ஓடிடி அல்லது ஸ்டீரிமிங் முறையில் படம் பார்ப்பது என்றால், நெட்பிளிக்சையும், அமேசான் பிரைமை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதாது. இவற்றுக்கான மாற்று சேவை என ஹாட்ஸ்டாரையும், ஜீ5 போன்றவற்றை எல்லாம் கடந்து, சுயேட்சை படங்கள் அல்லது அருமையான ஆவணப்படங்களை பார்ப்பதற்கான பிரத்யேகமான ஸ்டீரிமிங் தளங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
ஹாலிவுட், பாலிவுட்- கோலிவுட்டின் அண்மை வெளியீடுகளை பார்ப்பதற்கான தளங்கள் போலவே, ஆவணப்படங்களை உடனுக்குடன் பார்த்து ரசிப்பதற்கான சேவையாக ஓவிட்.டிவி (https://www.ovid.tv/ ) தளம் அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் ஆவணப்படங்களை விநியோக்கிக்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில், சுயேட்சை உலகின் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.
வாழ்க்கையை பார்க்க வேறு லென்ஸ் தேவைப்படும் போது உதவும் தளம் என கவித்துவமான அறிமுகம் வாசகத்தை கொண்டுள்ள இந்த தளம், நல்ல ஆவணப்படங்களை தேடித்தேடி பார்ப்பவர்களுக்கானது. கட்டணச்சேவையாக இதை வழங்குகிறது.
இதே போலவே சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆவணப்படங்களுக்கான வாட்டர்பியர் தளம் பற்றி ஏற்கனவே இணையமலர் செய்தி மடலில் எழுதியிருக்கிறேன்.
நெட்பிளிக்ஸ் பழக்கத்தை பகடி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதுமையான நெஸ்ட்பிளிக்ஸ் தளம் பற்றியும் இணையமலரில் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
திரைப்படங்களுக்குள் வரும் திரைப்படங்களை நெட்பிளிக்ஸ் பாணியில் நெஸ்ட்பிளிக்ஸ் தளம் பட்டியலிடுகிறது. இதன் கருத்தாக்கத்தில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், மூவிஸ் இன் அதர் மூவிஸ் (https://moviesinothermovies.com/ ) எனும் வலைப்பதிவு, இத்தகைய கற்பனை படங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.