வேர்ட்லே வெற்றிக்கதை- காதலிக்கான உருவாக்கப்பட்ட வார்த்தை விளையாடு.

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் வேர்ட்லே (Wordle ) விளையாட்டு இன்னமும் பெரிதாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. வேர்ட்லே விளையாடும் பயனாளிகளின் எண்ணிக்கை பெருகி கொண்டே இருக்கிறது என்றால், இந்த விளையாட்டு ஏன் இத்தனை பிரபலமாக இருக்கிறது எனும் ஆய்வும், அலசமும் தீவிரமாகி கொண்டிருக்கிறது. இதனிடையே முன்னணி ஊடகமான நியூயார்க் டைம்ஸ் வேர்ட்லேவை விலை கொடுத்து வாங்கியிருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற ஊடகமான நியூயார்க் டைம்ஸ் செய்திகளுக்காக மட்டும் அல்லாமல், அதன் குறுக்கெழுத்து புதிர்கள் மற்றும் ஸ்பெல்லிங் விளையாட்டிற்காகவும் அறியப்படுகிறது. ஆனால், வேர்ட்லே விளையாட்டை நியூயார்க் டைம்ஸ் விலைக்கு வாங்கும் என்பது கொஞ்சம் எதிர்பாராத திருப்பம் தான்.

நியூயார்க் டைம்ஸ் வசமான பிறகு வேர்ட்லே விளையாட்டின் எளிமையும், தூய்மையும் பாதுகாக்கப்படுமா என்று பயனாளிகளும், வல்லுனர்களும் விவாதிக்கும் அளவுக்கு வேர்ட்லே விளையாட்டு செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது.

இணையத்தில் இதற்கு முன்னரும் பல விளையாட்டுகள் வைரலாகி பிரபலமாகி இருக்கின்றன. செல்போன் மூலம் எழுச்சி பெற்ற ஆங்ரிபேர்டு, எளிமையாக இருந்தாலும் வெற்றி பெறுவதை கடினமாக்கிய ஃபிளாப்பி பேர்டு, சமூக தன்மை கொண்ட பார்ம்வில்லே என பல விளையாட்டுகளை உதாரணமாக சொல்லலாம்.

தினம் ஒரு வார்த்தை

ஆனால் இணையத்தை இதற்கு முன்னர் கலக்கிய எந்த விளையாட்டும் இந்த அளவு துரிதமாக வளர்ச்ச்சி பெற்றதில்லை என சொல்லும் அளவுக்கு வேர்ட்லேவின் வெற்றி அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் இந்த விளையாட்டு அடிப்படையில் எளிமையானது. ஒரு வார்த்தையை யூகிக்க வேண்டும். தினம் ஒரு வார்த்தை மட்டும் தான். அவ்வளவு தான் இந்த விளையாட்டு.

இந்த எளிமையை மீறி வேர்ட்லே பெரும் வெற்றி பெற்றுள்ளதோடு இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதை வாங்கியுள்ள நியூயார்க் டைம்ஸ், தனது வாசகர் பரப்பை மேலும் பெருக்கி கொள்ள இந்த விளையாட்டை முக்கியமாக கருதுவதாகவும் தெரிகிறது.

வேர்ட்லே விளையாட்டு ஏன் இந்த அளவு பிரபலமானது என்பதை பார்ப்பதற்கு முன், இந்த விளையாட்டு உருவான கதையை தெரிந்து கொள்ளலாம். இது சுவாரஸ்யமான ஒரு காதல் கதை!

மென்பொருள் வல்லுனர்

ஜோஷ் வார்ட்லே (Josh Wardle) எனும் மென்பொருளாலர் தான் இந்த விளையாட்டை உருவாக்கினார். பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தைச்சேர்ந்த வார்ட்லே அமெரிக்காவின் நியூயார்க்கில் செட்டிலாகி விட்டார்.

மென்பொருளாலரான வார்ட்லே, சொந்தமாக இணைய சேவைகளையும் உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவர். ஆனால், தான் உருவாக்கும் இணைய சேவைகள் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் எனும் வழக்கம் கொண்டவர். மற்றபடி வர்த்தக வெற்றிக்கு அல்லது கோடிகளை குவிக்க நினைத்தெல்லாம் சேவைகளை உருவாக்குபவர் அல்ல.

வேர்ட்லேவை உருவாக்குவதற்கு முன் அவர் உருவாக்கிய ’பட்டன்’ போன்ற விளையாட்டுகள் இந்த ரகம் தான். இந்த நிலையில் அவர் அதிகம் திட்டமிடாமல் உருவாக்கியது தான் வேர்ட்லே வார்த்தை விளையாட்டு. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த விளையாட்டை அவர் உருவாக்கினார்.

காதல் விளையாட்டு

உண்மையில், இந்த விளையாட்டை அவர் தனக்காகவும், தனது காதலிக்காகவும் உருவாக்கினார். அவரது காதலில் பாலக் ஷாவுக்கு குறுக்கெழுத்து புதிர்கள் மிகவும் பிடித்தமானது. ஸ்பெல்லிங் விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர். கோவிட்-19 பெருந்தொற்று சூழலில் வீட்டிலேயே முடங்கி கிடந்த போது, காதலியின் அலுப்பை போக்குவதற்காக வார்ட்லே, புதிய வார்த்தை விளையாட்டை உருவாக்கத்தீர்மானித்தார்.

இப்படி உருவானது தான் வேர்ட்லே விளையாட்டு. காதலிக்காக உருவாக்கிய விளையாட்டு என்பதால் அதை எளிமையாகவே வடிவமைத்திருந்தார். தினம் ஒரு வார்த்தையை யூகிக்க வைக்கும் வகையில் இந்த விளையாட்டு அமைந்திருந்தது. குறுக்கெழுத்து புதிர்கள் போல அல்லாமல், ஒரு விளையாட்டின் தன்மையோடு இது அமைந்திருந்தது.

வேர்ட்லேவில் என்ன புதுமை என்றால், எந்தவித துப்பும் இல்லாமல் தான் இந்த விளையாட்டை துவங்க வேண்டும். வார்த்தையை யூகிக்கும் முயற்சியில் அதற்கான வழிகாட்டுதல்கள் தோன்றும் வகையில் விளையாட்டு இருந்தது.

ஜோஷ் வார்ட்லே இந்த விளையாட்டை பொதுவெளியில் அறிமுகம் செய்யவும் நினைத்திருக்கவில்லை. தானும், காதலியும் விளையாடு மகிழ்ந்ததோடு, வாட்ஸ் அப் குழுவில் இருந்த நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்ந்து கொண்டார். அவர்களில் பலரும் வேர்ட்லே விளையாட்டில் ஆர்வம் கொள்ளவே, ஜோஷ் அதை இணையத்தில் வெளியிட தீர்மானித்தார்.

எளிய அறிமுகம்

2021 அக்டோபர் மாதம் இந்த விளையாட்டு அறிமுகமான போது, நூறு பேருக்கும் குறைவாகவே அதை விளையாடினர். ஆனால் அடுத்த சில மாதங்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை நெருங்கி, அதன் பிறகு பல லட்சமாக பெருகியது. வேர்ட்லே வைரலாகி திடிரென பார்த்தால் இணையத்தில் திரும்பிய இடமெல்லாம் இந்த விளையாட்டாக இருந்தது.

இந்த இடத்தில் இன்னொரு கிளைக்கதையையும் பார்க்கலாம். வேர்ட்லேவை உண்மையில் ஜோஷ் 2013 ம் ஆண்டே உருவாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது நண்பர்களுக்கு ஈர்ப்புடையதாக இல்லாததால் அப்படியே விட்டுவிட்டார்.

பின்னர், கோவிட் சூழலில் காதலில் பாலக் ஷாவின் அலுப்பை போக்கை இந்த விளையாட்டை மீண்டும் கையில் எடுத்தார். பாலக் ஷா, இந்த விளையாட்டின் முதல் பயனாளி என்பதோடு, இந்த விளையாட்டு மெருகேறுவதிலும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

வைரல் வெற்றி

ஐந்து எழுத்து கொண்ட ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிக்கும் விளையாட்டு என்பது மைய எண்ணமாக அமைந்தாலும், இத்தகைய ஐந்து எழுத்து ஆங்கிய வார்த்தை பட்டியலில் இருந்து கடினமான வார்த்தைகள் எல்லாம் நீக்கப்பட்டு விளையாட்டிற்கு ஏற்ற வார்த்தைகளை தேர்வு செய்ய பாலக் ஷா தான் உதவியதாக வார்ட்லே காதலோடு ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

வேர்ட்லே விளையாட்டை ஜோஷ் திட்டமிட்டு எளிமையாகவே வைத்திருந்தார். தினம் ஒரு வார்த்தை கணிப்பைத்தவிர அதில் எந்த கூடுதல் அம்சமும் இருக்கவில்லை. அதன் பின்னணியும் தோற்றமும் கூட எளிமையாகவே இருந்தது.

செயலி வடிவிலான விளையாட்டுகள் பிரபலமாக விளங்கும் சூழலிலும், ஜோஷ் இந்த விளையாட்டை செயலி வடிவில் அறிமுகம் செய்யாமல் இணையதளத்திலேயே அறிமுகம் செய்தார். மேலும் நோட்டிபிகேஷன் போன்ற அம்சங்களை எல்லாம் தவிர்த்துவிட்டார்.

பயனர்களின் தரவுகள் அறுவடையில் எல்லாம் கவனம் செலுத்தாமல் உற்சாகமான ஒரு விளையாட்டை மட்டுமே அளித்தார். அவ்விதமே இந்த விளையாட்டை தொடரவும் விரும்பினார்.

பின் வேர்ட்லே பிரபலமானது எப்படி?

ஒருவிதத்தில் அதன் எளிமையே வேர்ட்லேவுக்கு பலமாக அமைந்தது. மற்ற இணைய விளையாட்டுகள் போல அல்லாமல், தினம் ஒரு வார்த்தை என இருந்ததால் பயனாளிகள் இதை மிகவும் விரும்பினர். மணிக்கணக்கில் நேரத்தை செலவிடாமல் ஜாலியாக இதை விளையாடி மகிழ்ந்தனர்.

சமூக தன்மை

பலரும் சமூக ஊடகங்களில் நேரத்தை வீணடிப்பதை விட வேர்ட்லே தங்களுக்கு உற்சாகம் அளிப்பதாக உணர்ந்தனர். ஆனால் வேர்ட்லே விளையாட்டை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் வசதி இருந்தது. வார்த்தையை கண்டுபிடிப்பதற்கான வழிகளை கசிய விடாமல், இந்த விளையாட்டை பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

இப்படி பலரும் டிவிட்டரில் பகிர்ந்து கொண்ட தகவலே வேர்ட்லே மீது முதல் கட்ட ஈர்ப்பை உண்டாக்கியது. அதன் பிறகு, மேலும் பலர் இந்த விளையாட்டை ஆடத்துவங்கி அது பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளத்துவங்கிய நிலையில் வேர்ட்லே வைரலானது.

வேர்ட்லே பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த நிலையிலும் கூட ஜோஷ் அதில் கூடுதல் அம்சங்களை அல்லது வர்த்தக தன்மையை சேர்க்காமல் எளிமையாகவே வைத்திருந்தார்.

இதனிடையே வேர்ட்லே விளையாட்டு தொடர்பான அல்சலகளும், இதில் வெளியாகும் வார்த்தையை யூகிப்பதற்கான வழிகளும் வெளியாகத்துவங்கவே இதன் செல்வாக்கு அடுத்த கட்டத்திற்கு சென்றது. இந்நிலையில் தான் நியூயார்க் டைம்ஸ் வசமாகி இருக்கிறது.

இந்த விளையாட்டை அதன் பழைய தன்மையோடு வைத்திருப்போம் என நியூயார்க் டைம்ஸ் உறுதி அளித்தது. தற்போது வேர்ட்லே வார்த்தைகள் கடினமாகிவிட்டதாக ஒரு புகார் எழுத்து இது தொடர்பான மீம்களும் உலா வரத்துவங்கியிருக்கின்றன. அதாவது வேர்ட்லே அலை வீசிக்கொண்டே இருக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *