புதிய போன்களுக்கும், புதிய கேட்ஜெட்களுக்கும் ஏன் இத்தனை கிரேஸ் என யோசித்திருக்கிறீர்களா? கேட்ஜெட்களுக்கும் புதுமைக்குமான தொடர்பு இதற்கு காரணமாக இருக்கலாம். புதுமையான பொருட்களை உருவாக்கும் வேட்கையே நவீன கேட்ஜெட்களுக்கான உந்துசக்தியாக அமைகிறது. சில நேரங்களில் புதுமை கொஞ்சம் அதிகமாகி விநோதமான சாதனங்களும் அறிமுகமாவது உண்டு. இப்படி கேட்ஜெட் உலகில் அறிமுகமான வியக்க வைக்கும் விநோத சாதனங்களை பார்க்கலாம்:
டிவிட்டர் போன்
ஸ்மார்ட்போனில் இருந்தே டிவிட்டர் சேவையை அணுகலாம். தேவை எனில் டிவிட்டர் செயலியையும் பயன்படுத்தலாம். ஆனால் டிவிட்டருக்கு என்று மட்டுமே ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனது தெரியுமா? ஆம், டிவிட்டர் சேவை பிரபலமாகத்துவங்கிய காலத்தில், டிவிட்டர் பீக் (Twitter Peek) எனும் சாதனம் அறிமுகமானது. நீல நிறத்தில் பிரத்யேக ஸ்மார்ட்போன் போல தோன்றினாலும், இந்த சாதனத்தில் போன் பேச முடியாது, இமெயில் அனுப்ப முடியாது, இணையத்திலும் உலாவ முடியாது. இதில் செய்யக்கூடியது எல்லாம் டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை படிக்கலாம் மற்றும் நாமும் பதிவிடலாம், அவ்வளவு தான். ஏற்கனவே பீக் எனும் பெயரில் இமெயில் மட்டுமே அனுப்பக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்த நிறுவனம் இந்த டிவிட்டர் போனை சந்தைக்கு கொண்டு வந்தது. டிவிட்டர் பிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக இந்த சாதனம் தோல்வியைத்தழுவியது. இதன் விலை மற்றும் மாதக்கட்டணம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர். ஆனால், டிவிட்டருக்கு மட்டுமே ஒரு போன் என்பது இப்போது நினைத்துப்பார்த்தாலும் புதுமையாக தான் இருக்கிறது அல்லவா!
–
கம்ப்யூட்டர் ஆடை
வியரபில் கம்ப்யூட்டர் எனப்படும் அணிகணிணி கருத்தாக்கம் தொழில்நுடப் உலகில் பிரபலமாக இருக்கிறது. மேஜை மீது இருந்த கம்ப்யூட்டர் லேப்டாப்,டேப்லெட் என்றெல்லாம் அவதாரம் எடுத்திருப்பது போல, கம்ப்யூட்டரை உடலில் ஒரு சாதனமாக அணிந்து பயன்படுத்தலாம் என்பதையே அணிகணிணி என்கின்றனர். இந்த வகையில் அசத்தலாக போமா (Poma ) எனும் அணி கம்ப்யூட்டர் 2002 ல் அறிமுகமானது. ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் பிராசஸரை வைத்துக்கொண்டு, புறங்கையில் கீபோர்டை மாட்டிக்கொண்டு, அப்படியே இணையத்தில் உலாவி தலையில் அணியும் கண்ணாடி வழியே இணைய பக்கங்களை பார்க்கலாம் எனும் வர்ணயோடு இந்த புதுமை கம்ப்யூட்டர் உதயமானது. அந்த காலகட்டத்திலேயே 1500 டாலரை தொடும் விலையில் அறிமுகமாகி வாயை பிளக்க வைத்தது. ஆனால் சந்தை தான் கைகொடுக்கவில்லை.
–
முத்த சாதனம்
லவோடிக்ஸ் (Lovotics ) எனும் பெயரே காவியமயமாக இருக்கிறது அல்லவா! இந்த நிறுவனம், கிஸிங்கர் என கிறக்கம் தரும் பெயரில் புதுமையான சாதனம் ஒன்றை அறிமுகம் செய்தது. சிறார்கள் விளையாடும் பொம்மை போல தோற்றம் தந்தாலும், இந்த சாதனத்தின் மூலம் காதலர்கள் முத்த பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஆம், இந்த சாதனத்தை கொண்டு முத்தம் கொடுத்தால் அதில் உள்ள சென்சார்கள் மூலம் ஏற்படும் அதிர்வுகள், நிஜ முத்தம் தரும் உணர்வையும், காதல் அதிர்வுகளையும் மறுமுனையில் சாதனத்தை வைத்திருப்பவருக்கு அளிக்குமாம் .
–
பேசும் காமிரா
ஒரு காலத்தில் போலாராய்டு உடனடி காமிராக்கள் பிரபலமாக இருந்ததன. போலாராய்டு நிறுவனம் 1995 ல் பேசும் காமிராவையும் அறிமுகம் செய்தது. இந்த காமிராவில் படம் எடுக்கும் முன், அது பேசவும் செய்யும். ஸ்மைல் பிளீஸ் என எல்லா காமிரா கலைஞர்களும் சொல்வது போல இந்த காமிராவில் நாமே பேசி பதிவு செய்து, படமெடுக்கும் போது காமிராவில் இருந்த அந்த குரல் ஒலிக்கச்செய்யலாம். செல்பீ யுகத்தில் இந்த யோசனை ஏற்றதாக இருக்கும் அல்லவா!
–
இரட்டைத்திரை போன்
யோட்டோபோன் (YotaPhone) அண்மை காலத்தில் அறிமுகமான சாதனம். இரு பக்கமும் திரை கொண்ட போன் இது. ஒரு பக்கம் வழக்கமான வண்ணத்திரை என்றால் இன்னொரு பக்கம் கிரேஸ்கேல் திரை இடம் பெற்றிருக்கும். வழக்கமான செயல்பாட்டிற்கு வண்ணத்திரையை பயன்படுத்தி, மின்னூல்களை படிக்கும் போது கிரேஸ்கேல் திரைக்கு மாறிக்கொள்ளலாம்.
–
செல்பீ ஷூ
செல்பீ தெரியும், ஷூபி தெரியுமா? ஷூவில் போனை வைத்து கூலாக எடுக்கும் செல்பீயை தான் இப்படி சொல்கின்றனர். என்னது, ஷூவில் போனை வைப்பதா? என வியக்க வேண்டும். நியூயார்க்கைச்சேர்ந்த ஷு தயாரிப்பு நிறுவனம் மிஸ் மூஸ் (Miz Mooz) சில ஆண்டுகளுக்கு முன் பெண்கள் தங்கள் ஷூவில் போனை பொருத்திக்கொண்டு அப்படியே காலைத்தூக்கி ஸ்டைலாக செல்பீ எடுத்துக்கொள்ள வழி செய்யும் ஷூவை முட்டாள்கள் தினத்தன்று அறிமுகம் செய்தது. செல்பீ ஸ்டிக்கை வைத்திருப்பது தொல்லை என நினைப்பவருக்கான உருவாக்கம் இது.
–
ஸ்மார்ட் பெல்ட்
2015 ல் சர்வதேச நுகர்வோர் தொழில்நுட்ப கண்காட்சியில் பெல்டி எனும் ஸ்மார்ட் பெல்ட் அறிமுகமானது. இந்த பெல்ட் ஏன் ஸ்மார்ட் என்றால் இதனுடன் ஒரு செயலியும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த செயலியின் மூலம் இடுப்பு அளவு போன்ற விஷயங்களை குறித்துக்கொள்ளலாம் என்பதோடு மதிய சாப்பாட்டிற்கு பின், இந்த பெல்ட் தானாக தளர்ந்து கொடுக்கும் தன்மையும் கொண்டிருந்தது.
–
போன் போன்
பெயரில் போன் (Bone Fone) இருந்தாலும் இது பேசுவதற்கான போன் அல்ல, கேட்பதற்கான சாதனம். தோளில் துண்டு போடுவது போல இந்த சாதனத்தை அணிந்து கொள்ள வேண்டிய ஸ்பீக்கர் இது. இந்த சாதனத்தில் பாட்டு கேட்க முடியாது,. ஆனால், இதில் உள்ள சென்சார்கள் மூலம் உடலில் அதிர்வுகள் பரவி பாட்டு கேட்பது போன்ற உணர்வை பெறலாம் என சொல்லப்பட்டது.
–
சாதனங்களில் புதுமைக்கு பஞ்சமில்லை எனும் நிலையில் எதிர்காலத்தில் அறிமுகம் ஆக சாத்தியம் உள்ள சாதனங்கள் என வல்லுனர்களாலும், வடிவமைப்பாளர்களாலும் கருதப்படும் சில சாதனங்களையும் பார்க்கலாம்.
3டி பேனா; பவுண்டன் பேனா, பால்பென் பேனா என்றெல்லாம் இருப்பது போல வருங்காலத்தில், முப்பரிமான பொருட்களை உருவாக்க கூடிய 3டி பேனா வரலாம் என்கின்றனர். இதே போல பேனாவில் இருந்து அச்சிட்டு கொள்ளும் வசதி கொண்ட பிரிண்டர் பேனாவும் வரலாம் என்கின்றனர்.
அதே போல கை விரல்களி மோதிரம் போல மாட்டிக்கொண்டால், எளிதாக அளவெடுக்க வழி செய்யும் சாதனமும் வரலாம் என்கின்றனர். அதே போல மாட்டி வைக்கும் துணிகளை சானிடைஸ் செய்யும் ஹாங்கரும் உருவாக்கப்படலாம் என்கின்றனர். இந்த வகை சாதனம் தான் கொரானா கால தேவை எனத்தோன்றுகிறது.
–
நன்றி: குமுதம் தீபாவளி மலருக்காக எழுதியது.