நல்ல இணையதளங்கள் மூடப்படுவதை அறியும் போது ஏற்படும் ஏமாற்றத்தையும், வேதனையையும் உணர்வது நான் மட்டும் தானா என்பது தெரியவில்லை. இணையதளங்கள் பற்றி எழுதுவதற்காக தேடலிலும், ஆய்விலும் ஈடுபடும் போது ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய பல தளங்கள் இப்போது இல்லாமல் போயிருப்பது கண்டு வருந்திய அனுபவம் நிறைய இருக்கிறது.
இணையதளங்கள் மூடப்படுவதை விட, அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வழி இல்லாமல் போவது இன்னமும் வருத்தமானது. எனவே தான், ஃப்ரோப்பர் (http://www.fropper.com/ ) தளத்தின் விடைபெறல் அறிவிப்பை பார்த்ததும், ஆறுதலாக இருந்தது.
தமிழ் இந்துவின் காமதேனு டிஜிட்டல் இதழுக்காக எழுதி வரும் சமூக ஊடக வானவில் தொடருக்காக, தேடலில் ஈடுபட்டிருந்த போது இந்த தளம் தொடர்பான தகவல்களை அறியும் தேவை உண்டானது. சமூக வலைப்பின்னல் ஆலை வீசத்துவங்கிய போது இந்தியாவில் இருந்து துவக்கப்பட்ட சமூக வலைப்பின்னல் சேவைகளில் இந்த தளம் முக்கியமானது. புதிய நண்பர்களை கண்டறிவதில் கவனம் செலுத்திய இந்த தளம் தற்போது செயல்பாட்டில் இல்லை என தெரிய வந்த போது ஏமாற்றமாகவே இருந்தது.
ஆனால், இது குறித்த அறிவிப்பு இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் இருப்பதை பார்த்ததும் வியப்பாகவும், ஆறுதலாகவும் இருந்தது.
உங்களைச்சுற்றி சுவாரஸ்யமான நண்பர்களை கண்டறிய உதவும் நோக்கத்துடன் பத்தாண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டதாக குறிப்பிட்டு , பேஸ்புக், ஷாதி.காம், டிண்டர் ஆகிய தளங்களின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வளர்ச்சி இல்லாததால் இந்த தளத்திற்கு விடை கொடுக்க தீர்மானிகப்பட்டதாக அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. பிரிமியம் உறுப்பினர்களுக்கான கட்டணம் திரும்பி அளிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வெளிப்படையான தன்மையை தான், தளங்கள் மூடப்படும் போது அதன் நிறுவனர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். இணையவாசிகளுக்கு காட்டப்படும் மரியாதையாகவும் இது அமையும்.
தளம் மூடப்படுவதற்கான காரணத்தை குறிப்பிட்டு கண்ணியமாக விடை பெற்றுக்கொள்வதை முக்கியமாக கருதும் வெகு சில தளங்களின் பட்டியலில் ஃப்ரோப்பரும் இணைகிறது.
அறிவிப்பை காண: http://www.fropper.com/