கொரோனா அடுத்த அலை எந்த அளவு தீவிரமாக இருக்கும் எனும் கேள்வி இந்தியர்களை கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில், சற்றும் எதிர்பாராத திசையில் இருந்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது. கொரோனா பாதிப்பு தொடர்பான தரவுகளை தொகுத்தளித்து வந்த ’கோவிட்19இந்தியா.ஆர்க்’ (https://www.covid19india.org/ ) இணையதளம் அக்டோபர் மாதம் மூலம் நிறுத்தப்படுகிறது எனும் தகவல் தான் அது.
கோவிட்19 இந்தியா தளம் மூடப்பட இருப்பது, பெரும்பாலானோருக்கு சாதாரணமான செய்தியாக அமைந்தாலும், இந்த தளத்தை சார்ந்திருந்தவர்களுக்கு இதைவிட வேதனையும், அதிர்ச்சியும் தரும் செய்தி வேறு இருக்கும் என சொல்வதற்கில்லை.
கோவிட்19இந்தியா தளம் மூடப்பட்டால், இனி தரவுகளுக்கு எங்கே செல்வது? என வல்லுனர்களும், மருத்துவர்களும் ஆய்வாளர்களும் மனதுக்குள் புலம்புவது உங்களுக்கு கேட்காமலே போகலாம் என்றாலும், உண்மையில் நிலை அது தான்.
பலவிதமான காரணங்களுக்காக இணையதளங்கள் மூடப்படுவது வழக்கமானது தான் என்றாலும், ’கோவிட்19இந்தியா’ மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது மற்ற தளங்கள் மூடப்படுவது போல எளிதாக கடந்து போக முடியாததாக இருக்கிறது. இதற்கான, காரணம் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்த தளம் முக்கிய ஆயுதமாக இருக்கிறது என்பது தான்.
கொரோனா போன்ற பெருந்தொற்று சூழலில் இந்த இணையதளம் ஏன் முக்கியமானது என்பதை உணர, டேட்டா (data ) என சொல்லப்படும் தரவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
கண்ணுக்குத்தெரியாத கொரோனா வரைஸ் உலகை எப்படி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது என்பது நமக்கெல்லாம் தெரிந்தது தான். கொரோனாவை குணமாக்க தனியே மருந்து இல்லாத சூழலில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது என்றே, இதன் பாதிப்பை குறைப்பதற்கான ஒரே வழி.
ஆனால், மருத்துவ உலகிற்கே கண்ணாமூச்சி காட்டும் வைரஸை கட்டுப்படுத்துவது அத்தனை எளிதானது அல்ல. அதற்கு வைரஸ் எங்கிருந்து, எப்படி பரவுகிறது என்பதை கண்டறிய வேண்டும். ஏற்கனவே பரவிய இடங்களில் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில் அடுத்து பரவக்கூடிய இடங்களை கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனிடையே, கொரோனா பரவும் இடங்களில் பாதிப்பின் தீவிரத்தையும், தன்மையையும் அறிய வேண்டும்.
கொரோனா தொற்று அளவு, அது பரவும் அளவு, அதனால் ஏற்படும் இழப்புகள் என எல்லாவற்றையும் அறிய வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் தரவுகள் தேவை.
தரவுகள் என்றால் எண்ணிக்கைகளும், புள்ளிவிவரங்களும், இன்னும் பிற சங்கதிகளும் தான். உதாரணமாக, இந்தியாவில் எத்தனை மாநிலங்களில், எத்தனை மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாக இருக்கிறது என தெரிந்து கொள்ள வேண்டும் எனில் அதற்கான தரவுகள் தேவை. பொது முடக்கத்தை தளர்த்திக்கொள்ளலாமா அல்லது தொடரலாமா என தீர்மானிக்க தரவுகள் தேவை.
இந்த தரவுகள் எல்லாம் பல்வேறு முனைகளில் இருந்து வரக்கூடியவை. பல்வேறு அமைப்புகள் இந்த தரவுகளை திரட்டி அளிக்கின்றன. இந்த தரவுகள் பெரும்பாலும் உரிய அரசு அமைப்புகளால் வெளியிடப்படுகின்றன. அரசு தரும் தரவுகள் முழு உண்மையை பிரதிபலிப்பவை என்று சொல்ல முடியாவிட்டாலும், இந்த தரவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படுவது அவசியமாகிறது.
உதாரணத்திற்கு, நாடு முழுவதும் பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளை வைத்துக்கொண்டு தரவு மாதிரி மூலம், பரவலின் போக்கு எப்படி இருக்கும் என்பதை கணிக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இத்தகைய கணிப்புகள் வழிகாட்டுகின்றன. கொரோனா இரண்டாம் அலை நாட்டை உலக்கி கொண்டிருந்த சூழலில், பதற்றமும், அச்சத்திற்கும் மத்தியில், இரண்டாம் அலையின் நிலையையும், அது எப்போது உச்சம் தொடும், எப்போது தணியும் என்றெல்லாம் நிதானமாக தரவு ஆய்வாளர்கள் வழிகாட்டிக்கொண்டிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.
இனி வரும் காலத்திலும், கொரோனா தரவுகள் இன்றிமையாதவையாக இருக்கப்போகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த தரவுகளை அணுகுவதற்கான அருமையான மேடையாக ’கோவிட்19இந்தியா’ இணையதளம் செயல்பட்டு வருகிறது என்பது தான் விஷயம். இந்த தளம் கொரோனா தரவுகளை தனியே அளித்துவிடவில்லை. பல இடங்களில் இருக்கும் தரவுகளை ஒற்றை இடத்தில் தொகுத்தளித்து வருகிறது.
இந்த தளம் எதையும் புதிதாக உருவாக்குவதில்லை. ஆனால், பல்வேறு அரசு அமைப்புகள் அளிக்கும் அதிகாரப்பூர்வ தரவுகளை எல்லாம் திரட்டி தொகுத்தளிக்கிறது. மேலோட்டமாக பார்க்கும் போது, இதென்ன பெரிய விஷயமா என்று தோன்றலாம். ஆனால், நடைமுறையில் மருத்துவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், கொரோனாவுக்கு எதிரான போராடும் இன்னும் பிற வல்லுனர்களுக்கும் இது மிகவும் முக்கியமானது.
இந்தியா போன்ற பரந்து விரிந்த தேசத்தில், தரவுகளை திரட்டுவது என்பது சவாலானது. ஒவ்வொரு வகையான தரவுகளுக்கும் ஒரு அமைப்பு பொறுப்பு வகிக்கும் நிலையில், தரவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு என்பது மிகவும் முக்கியம். அதிகாரப்பூர்வமாக இந்த தரவுகள் வெளியிடப்படுகின்றன என்றாலும், இவற்றில் தேவையானவற்றை எடுத்து கையாள்வது என்பது சிக்கலானது. அதிலும் அரசு அமைப்புகள் இடையிலான ஒருங்கிணைப்பில் நிலவும் நடைமுறை போதாமைகளை கருத்தில் கொண்டால், இந்த சிக்கல் எத்தனை தீவிரமானது என புரியும்.
இந்த பின்னணியில், தரவுகளுக்கு அங்கும் இங்கும் அல்லாட வேண்டிய தேவை இல்லாமல், கோவிட்19இந்தியா இணையதளம் அவற்றை அழகாக தொகுத்தளிக்கிறது. அதுவும் நிகழ் நேரத்தில் தகவல்களை அளிக்கிறது.
இந்த தளத்திற்கு ஒரு முறை சென்று பார்த்தால் அதன் அருமையை எளிதாக புரிந்து கொள்ளலாம். இதன் முகப்பு பக்கத்தில் இந்தியாவில் கொரோனா நிலை என்ன என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். மொத்த பாதிப்புகள், இன்னும் சிகிச்சையில் இருப்பவர் எண்ணிக்கை, குணமானவர்கள் எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆகிய விவரங்களை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிந்து கொள்ளலாம். இது தவிர மாநிலங்கள் வாரியாக இந்த விவரங்கள் அளிக்கப்படுவதோடு, இவை வரைபடத்தின் மீதும் பொருத்திக்காட்டப்படுகின்றன. மேலும் கொரோனா பரவல் போக்கு தொடர்பான வரைபடங்களையும் பார்க்கலாம்.
எல்லாமே அதிகாரப்பூர்வ தகவல்கள் அடிப்படையிலானவை. தற்போது தடுப்பூசி விவரங்களும் பதிவேற்றப்படுகின்றன. இந்த தகவல்களை தனித்தனியே தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.
ஆக, துண்டு துண்டாக தரவுகளை வைத்துக்கொண்டு திண்டாடுவதற்கு பதிலாக, கொரோனா நிலை தொடர்பான அடிப்படை தகவல்களை இந்த தளத்தில் இருந்து பெறலாம்.
செய்தி நோக்கில் தகவல்களை தேடும் பத்திரிகையாளர்கள் முதல், கொரோனா போக்கை அலசும் ஆய்வாளர்கள், எச்சரிக்கை அளிக்க விரும்பும் சுகாதார வல்லுனர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த தளத்தை தான் தரவுகளுக்கான முக்கிய வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வளவு ஏன், இடைப்பட்ட காலத்தில் கொரோனா தொடர்பாக அளிக்கப்பட்ட பல்வேறு கணிப்புகள், எச்சரிக்கைகள், ஆறுதல் தகவல்கள் போன்றவற்றுக்கு எல்லாம் இந்த தளம் தான் ஏதோ ஒரு வகையில் உதவியாக இருந்திருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு இணையதளம் மூடப்பட இருக்கிறது எனும் செய்தி கவலை அளிப்பது தானே. வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த தளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, அதன் பிறகு கொரோனா தொடர்பான தரவுகளை ஒரே இடத்தில் அணுகுவது சாத்தியம் இல்லாமல் போயிவிடும். இது நிச்சயம் பேரிழப்பு தான்.
இந்த தளம் ஏன் மூடப்படுகிறது எனும் கேள்வி இப்போது உங்கள் மனதில் எழுந்திருக்கும். கொரோனா பாதிப்பு சூழலில் இத்தகைய ஒரு தரவு ஒருங்கிணைப்பு தளம் தேவை என்பதை உணர்ந்த பலர் ஒன்றிணைந்து இந்த தளத்தை அமைத்தனர். இதில் உள்ள அனைவருமே எந்த பலனையும் எதிர்பார்க்காமல் தன்னார்வலர்களாக இதை நடத்தி வந்தனர். உண்மையில் இந்த குழுவினர் தங்களை யார் என்று கூட அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை.
இந்த தளம் எந்த அளவுக்கு இன்றிமையாததோ அந்த அளவுக்கு இதை நடத்துவதும் கடினமானது. பல தன்னார்வலர்கள் இரவு பகல் பாரமால் தங்கள் உழைப்பு மூலம் இதை சாத்தியமாக்கி வருகின்றனர். தவிர இதற்கான தொழில்நுட்ப தேவைகளும் இருக்கின்றன.
இப்போது சிகக் என்னவென்றால், கொரோனா பாதிப்பு அடுத்த ஆண்டு வரை தொடரும் என்ற நிலையில், தன்னார்வலர்களால் தங்கள் முழு நேரத்தையும் இந்த முயற்சிக்கு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தளத்தை நடத்தி வந்தவர்கள் தங்கள் சொந்த அலுவல்களை கவனிக்க திரும்ப செல்லும் கட்டாயம் இருப்பதால், இந்த தளத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிச்சயம் இது புரிந்து கொள்ளக்கூடியது தான். ஆனால், கொரோனா பாதிப்பு தரவுகளை எளிதாக பெற முடியாமல் போகும் நிலையை என்னவென்று சொல்வது. அதிலும், இருக்கும் தரவுகளையே மூடி மறைத்தும், திரித்தக்கூறுவதையும் பழக்கமாக அரசு அமைப்புகள் கொண்டிருக்கும் தேசத்தில், கொரோனா தரவுகளை தொகுத்தளித்தக்க சுயேட்சையான ஒரு தளம் இல்லாமல் போவது பெரும் சோகம் தான்.
இந்த தளம் அக்டோபருக்கு பிறகு புதுப்பிக்கப்படாதே தவிர, இதுவரை திரட்டப்பட்ட தரவுகள் எல்லாம் சேமித்து பராமரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆக, கடந்த கால தரவுகள் சார்ந்த ஆய்வுகளில் அதிக பிரச்சனை இல்லை, ஆனால், நிகழ் கால பாதிப்பை அலசி ஆராயம் எளிதாக தரவுகளை அணுக வழியில்லாமல் போகலாம்.
கோவிட்19 இந்தியா இணையதளத்தின் டிவிட்டர் பக்கத்தில் தளம் மூடல் தொடர்பான தகவலுக்கு பலரும் தெரிவித்துள்ள பின்னூட்டங்களில் இருந்தே இதன் தீவிரத்தை உணரலாம். (https://twitter.com/covid19indiaorg/status/1423962417302708224?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet)
இதுவரை இக்குழுவினர் செய்து வந்த பணி நிகரில்லாதது மற்றும் பாராட்டுக்குறியது என்பதோடு, அதை அவர்களால் தொடர முடியாமல் போவதும் வேதனையான நிதர்சனம் தான்.
ஆனால், நல்ல பணி தயவு செய்து தொடருங்கள் என்று கேட்டுக்கொள்வதால் மட்டும், இந்த தளத்தை அதன் குழுவினர் தொடர்ந்து நடத்தச்செய்வது சாத்தியம் இல்லை. இதை சாத்தியமாக்க நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது நம் எல்லோர் முன் இருக்கும் கேள்வி.
—