இசை உலகில் ’டான்’ஸ் டியூன்ஸ்’ (https://www.donstunes.com/) இணையதளத்திற்கு என்ன இடம் என்று தெரியவில்லை. ஆனால், முதல் பார்வையிலேயே இந்த தளம் அசர வைப்பதாக இருக்கிறது. அந்த வகையில் இந்த தளத்தை ஆகச்சிறந்த இசை தளங்களில் ஒன்று என வர்ணிக்கலாம்.
டானின் மெட்டுக்கள் என புரிந்து கொள்ளக்கூடிய இந்த தளத்தில் என்ன சிறப்பு என்பதை பார்ப்பதற்கு முன், இந்த தளத்தை சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளலாம்.
ப்ளுஸ் மற்றும் ஜாஸ் என அழைக்கப்படும் மேற்கத்திய இசை வடிவங்களில் உள்ள இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்வதற்கான இணையதளம் இது. டான் எனும் இசை ஆர்வலர் இந்த தளத்தை நடத்தி வருகிறார். அதிகம் அறியப்படாத ப்ளுஸ் மற்றும் ஜாஸ் இசைக்கலைஞர்களை தேடி கண்டறிந்து அறிமுகம் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளார்.
இசை உலகில் எப்போதும் நட்சத்திர கலைஞர்களே கொண்டாடப்படுகின்றனர். இசை உலகம் என்றில்லை, இலக்கிய உலகம் உள்ளிட்ட இன்னும் பிறவற்றிலும் இதே நிலை தான். ஏற்கனவே பிரபலமான கலைஞர்கள் பற்றி பேசுவதும் வியப்பதும் இயல்பானது தான் என்றாலும், அந்த இடத்தை அடைய கலைஞர்கள் பட்ட பாடும், தற்போதுள்ள இளம் கலைஞர்கள் படும் பாடும் அதிகம் பேசப்படாதவையாகவே இருக்கின்றன.
இந்த இடத்தில் தான் திருவாளர் டான் கம்பீரமாக தெரிகிறார். இசை உலகில் கவனிக்கப்பட வேண்டிய திறமையாளர்களை அவர் கண்டறிந்து சொல்கிறார். ப்ளுஸ் மற்றும் ஜாஸ் இசை வடிவங்களில் அவருக்கு ஆர்வமும், திறமையும் இருப்பதாக அனுமானிக்க முடிவதால், இவற்றைக்கொண்டு அறியப்படாத கலைஞர்களை தனது தளம் மூலம் அறிமுகம் செய்கிறார்.
அறியப்படாத இசை கலைஞர்களை அறிமுகம் செய்யும் தன்மையை உணர்த்தும் வகையில், தனது தளத்திற்கு டானின் மெட்டுக்கள் என பெயர் வைத்துள்ளார். இவர்கள் எல்லாம் என் அறிமுகங்கள் என சொல்லும் தனிப்பட்ட நல் செருக்கு இதில் இருக்கிறது அல்லவா!
டான்ஸ் டியூன்ஸ் என்பது இசை சார்ந்தது, ஒலி சார்ந்தது என்றும் தனது தளத்தில் உற்சாகமாக குறிப்பிட்டிருக்கிறார்.
தனிநபர் ஒருவர் இப்படி இசை கலைஞர்களை அறிமுகம் செய்யும் பணியை மேற்கொள்வது இணையம் தந்த சாத்தியங்களில் ஒன்றாக அமைவதை உணரலாம். டான் பத்தாண்டுகளுக்கும் மேலாக, இளம் இசைக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இளம் திறமையாளர்களை கண்டறிந்து யூடியூப் மூலம் அவர்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தவர் இதற்கென தனி இணையதளத்தையும் அமைத்திருக்கிறார். கண்டறியப்படும் இசை கலைஞர்களை தனது யூடியூப் சேனல், ஸ்பாட்டிபை பாட்டு பட்டியல் ( பிலே லிஸ்ட்) மற்றும் சமூக ஊடக பக்கங்களில் முன்னிறுத்துவதாகவும் டான் குறிப்பிடுகிறார்.
அதிகம் அறியப்படாத ஆனால் மிகுந்த திறமை கொண்ட கலைஞ்ர்கள் முன்னிறுத்துவது தனது ஈடுபாடு என்றும் டான் குறிப்பிடுகிறார். தேர்ந்த ஒலி ரசிகராக, உண்மையான உண்ர்வுடன் இதை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இனி இணையதளத்தின் உள்ளடக்கத்திற்கு வருவோம். அண்மை மெட்டுகள், ஜாசில் சிறந்தவை மற்றும் விஸ்கி ப்ளு தொகுப்புகள் ஆகிய தலைப்புகளில் இசை அறிமுகம் செய்யப்பட்டிருபதோடு, தனியே இசை கலைஞர்களுக்கான அறிமுகம் இடம்பெற்றுள்ளன.
இசை கலைஞர்கள் பக்கத்தில் அவர்கள் பற்றிய அறிமுகத்துடன், அவர்கள் இசை பற்றி குறிப்பிடப்பட்டு இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஜாஸ் பிரியர்கள் புதிய இசை கலைஞர்களை கண்டறிந்து மகிழலாம்.
தளத்தின் கீழ் பக்கத்தில் டானின் ஸ்பாட்டிபை பாட்டு பட்டியல்கள் மற்றும் இதர தொகுப்புகளை காணலாம். இசை ஜாம்பவான்கள் அறிமுக பட்டியலில் தனியே இருக்கிறது.
அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமையான வடிவமைப்புடன், தெளிவான உள்ளடக்கத்துடன் இந்த தளம் கவர்கிறது. அதனளவில் முழுமையான தளம் என்றே சொல்லலாம். இந்த தளத்திற்கு ஆதாரமாக இருபது ஒரு தனி இசை ஆர்வலரின் ஆற்றல் எனும் போது வியப்பாக இருக்கிறது.
அதற்கேற்ப, நீங்கள் இசை கலைஞர் அல்லது இசை நிறுவனம் என்றால், என்னோடு தொடர்பு கொள்ளுங்கள், இசையை சமர்பியுங்கள் என்றும் டான் தனது அறிமுக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.