சவுண்ட்ஸ் ஆப் சேஞ்ச்ஸ் எனும் அருமையான இனையதளம் இருக்கிறது. வரலாற்று ஒலிகளுக்கான ஆவண காப்பகமாகவும், தேடியந்திரமாகவும் விளங்கும் இந்த தளம் பற்றி விரிவாக இணைய மலர் முன்மடலில் எழுதியிருக்கிறேன். இந்த பதிவில் ஒலி தேடியந்திரங்கள் தொடர்பான வேறு குறிப்புகளை பார்க்கலாம்.
முதல் விஷயம், ஒலிகளுக்கான அருமையான பிரத்யேக தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. இவற்றில் பைண்ட்சவுண்ட்ஸ், பிரிசவுண்ட்ஸ் உள்ளிட்டவை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்போது குறிப்பிட விரும்பும் விஷயம் என்னவென்றால், ஒலிகளுக்கான தேடியந்திரம் என கூகுளில் தேடினால், சவுண்ட்ஸ் ஆப் சேஞ்சஸ் இணையதளம் அதன் தேடல் பட்டியலில் வரவில்லை என்பது தான்.
இந்த தளம் அடிப்படையில் ஒலிகளுக்கான காப்பகம் தான் என்றாலும், வரலாற்று ஒலிகளை தேடும் வசதியும் இருப்பதால், இது ஒலிகளுக்காக தேடியந்திரமாகவும் அமைகிறது. இருப்பினும், கூகுள் இதை ஒலிகளுக்கான தேடியந்திரமாக பட்டியலிடாதது ஏன் என்று தெரியவில்லை.
இதற்கான காரணங்கள் இருக்கலாம் என்றாலும், கூகுள் தேடல் பல நேரங்களில் போதமைகளை கொண்டதாகவே இருப்பதற்கான உதாரணமாக இதை கருதலாம். ஒலிகளை கண்டறிய உதவும் சவுண்ட்ஸ் ஆப் சேஞ்சஸ் தளத்தை வேறு எங்கேனும் கண்டறிய வேண்டுமேத்தவிர, கூகுள் தேடலில் கண்டறிய முடியாமல் போகிறது.
இந்த தளத்தை நான் கண்டறிந்தது, டெலிபிரிண்டர்கள் தொடர்பான கூகுள் தேடலில் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
நிற்க, ஒலிகளுக்கான தேடியந்திர தேடலில், மிகவும் சுவையான ஒரு ஒலி தேடியந்திரத்தை அறிய முடிந்தது. ஆடம்பர கார் தயாரிப்புக்காக அறியப்படும் பிஎம்டபிள்யூ கார் இஞ்சின் ஒலிகளுக்கான தேடியந்திரம் அது. நிறுவன இணையதளத்தில் இதற்கான பகுதி உள்ளது. பிஎம்டபிள்யூ கார் இஞ்சின் தனித்துவமான ஓசையை கொண்டிருப்பதாக இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.bmw.in/en/topics/Fascination-BMW/bmw-engine-sound.html