிறார். இந்த சம்பவத்தின் போது காவலர்களோடு சண்டையும் போட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒரு நாள் சிறையில் இருந்திருக்கிறார். அவரது ஓட்டுனர் உரிமமும் தற்காலிகமாக பறிக்கப்பட்டது.
ஆனால் இது பழைய அசுடோஷ். இப்போது அவர் புதிய மனிதனாகிவிட்டார். குடிபோதை சம்பவத்தை தனது கடந்த கால தவறு என்றும் ஒப்புக்கொள்கிறார். இதை மறக்கவும் விரும்புகிறார். பிரச்சனை என்னவென்றால், இணையம் இதை மறக்காமல் இருப்பது தான்.
ஆம், இப்போதும் இணையத்தில் அசுடோஷ் என தேடினால், அவர் குடி போதையில் சண்டையிட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் வருகின்றன. இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அசுடோஷ் கருதுகிறார்.
இந்த மன உளைச்சலில் இருந்து விடுபட, இணையம் இந்த சம்பங்களை மறக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, இந்த பழைய சம்பவம் தொடர்பான வீடியோக்களும், படங்களும் இணையத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும், இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என அவர் கோரியிருக்கிறார்.
மிகவும் நியாயமான கோரிக்கை. இணைய உலகில் இதை, மறப்பதற்கான உரிமை (right to be forgotten ) என்கின்றனர். அதாவது, குறிப்பிட்ட சூழலில், ஒருவர் தனது தனிப்பட்ட விஷயம் தொடர்பான தகவல்களை தேடியந்திரங்கள் மற்றும் இதர தரவுகள் பட்டியலில் இருந்து நீக்க கோரும் உரிமை.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இத்தகைய உரிமை சட்டப்பூர்மாக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் தரவுகள் பாதுகாப்பு சட்டம் இதற்கு இடமளிக்கிறது. அர்ஜண்டினா மற்றும் பிலிப்பைன்சிலும் இதற்கான சட்டம் இருக்கிறது. அமெரிக்காவில் இது பற்றி விவாதித்து வருகின்றனர். இந்தியாவிலும், நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் இதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இந்த பின்னணியில் தான் அசுடோஷின் கோரிக்கையை பார்க்க வேண்டும். பொழுதுபோக்குத்துறையில் அசாதரணமான வெற்றி பெற்ற நிலையிலும், பத்தாண்டுகளுக்கு முன் செய்த ஒரு தவறால் உளவியல் வலிக்கு உள்ளாகி வருவதாக, இணையத்தில் தோன்றும் தனது குடி போதை படங்கள் தொடர்பாக அசுடோஷ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அசுடோஷ் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த தவறு, பொதுவெளியில் பதிவாகி இனி வரும் பல தலைமுறைகள் பார்வையிடும் வகையில் இருப்பதாகவும், எனவே இவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
குடி போதை சம்பவத்தின் தவறை உணர்ந்து விட்டதாக கூறியுள்ள அசுடோஷ், திருமணத்திற்காக வீட்டில் பெண் பார்த்த போது, இந்த வீடியோக்களால் மிகுந்த இன்னலுக்கு உள்ளானதாகவும் ஒரு பேட்டியில் அசுடோஷ் கூறியிருக்கிறார். பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்த பிறகு, இணையத்தில் குடிபோதை வீடியோக்களை பார்த்து பின்வாங்கி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதனிடையே, அவர் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமண செலவில் மிச்சமான தொகையை கொரோனா தொடர்பான பிரதமர் நிதிக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தனது பழைய குடி போதை வீடியோக்களை நீக்க வேண்டும் என நீதிமன்றம் சென்றிருக்கிறார். மனுவை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், கூகுள் நிறுவனம் மற்றும் பிரஸ் கவுன்சில் உள்ளிட்டவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஓடிஷா நீதிமன்றத்திலும் இதே போன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவரும் இணையத்தில் உள்ள தகவலால் தனது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என அவற்றை நீக்க கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இணையம் எதையும் மறக்காது என சொல்லப்படுகிறது. இணையத்தில் சொல்லும் எதுவும், எப்போதும் நிலைத்திருக்கும் என்பதும் உண்மை தான். எனவே, இணையத்தில் எதை வெளியிட்டாலும், பகிர்ந்து கொண்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இந்த எச்சரிக்கை உணர்வு தேவை தான் என்றாலும், தனிப்பட்ட தகவல்களால் தங்களுக்கு இன்னல் ஏற்படுவதாக இணையவாசிகள் கருதினால், இணைய மறதியை கோரும் உரிமை இருப்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதிலும் காலாவதியான தகவல்கள் இணையத்தில் நினைவூட்டப்பட்டால், அதை நீக்க வேண்டும் என கோரும் உரிமை இருப்பதை உணர வேண்டும்.
இணைய நிறுவனங்கள் பயனாளிகளின் தரவுகளை வேட்டையாடி வருவாய் ஈட்டுவது வழக்கமாகவும், வர்த்தகமாகவும் இருக்கும் நிலையில் பயனாளி ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விரும்பினால் அதற்கான வழியை நாடும் வாய்ப்பும் கொடுக்கப்படுவது தானே நியாயமானது.