நவீன அறிவியலின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் அதன் பூர்வாங்க பணிகளை முடித்துக்கொண்டு செயல்பாட்டிற்கு தயாராகி இருக்கிறது. இனி இந்த தொலைநோக்கி கண்டறிந்து சொல்லக்கூடிய விஷயங்கள் பிரபஞ்ச ரகசியம் தொடர்பான புதிரை விடுவிக்க கூடியதாக இருக்கும்.
நாம் எங்கிருந்து வந்தோம்? , நம்மைத்தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்கேனும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறதா? ஆகிய இரண்டு பிரதான கேள்விகளுக்கு பதில் தேடி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் அதிசயம் என சொல்லக்கூடிய இந்த தொலைநோக்கி, ஏற்கனவே விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஹப்பிள் தொலைநோக்கியின் அடுத்த வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை திட்டமிட பத்தாண்டுகளும் உருவாக்க இருபது ஆண்டுகளும் ஆனது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி என்ன இந்த தொலைநோக்கியில் இருக்கிறது என்றால், ஒரு மெகா சைஸ் கண்ணாடியும், அதற்கு ஜோடியாக ஒரு துணை கண்ணாடியும் இருக்கிறது. இந்த கண்ணாடிகள் பிரதிபலிக்கும் ஒளியை சேகரித்து அனுப்பி வைப்பதற்காக அதிநுட்பமான உபகரணங்கள் இருக்கின்றன. இவை எல்லாமும் சேர்ந்த அறிவியல் ஆய்வு கூடமாக தொலைநோக்கி அமைந்துள்ளது.
தொலைநோக்கியின் முதன்மை கண்ணாடியில் தான் விஷயமே இருக்கிறது. அது தான் பிரபஞ்ச ரகசத்தை புரிய வைக்க கூடிய ஆதி ஒளியை நோக்க இருக்கிறது.
ஆதி ஓளி என்றால் பிரபஞ்சம் உருவாக காரணமாக அமைந்த பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பிற்கு பிறந்து உண்டான முதல் ஒளி ஆகும். இந்த ஒளியில் இருந்தே நட்சத்திரங்களும், சூரியனும், இன்னும் பிற கோள்களும், நமது மூதாதையர்களும், சக ஜீவராசிகளும் தோன்றின.
பெருவெடிப்பு எப்போது, எப்படி நிகழ்ந்தது என அறிவியல் உலகம் கண்டறிந்துள்ளது. சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பு நிகழ்ந்தது. அதன் பிறகு என்ன நிகழ்ந்தது என்று தெரியாது. ஏனெனில் எங்கும் இருளாக இருந்தது. அப்போது ஒளியும் இல்லை, பருப்பொருட்களும் இல்லை, உலகமும் இல்லை. கோள்களும் இல்லை. ஒரு நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் முதல் ஒளி உண்டானது. அதன் பிறகே படிப்படியாக நாம் இருக்கும் பிரபஞ்சம் உருவானது.
இந்த ஆதி ஒளி இன்னமும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பது தான் பிரபஞ்சத்தின் அதியசம். இந்த ஒளியின் சமிக்ஞ்சைகளை கண்டறியயே ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு கழகங்களின் கூட்டு முயற்சியாக இந்த தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹப்பிள் தொலைநோக்கி பெருவெடிப்பு தொடர்பான தகவல்களை சேகரித்திருந்தாலும், முதல் ஒளியின் கீற்றை அதனால் கண்டறிய முடியவில்லை. ஏனெனில் அது கண்ணுக்குத்தெரியும் ஒளி அலைவரிசைகளையே அறியும் திறன் கொண்டிருந்தது. இப்போது கண்ணுக்குத்தெரியாத அலைவரிசையிலான ஒளியையும் உணரும் நுட்பம் கொண்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணுக்குச்சென்றுள்ளது.
13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அல்லது பிரபஞ்சம் தோன்றிய பெருவெடிப்பு காலத்தை கற்பனை செய்து பாருங்கள். அந்த காலத்திற்கு திரும்பி ச்சென்று என்ன நடந்தது என பார்க்க முடிந்தால் எப்படி இருக்குமோ, அத்தகைய சாத்தியத்தை பெருவெடிப்புக்கு பின் உண்டான ஒளியை பார்ப்பதாலும் அறிந்து கொள்ள முடியும்.
இந்த பணியை ஜேம்ஸ் வெப் நிறைவேற்றும் என்பது அறிவியல் நம்பிக்கை. பெருவெடிப்புக்கு பின் நிகழ்ந்த முதல் ஒளியில் இருந்து பிரபஞ்சம் பிறந்தது என்பது சரி தான். ஆனால், எப்போதோ, எங்கேயோ நிகழந்த அந்த ஒளியை இப்போது எப்படி பார்ப்பது சாத்தியம்? என்று கேட்கலாம். சாத்தியம் தான். ஏனெனெனில் மற்ற ஒளிகளுக்கும் ஆதி ஒளிக்கும் வேறுபாடு இருக்கிறது.
மற்ற ஒளிகள் குறிப்பிட்ட ஓரிடத்தில் இருந்து வருபவை. எனவே அவை ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு வந்ததும் அவற்றின் பயணம் முடிந்துவிடும். ஆனால் ஆதி ஒளி அப்படியில்லை. அது ஓரிடத்தில் இருந்து தோன்றவில்லை. மாறாக அப்போது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இடத்திலும் தோன்றியது. எனவே அதன் ஒளிர்வு எப்போதும் பிரபஞ்சத்தில் இருந்து கொண்டே இருக்கும். எல்லையில்லாமல் விரிவடைந்து கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் அதன் கீற்றுகள் இன்னமும் வந்து கொண்டே இருக்கின்றன. இனியும் வரும் என்கின்றனர்.
இந்த கீற்றினுள் இருக்கும் ஒளித்துகளை ஜே,ஸ் வெப் தொலைநோக்கியால் பார்க்க முடிந்தது என்றால் மனிதகுலத்தால் காலத்தில் பின்னோக்கி பார்த்து பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு சென்றுவிட முடியும். இதன் மூலம் உயிர்கள் வந்த கதையை தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் இது சுலபம் இல்லை. தொலைநோக்கியின் கண்ணாடியின் வெப்பமே ஆதி ஒளியின் சமிஞ்சைகளை சிதறடித்துவிடலாம். எனவே அது எப்போதும் உரை பனிக்கும் கீழான குளிர் நிலையில் இருக்க வேண்டும். இதை சாத்தியமாக்குவதற்கான சன்ஷீல்டு கவசத்துடன் தொலைநோக்கி சென்றுள்ளது. இந்த கவசம் பிரதான கண்ணாடியை பாதுகாக்க அது தனது தேடலை மேற்கொள்ளும்.
இதற்கு தேவையான உபகரணங்களையும், கண்ணாடிகளையும், இன்னும் பிற பொருட்களையும் நுட்பமாக வடிவமைத்து ராக்கெட் மூலம் பூமியில் இருந்து லட்சக்கணக்கான மைல்கள் தொலைவில் பொருத்தியுள்ளனர். பொட்டலம் போல மடித்து அனுப்பி வைக்கப்பட்ட இந்த கண்ணாடிகள், சூரிய கவசம் எல்லாம், அங்கே தானாக பிரிந்து அழகாக செட்டிலாகி பணிக்கு தயாராகிவிட்டன.
இவை எல்லாம் சரியாக நடந்தோறுமா என படபடப்புடன் காத்திருந்த விஞ்ஞானிகள் பூர்வாங்க பணிகள் கச்சிதமாக நிறைவேறியிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி, தொலைநோக்கி பிரபஞ்ச ரகசியத்தை தேட இருக்கிறது. காத்திருப்போம் அறிவியல் திறந்துவிடக்கூடிய புதிய வாயில்களுக்காக!
–