டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கமில்லா சமூகத்தை மையமாக கொண்ட கட்டுரைகளிலேயே கவனம் செலுத்தியதால், பிட்காயின் பகுதியை சேர்க்க முடியவில்லை.
இப்போது, இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பரவலாகி, ரிசர்வ் வங்கி தரப்பில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிட்காயின் பற்றி தனியே எழுத தோன்றுகிறது. இப்போதைக்கு, பிட்காயினுக்கும் டிஜிட்டல் ரூபாய்க்குமான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் மட்டும் பார்க்கலாம்.
பிட்காயின் பரவலாக அறியப்பட்டது போல, கிரிட்போ பணம் அல்லது நாணயம். டிஜிட்டல் ரூபாய் என்பது டிஜிட்டல் நாணயம்.
கிரிட்போ பணமும், டிஜிட்டல் பணமும் ஒன்றா, வேறுபட்டதா என்பது தொழில்நுட்பம் சார்ந்த கேள்வி. டிஜிட்டல் டோக்கனை அடிப்படையாக கொண்டது என்பது பிட்காயினுக்கும், டிஜிட்டல் ரூபாய்க்கும் பொதுவான அம்சம். இரண்டுமே அடிப்படையில் குறியீடுகளின் தொகுப்பு.
ஆனால், பிட்காயின், மையமில்லாதது மற்றும் இடைத்தரகர் அமைப்பு இல்லாதது. டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி வெளியிடுவதால் அது மையமாக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படுவது. இரண்டுமே பிளாக்செயின் அடிப்படையில் செயல்படுபவை என்றாலும், பிட்காயின் பிளாக்செயின் பொதுவெளியில் இருப்பது, டிஜிட்டல் ரூபாய், தனி பிளாக்செயினில் இருப்பது.
பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்கள், எந்த ஒரு மைய அமப்பாலும் வெளியிடப்படாதவை மற்றும் கட்டுப்படுத்தப்படாதவை என்பது தான் அவற்றின் ஆதார அம்சம். எனவே தான் அவை புதுவிய பணமாக அமைகின்றன. மாறாக, டிஜிட்டல் ரூபாய் போன்ற, மத்திய வங்கி டிஜிட்டல் பணம் அனைத்துமே, பிட்காயினின் தொழில்நுட்ப அடிப்படைகளை கொண்டிருந்தாலும், மையமான தன்மையால் அவற்றுக்கு நேர் எதிரான அம்சத்தை கொண்டுள்ளன.
ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிகள் டிஜிட்டல் ரூபாயை கொண்டு வருவது ஒரு விதத்தில் பிட்காயினுக்கு கிடைத்த வெற்றி எனலாம்.
பிட்காயினுக்கும், டிஜிட்டல் ரூபாய்க்குமான முக்கிய வேறுபாடு, இந்திய இ-ரூபாய் மின்னணு வடிவிலான ரூபாய் என்பது தான். அதாவது அது அச்சு அசல் ரூபாய். டிஜிட்டல் வடிவில் குறியீடாக இருக்கிறது. மற்றபடி அதை ரூபாய் போலவே பயன்படுத்தலாம். ரூபாய்க்கு நிகராக பயன்படுத்தலாம். இந்திய அரசின் இரையாண்மை உண்டு. அதன் கட்டுப்பாடும் உண்டு. பிட்காயின் அப்படி அல்ல, அது உண்மையான மெய் நிகர் பணம்.
இந்த இடத்தில், டிஜிட்டல் ரூபாய்க்கும், கூகூள் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைக்குமான வேறுபாட்டையும் அறிவது அவசியம். டிஜிட்டல் ரூபாய் இந்திய ரூபாயின் டிஜிட்டல் வடிவம். ஆனால், ஜிபே போன்றவை பணம் அல்ல, பண பரிவர்த்தனை சேவைகள். ரூபாயை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்து கொள்கிறோம் அவ்வளவு தான். மற்றபடி ரூபாய் தான் அடிப்படை பணமாக வங்கிகள் இருக்கிறது.
ஆனால், டிஜிட்டல் ரூபாயில், நாம் உண்மையில் டிஜிட்டல் வடிவில் ரூபாயை கையாள்கிறோம். நிதி நோக்கில் இது நிச்சயம் பாய்ச்சல் தான்.
—