புகைப்பட கலையில் ’ரூல் ஆப் தேர்ட்’ எனப்படும் மூன்றின் விதி மிகவும் பிரபலமானது. இதே போல எழுத்துலகிலும் மூன்று விதிகள் எனும் கோட்பாடு முக்கியமானதாக இருக்கிறது. இதே வரிசையில், தனிப்பட்ட முறையில் தான் கற்றுக்கொண்ட மூன்று விதிகளை அனுபவ பாடமாக முன்வைக்கிறார் அமீத் ரனடைவ் (Ameet Ranadive). தொழில்முனைவோரான அமீத், மெக்கின்ஸி ஆலோசனை நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை மீடியம் வலைப்பதிவு வாயிலாக பகிர்ந்து கொள்கிறார்.
இத்தகைய பதிவு ஒன்றில் தான், மூன்று விதிகள் பற்றி பேசுகிறார். மூன்று விதிகள் என அவர் சொல்வது, எங்கே எவரிடம் எதை விளக்குவதாக இருந்தாலும் அதற்கான மூன்று காரணங்களை சொல்லுங்கள் என்பதாக அமைகிறது.
இதை மெக்கின்ஸியில் தான் கற்றுக்கொண்ட பாடம் என்கிறார். மெக்கின்ஸியில் புதிதாக எந்த யோசனையை பரிந்துரைத்தாலும், அதை நிறுவனம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என விளக்கம் அளிக்க, மூன்று காரணங்களை கூறும்படி மேலதிகாரி கூறுவது வழக்கம் என்கிறார் அமீத்.
இரண்டு, அல்ல நான்கும் அல்ல, சரியாக மூன்று காரணங்கள் என்கிறார் அமீத்.
இப்படி மூன்று காரணங்களில் ஒரு யோசனை விளக்குவதன் மூலம், மூன்று விதமான பலன்கள் உண்டாகும் என்கிறார்.
- அவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.
- சிறந்த மூன்று காரணங்களை நீங்கள் பட்டியலிட வேண்டும்.
- நீங்கள் பேசும் போது நம்பிக்கையுடன், தெளிவாக, கோர்வையாக பேச முடியும்.
மெக்கின்ஸி நிறுவனம் மற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு மாற்றம் தொடர்பான ஆலோசனைகளை தொழில்முறையாக வழங்கும் நிறுவனம் என்பதால், நாம் முன்வைக்கும் விஷயத்தை புரிய வைக்க அங்கு பயன்படுத்தப்படும் இந்த வழிமுறையின் அருமையை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
எந்த யோசனை அல்லது கோரிக்கையும் மூன்று காரணங்களில் விளக்குவது பற்றி இந்த பதிவில் இன்னும் சற்று விரிவாகவும் அமீத் விளக்கியிருக்கிறார்.
இத்தகைய அனுபவ பகிர்வுகளை கொண்டுள்ள அமீத்தின் மீடியம் வலைப்பதிவை, மிக அழகாக அவரது மூன்று விதி கட்டுரைக்கான அறிமுகம் மூலம் சுட்டிக்காட்டுகிறது ’ஒன் டெய்லி நக்கெட்’ இணையதளம்.
இந்த தளம் பற்றிய அறிமுகத்தை இணைய மலர் மின்மடலில் பார்க்கலாம். அமீத் சொல்லும் மூன்று விதிகள் யோசனை ஏற்கும் படி இருப்பதால், அதே முறையில் ’நீங்கள் ஏன் இணைய மலர் மின்மடலை வாசிக்க வேண்டும்’ என்பதற்கான மூன்று காரணங்கள் இதோ:
- புதிய, பயனுள்ள இணையதளங்களின் அறிமுகம் உங்கள் இமெயிலைத் தேடி வரும்.
- புதிய மட்டும் அல்ல, புதுமையாகவும், பயனுள்ளதாகவும் கருதக்கூடிய பழைய அருமையான இணையதளங்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
- இணையதள கண்டறிதலை பலரும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நிலையில், ஆரம்ப கால வலையின் உற்சாக தன்மையோடு இந்த மின்மடல் ஏதேனும் ஒரு வகையில் சிறந்ததாக அமையும் இணையதளங்களை தேடி எடுத்து விரிவாக அறிமுகம் செய்கிறது.
இந்த அறிமுகம் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் மூன்று அமசங்களாக பகிரலாம்.