சமையலறையிலும் ஏ.ஐ வந்தாச்சு- டிஜிட்டல் உதவியாளர் ’குக்ஸி’

cசமைக்க கற்றுக்கொள்பவர்களுக்கு அல்லது புதிய உணவுகளை சமைத்துப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சமையல் குறிப்புகளை வழங்கும் இணையதளங்களும், செயலிகளும் அநேகம் இருக்கின்றன. ஆனால், சொன்னபடி சமைப்பதை உறுதி செய்து கொள்வது என்னவோ சமைப்பவர்கள் கைகளில் இருக்கிறது.

இதற்கு மாறாக, எப்படி சமைக்க வேண்டும் என வழிகாட்டுவதோடு, சமைக்கும் விதத்தில் ஏதேனும் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டி திருத்தி நன்றாக சமைக்க உதவும் வகையில் ஒரு டிஜிட்டல் உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்?

குக்ஸி, இத்தகைய, டிஜிட்டல் சமையல் உதவியாளராக அறிமுகம் ஆகியிருக்கிறது.

குக்ஸியை பார்த்துக்கொண்டே சமைக்கலாம் என்பதோடு, நாம் சமைப்பதை குக்ஸியும் பார்த்துக்கொண்டே வழிகாட்டும் என்பது தான் விஷேசம். இதற்கேற்ப குக்ஸி, வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கிறது.

செயலி வடிவம் தான் அதன் மென்பொருள். டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போனில் குக்ஸியை தரவிறக்கம் செய்து, அதில் உள்ள சமையல் குறிப்புகளை தேர்வு செய்து கொண்டால், அதற்கான வீடியோ விளக்கத்தை பார்த்துக்கொண்டே சமைக்கத்துவங்கலாம். குக்ஸியின் வன்பொருள் என்பது இரண்டு காமிரக்களை கொண்டது. ஒரு காமிரா உணவுப்பொருளின் வெப்பத்தை உணரக்கூடியது. இன்னொரு காமிரா உணவும்ப்பொருளின் நிறத்தை கொண்டு, அதன் தன்மையை உணரக்கூடியது. செயலியும், காமிராக்களும் புளுடூத் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆக, குக்ஸி காமிரா சாதனத்தை அடுப்பை பார்க்கும் வகையில் பொருத்திவிட்டு சமைக்க வேண்டும். வீடீயோ விளக்கத்திற்கு ஏற்ப சமைத்துக்கொண்டிருக்கும் போது, இடையே ஏதேனும் தவறு செய்தால் அல்லது எதையேனும் மறந்துவிட்டால், செயலியில் அதற்கான திருத்தமும், நினைவூட்டலும் தோன்றும்.

உதாரணத்திற்கு கடாயை சூடாகிவிட்டால், எண்ணெய் விடுமாறு வழிகாட்டுதல் வரும் அல்லது கடுகு கருகும் நிலைக்கு வரும் முன் வெப்பத்தை தணிக்க நினைவூட்டும்.

ஒருவர் பக்கத்தில் இருந்தே சமைக்க கற்றுத்தந்தால் எப்படி இருக்குமோ அது போலவே இந்த செயலி டிஜிட்டல் உதவியாளராக செயல்படும். பெரும்பாலான உணவுகளில் பதம் என்பது முக்கியம் அல்லவா? அடுப்பில் இருக்கும் உணவுப்பொருளின் நிறத்தை வைத்து, சமைக்கும் உணவிற்கு தகுந்த பதத்தையும் இந்த செயலி பரிந்துரைக்கும்.

எப்படி இந்த சமையல் ஜாலம் நிகழ்கிறது என்றால், தேர்வு செய்யும் சமையல் வீடியோவில் வரும் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, உணவின் நிலையை பார்த்துக்கொண்டிருக்கும் காமிரா கண்கள், செயலி மூலம் சமைப்பவருக்கு தகவல் சொல்லும். எல்லாம் ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு செய்யும் மாயம்.

ஆக, வீடியோவில் இருப்பது போலவே சமைக்கலாம். அதே சுவையையும் கொண்டு வரலாம்.

குக்ஸியில் இன்னும் இரண்டும் ஸ்பெஷன் அம்சங்கள் உள்ளன. ஒன்று குக்ஸியில் ஏற்கனவே உள்ள சமையல் குறிப்பு வீடியோக்களை பார்த்து சமைக்கலாம் என்பதோடு பயனாளிகள் தங்களது சமையலை படம் பிடித்து இதில் வீடியோவாக பதிவேற்றலாம்.

இரண்டாவது அம்சம் சமைப்பது தொடர்பான தரவுகளை குக்ஸி சேகரித்து தனது நினைவில் நிறுத்திக்கொள்ளும்.

இந்த இரண்டும் சேர்ந்து தான் குக்ஸியை, நமக்கான மாஸ்டர் செஃபாக மாற்றுகிறது. சமைப்பவரும் வீடியோவை பகிரலாம் என்பதால், சக உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் வீடியோக்கள் மூலம் புத்தும்புது உணவுப்பொருட்களாக தெரிந்து கொள்ளலாம். ( பிரபல சமையல் கலைஞர்களின் உணவு குறிப்புகளையுக் பின்பற்றலாம்).

மேலும், சமையலின் தரவுகளை குக்ஸி நினைவில் கொள்ளும் என்பதால், அடுத்த முறை அந்த வீடியோவை பார்க்கும் போது, ஒவ்வொரு கட்டமாக அது வழிகாட்டும். அதோடு, பாட்டி அல்லது அத்தையை சமைக்க வைத்து அதை வீடியோவாக குக்ஸியில் பதிவு செய்து கொண்டு, தேவைப்படும் போதெல்லாம் அந்த வீடியோவை பார்த்து அதே கைப்பக்குவத்துடன் சமைக்கலாம்.

அசத்தலாக இருக்கிறது அல்லவா? சமையல் கலை உலகில் குக்ஸி போன்ற அதிநவீன செயலிகள் தான் இப்போதைய டிரெண்ட்.

ஆனால், ஒன்று குக்ஸி கொஞ்சம் காஸ்ட்லியானது. டாலரில் சொல்லப்படும் இதன் விலைக்கு நம்மூரில் மாடுலர் கிச்சனே பொருத்திவிடலாம். கிரவுட்பண்டிங் தளமான இண்டிகோகோ தளத்தில் குக்ஸிக்கான யோசனை முன்வைக்கப்பட்டு பயனாளிகளிடம் இருந்து இதற்கான நிதி திரட்டப்பட்டுள்ளது.

ஜெப் எனும் சமையல் கலைஞர் இந்த புத்திசாலி டிஜிடல் சமையல் உதவியாளரை உருவாக்கியுள்ளார்.

குக்ஸி பற்றி அறிய: https://www.cooksy.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *