அழிந்த நகரம் என பொருள் தரும் டெஸ்ட்ராய்டு சிட்டியை (destroyed city) ஒருவர் இணையத்தில் தேடி பார்ப்பதற்கான சாத்தியம் இருக்கும் அளவுக்கு நீக்கப்பட்ட நகரம் எனும் டெலிடட் சிட்டியை (“Deleted City” ) தேடிப்பாப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் நகரங்கள் அழிக்கப்படும் வரலாற்று உண்மையை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இணைய யுகத்து கருத்தாக்கமான நீக்கப்படுவதை ( Delete ) நகரங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ளும் மனம் நமக்கு இன்னும் வாய்க்கவில்லை.
எனவே, ’டெலிடட் சிட்டி.நெட்’ (http://deletedcity.net/ ) இணையதளத்தை ஒருவர் கூகுள் நேர் தேடலில் கண்டறிய வாய்ப்பு மிக குறைவு. தற்செயலிலும் தற்செயகாக நிகழலாமேத்தவிர, தேவை அறிந்து ஒருவர் இந்த குறிச்சொல்லை பயன்படுத்துவதற்கில்லை.
டெலிடட் சிட்டி இணையதளத்தை ஒருவர் கண்டறிய வேண்டும் எனில் முதல் ஜியோசிட்டிஸ் (GeoCities) இணையதளம் பற்றி அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் மட்டும் போதாது, ஜியோசிட்டீஸ் மீது அக்கரை கொண்டிருக்க வேண்டும் அல்லது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்க வேண்டும்.
ஜியோசிட்டிஸ் காலாவதியான இணையதளமோ அல்லது ஒரு காலத்தில் இணையத்தில் கோலோச்சி பின்னர் வழக்கொழிந்து போன இணையதளமோ அல்ல. இணைய வரலாற்றின் மைல்கல்லாக மட்டும் அல்லாமல், அதன் ஆரம்ப அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்கும் தளம்.
பேஸ்புக்கை டிக்டாக்கும் ஸ்னேப்சேட்டும் பின்னுக்குத்தள்ளி வரும் காலத்தில் இணைய அகழ்வராய்ச்சி மூலம் தான் ஜியோசிட்டிஸ் பற்றி அறிய முடியும். மறக்கப்பட்ட ஜியோசிட்டிசை அகழ்வராய்ச்சி செய்யும் தேவை வெகு சிலருக்கே இருக்கலாம் என்றாலும், இணைய வரலாற்றை பொருத்தவரை ஜியோசிட்டிசை சிந்து சமவெளி நாகரீகத்துடன் ஒப்பிடலாம். அதன் இடம் அத்தனை முக்கியமானது.
ஜியோசிட்டிசின் முக்கியத்துவம் காரணமாக, சமூக ஊடகத்தின் ஆதிவரலாற்றை புரிந்து கொள்ள முற்படும் போது, இந்த தளமும் சமூக ஊடகத்தின் கீழ் வருமா எனும் கேள்வி எழுகிறது. இந்த கேள்வியை தேடிப்பார்க்கும் போது, இன்றைய சமூக ஊடகத்திற்கு முன்னோட்டமாக அமைந்த ஆரம்ப கால இணைய சேவைகளில் ஒன்றாக ஜியோசிட்டிஸ் முன்னிறுத்தப்படுவதை அறிய முடிகிறது.
இங்கு ஜியொசிட்டிஸ் பற்றி சுருக்கமான அறிமுகம்:
ஜியோசிட்டிஸ் 1995 ல் அறிமுகமான சேவை. வலையேற்பு ஏன புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இலவச வெப் ஹோஸ்டிங் வசதியை வழங்கி இணையவாசிகள் தங்களுக்கான வலை மனையை இணையத்தில் உருவாக்கி கொள்ள வழி செய்த சேவை. இதன் பயனாக அந்த காலத்தில் யார் வேண்டுமானாலும் செலவில்லாமல் சொந்த இணையதளம் அமைத்து அதில் தாங்கள் விரும்பிய தகவல்களை இடம்பெற வைக்க முடிந்தது.
வடிவமைப்பு நோக்கிலும் சரி, உள்ளடக்க நோக்கிலும் சரி ஜியோசிட்டிஸ் மூலம் உருவாக்கப்பட்ட தளங்களை மொச்சிக்கொள்ள முடியாது என்றாலும், எச்.டி.எம்.எல் (HTML ) மொழி தெரியாத நிலையிலும் சாமானியர்கள் தங்களுக்கான இணையதளத்தை அமைத்துக்கொள்ள வழி செய்தத்தை ஜியோசிட்டிஸ் செய்த புரட்சி எனலாம். ஜியோசிட்டிசோடு உண்டான, ஏஞ்சல்பயர் (Angelfire ) , டிரைபாடு (Tripod) போன்ற சேவைகளையும் மறந்துவிடக்கூடாது.
ஆக, சொந்த இணையதளம் அமைத்துக்கொள்வதை சாத்தியமாக்கி, சக இணையவாசிகளோடு கருத்து பரிமாற்றம் செய்ய வழி செய்ததால் ஜியோசிட்டிசை, இணைய தகவல் தொடர்பை மையமாக கொண்ட சமூக ஊடக தளங்களின் வரிசையில் முன்னோடியாகவே கருத வேண்டும்.
நிற்க, இந்த ஜியோசிட்டிஸ் புராணம் எதற்காக என்றால், ஜியோசிட்டிஸ் சமூக ஊடகமா? என தேடும் போது, எதிர்படும் கட்டுரைகளை அலசி ஆராய்ந்து உள்ளே சென்று பார்க்கும் போது தான், குறிப்பிட்ட ஒரு கட்டுரையில் அடிக்குறிப்புகளில் டெலிடட்சிட்டி தளம் (http://deletedcity.net/ ) பற்றி அறிய முடிகிறது. ஜியோசிட்டிசின் பழைய பெருமையை அழியாமல் காப்பாற்றி வரும் இணைய காப்பக சேவைகளில் ஒன்றான இந்த தளம் பற்றி தனியே அறிமுகம் செய்யலாம். இந்த தளத்தை பற்றி எழுதாமல், இப்படி நீட்டி முழக்குவதற்கான காரணம், கூகுள் நேர்த்தேடலில் இதை அறிய வாய்ப்பில்லை என்பதை சுட்டிக்காட்ட தான்.