ஒரு அனிமேஷன் குறும்படமும், இணைய கண்டறிதல் ரகசியமும்!

665ddd40-d0dd-4a6e-b3de-2ec92ae1ccb9அலைக் (http://alike.es/ ) என்றொரு அனிமேஷன் குறும்படம் இருக்கிறது. இந்த படம் பற்றி மட்டுமே தனியே எழுதலாம். பார்த்தவுடன், அட அற்புதமாக இருக்கிறதே என பாராட்டுவதோடு மற்றவர்களுக்கும் பரிந்துரை வைக்கும் படமாக இது அமைகிறது. அலைக் படம் அளிக்கும் ஆச்சர்யத்திற்கு நிகராக இந்த படம் தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களில் தான் என் மனம் லயிக்கிறது.

விமியோ தளத்தில் அறிமுகம் செய்து கொண்ட இந்த படம் தொடர்பான மேலதிக தேடலில் தான் எத்தனை அருமையான தளங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இது பற்றியும் தனியே விரிவாக எழுதலாம். இப்போதைக்கு சோஷியல் லைப் எனும் வலைத்தொடர் பற்றி பார்க்கலாம்.

இந்த வலைத்தொடரின் தன்மை பற்றியோ தரம் பற்றியோ பேசப்போவதில்லை. மாறாக, இந்த வலைத்தொடரை கண்டறிவதற்கான சாத்தியம் குறித்து பேசுலாம்.

இந்த தொடருக்கான ஒற்றை வரி அறிமுகம் சுவையாகவே இருக்கிறது. சமூகவியல் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவர் தனது சமூக வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுவதை மையமாக கொண்டு இந்த தொடர் அமைந்திருப்பதாக அந்த அறிமுகம் தெரிவிக்கிறது.

சமூக வலைப்பின்னல் யுகத்தில், சமூக வாழ்க்கையின் சிக்கல் பற்றி சமூகவியல் மாணவர் யோசிப்பதான கதை முடிச்சு கவனத்தை ஈர்ப்பதாகவே இருக்கிறது அல்லவா?

சரி இந்த வலைத்தொடர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என இணையத்தில் தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சோஷியல் லைப் எனும் பெயரில் ஒரு வலைத்தொடர் வந்திருப்பதையே கூகுள் அங்கீகரித்ததாக தெரியவில்லை. சோஷியல் லைப் வலைத்தொடர் என இன்னும் தெளிவாக குறிப்பிட்டு தேடினாலும், எந்த விவரமும் இல்லை.

அடுத்ததாக இதன் இயக்குனர், நடிகரின் பெயரையும் சேர்த்து தேடினால் இதன் பேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் இணைப்பு வருகிறது. இந்த தொடருக்கான டிவிட்டர் பக்கமும் இருக்கிறது. மற்றபடி இந்த தொடர் குறித்த மேலதிக தகவல்களை அறிய வாய்ப்பில்லை.

அலைக் படம் தொடர்பாக கிடைக்க கூடிய தகவல்களோடு ஒப்பிடும் போது, சோஷியல் லைப் தொடர்பான தகவல் வறட்சி முரணாக அமைகிறது. ஆனால் அலைக் படம் கிளாஸிக் ரகம் எனும் போது இதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

சோஷியல் லைப் தொடர் இப்போது தான் வெளியாகி இருக்கிறது. இந்த தொடரும் பேசப்படலாம். பேசப்படாமலே போகலாம். ஆனால், இங்கே சொல்ல வருவது என்னவென்றால், சோஷியல் லைப் படத்தை நீங்களும், நானும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு சொற்பம் என்பது தான். இந்த இடத்தில் தான் சோஷியல் லைப் படத்தை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பாக அமைந்த ஸ்பார்கிள்.டிவி தளம் பற்றி குறிப்பிட வேண்டியிருக்கிறது.

ஸ்பார்க்.டிவி பற்றிய விரிவான அறிமுகம் இணைய மலர் செய்தி மடலில்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *