காலத்தினால் செய்த உதவி என்பதை போல, கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட தளங்களின் வரிசையில் வருகிறது ’கொரோனாஹண்ட்’ தளம் (https://coronahunt.app/) . அதோடு கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட தளங்களில் இன்னமும் அணுக கூடியதாக இருக்கும் தளமாகவும் இது விளங்குகிறது.
கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைக்கத்துவங்கிய கட்டத்தில் 2020 ஏப்ரல் மாதம் இந்த தளம் அமைக்கப்பட்டது. உலக நாடுகளும், பெரும்பாலான மக்களும் கொரோனாவின் தீவிரத்தை இன்னும் உணர்ந்திராத நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளை தொகுத்தளிக்கும் வகையில் இந்த தளம் அமைந்தது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களை சேகரித்து வரைபடமாக அளித்தது இந்த தளம். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, சிகிச்சையில் இருப்பவர்கள், மீண்டவர்கள், பலியானவர்கள் என இந்த தகவல்களை அளித்ததோடு, உலக வரைபத்தின் மீதும் இந்த தகவல்களை பொருத்தி பார்க்க வைத்தது.
உலக அளவிலான விவரங்கள் தவிர, ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பட்ட பாதிப்புகளையும் இந்த தளம் அளித்தது.
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக தற்காப்பு நடவடிக்கையே முதல் தேவை என உணரப்பட்ட சூழலில், இந்த தளம் தரவுகளின் வாயிலாக வைரஸ் பாதிப்பை உணர்த்திக்கொண்டிருந்தது.
இது சாதாரண வைரஸ் தான் என்பது போல பலரும் கருதிக்கொண்டிருந்த நிலையில், எத்தனை பெரிய நெருக்கடியை உலகம் எதிர்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்திய தளங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.
லுகாஸ் மற்றும் பிரான்கோ மால்டோனாடோ சகோதரர்கள் இணைந்த இந்த தளத்தை உருவாக்கினர். கொரோனா பெருந்தொற்று சூழலில் மக்களுக்கு உதவ ஏதாவது செய்ய நினைத்து இந்த தளத்தை அமைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டிஷர்ட் உருவாக்கத்தில் ஈடுபட நினைத்து அதன் பிறகு கொரோனா தரவுகளுக்கான இந்த தளத்தை அமைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பத்து நாட்கள் இடைவிடாமல் பாடுபட்டு இந்த தளத்தை உருவாக்கியுள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து கொரோனா தகவல்களை உருவி எடுத்து ஒரே இடத்தில் தொகுத்தளிக்கும் தளத்தை செயல்படுத்த இந்த தீவிர உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது.
கோவிட்-19 தொடர்பான மிகவும் துல்லியமான மற்றும் அண்மை தரவுகளை கொண்ட தளத்தை அமைக்க வேண்டும் என்பது தங்கள் நோக்கமாக இருந்தது என்றும் கூறியுள்ளனர்.