’கால் மீ பிரியா’ எனும் ஆவணப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இருக்கிறது. கவனிக்கப்படாமல் போன எத்தனையோ நல்ல ஆவணப்படங்களில் இதுவும் ஒன்று என்றாலும், இந்த படம் தொடர்பாக பேசுவது அவசியம் எனத்தோன்றுகிறது.
முதல் விஷயம் இந்த ஆவணப்படம் தொடர்பாக தமிழில் எந்த குறிப்பும் இல்லை. இத்தனைக்கும் இந்த படம் திருப்பூரை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் தமிழில் இந்த படம் தொடர்பாக எந்த விவாதமும் நிகழ்ந்ததாக தெரிவில்லை. ( குறைந்தபட்சம் கூகுள் தேடலில் கண்டறிய முடியவில்லை.). இப்படி ஒரு ஆவணப்படம் வெளியானது குறித்த தகவல் டிடீநெக்ஸ்ட் தளத்தில் மட்டும் வெளியாகி இருக்கிறது. அந்த தகவலுக்கான மூலமும் ராய்ட்டர்ஸ் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ( ராய்ட்டர்சின் மூலப்பதிவு கூகுள் தேடல் பட்டியலில் டிடீநெக்ஸ்ட் நகல் பதிவுக்கு பின்னே வருவது கூகுள் தேடலின் தரத்திற்கு சான்று).
திருப்பூரில் வசிக்கும் பிரியா எனும் இளம் பெண்ணின் கல்விக்கனவு வறுமை சூழலால் சின்னாபின்னமாகி, அவர் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் கூலி வேலை செய்ய தள்ளப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவரின் ஊக்கத்தால் மீட்கப்படுவதை இந்த படம் விவரிக்கிறது. இதன் பின்னணியில் திருப்பூர் போன்ற இந்திய தொழில் நகரங்களில் வறுமை காரணமாக, இளம் பெண்கள் கல்வியைத்தொடர முடியாமல் கூலி வேலைக்கு நிர்பந்திக்கப்படுவதை படம் வலுவாக பேசுகிறது.
குடும்ப சூழ்நிலையால் கல்வியைத்தொடர முடியாமல், ஆலைகளில் கூலி வேலைக்கு செல்லும் நிலை பெரும்பாலும் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் , தலித் சமூகத்தினருக்குமே நேர்வதை இந்த படம் உணர்த்துகிறது. பின்னலாடை நிறுவனங்கள் போன்றவற்றில் பணி செய்வது என்பது பொதுவாக உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்பட்ட அடிமை வேலைக்கு இணையானது எனும் கருத்தும் உணர்த்தப்படுகிறது.
காட்சி நோக்கில் பார்த்தாலும் இந்த படம் நன்றாகவே இருக்கிறது. அதைவிட முக்கியமாக, படத்திற்கான தரவுகளை திருப்பூரில் தொடர்புடைய மக்களிடம் நேர்காணல்கள் நடத்தி, அந்த மக்களில் இருந்தே நடிகர்களை தேர்வு செய்து படத்தை உருவாக்கியுள்ளனர்.
கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த ஆவணப்படம் பேசும் கருப்பொருள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த படம் சார்ந்த பாடத்திட்டம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை எடுத்த நோவாபிலிம்.கோ (http://www.novofilm.co/portfolio/call-me-priya/ ) தளம் வாயிலாக இந்த தகவலை அறிய முடிகிறது.
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளம் பெண்கள் நவீன கால அடிமை நிலையில் இருப்பதாக இந்த தளம் குறிப்பிடுவது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஆலைகளில் நிலவும் இத்தகைய கொத்தடிமை பணி சூழல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த படத்தின் நோக்கமாக அமைகிறது.
கொத்தடிமை முறையை ஒழிப்பதில் உலக அளவில் செயல்படும் ஃபிரிடம் பண்ட் (The Freedom Fund ) கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நோவாபிலிம் இளம் பெண்களுக்கான திரைப்பட சார்ந்த வழிகாட்டி புத்தகத்தை உருவாக்குவதற்காக கால் மீ பிரியா ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளதாக இதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிமை முறை ஒழிப்பு உள்ளிட்ட நம் காலத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக புதுமையான முறைகளில் தீர்வுகளை அளிக்க கலை மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அமைப்பாக நோவா விளங்குவதையும் அறிய முடிகிறது.
இனி விஷயத்திற்கு வருவோம். கால் மீ பிரியா படத்தை வாட்டர்பியர் எனும் ஓடிடி சேவை தளத்தின் வாயிலாக கண்டறிய முடிந்தது. வாட்டர்பியர் சுற்றுச்சூழலை மையமாக கொண்ட காலநிலை மாற்றத்திற்கு தீர்வாக அமையும் படங்களை வழங்கும் சேவையாக இருக்கிறது.
வாட்டபியர் தளத்தில் இருந்து விமியோ தளம் வாயிலாக கால் மீ பிரியா படத்தை காண முடிந்தது. https://vimeo.com/236136457
விஷயம் என்னவென்றால், அருமையான படங்களை நீங்கள் வாட்டர்பியர் அல்லது விமியோ போன்ற தளங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும் என்பது தான்.