டக்டக்கோவிலும் ஏ.ஐ தேடல் வசதி

’வாத்து உதவியாளர்’ என்பது உங்களை ஈர்க்காமல் இருந்தாலும், டக்டக்கோ தேடியந்திரத்தை அறிந்தவர்களுக்கு இது நிச்சயம் ஈர்ப்புடையதாக இருக்கும். ஏனெனில், டக்டக்கோ தேடியந்திரமும் ஏ.ஐ சார்ந்த தேடல் வசதியை வழங்க துவங்கியிருப்பதன் அடையாளம் தான் இந்த வாத்து உதவியாளர் சேவை.

டக்டக்கோ, கூகுளுக்கான மாற்று தேடியந்திரங்கள் வரிசையில் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருக்கும் தேடியந்திரம். கூகுள் போல, பயனாளிகள் தேடல் நடவடிக்கைகளை பின் தொடராமல், தகவல்களை சேமிக்காமல் தனியுரிமை அம்சம் கொண்ட தேடல் அனுபவத்தை அளிப்பது டக்டகோவின் தனித்தன்மையாக இருக்கிறது.

தனியுரிமை பாதுகாப்பு தவிர, பல்வேறு புதுமையான தேடல் அம்சங்களையும் டக்டக்கோ கொண்டிருக்கிறது. அதோடு தொடர்ந்து புதிய தேடல் அசம்ங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

இப்போது, சாட்ஜிபிடி வருகையால், இனி கூகுள் போன்ற தேடியந்திரங்கள் செல்வாக்கு இழக்கலாம் என சொல்லப்படும் சூழலில், பல்வேறு தேடியந்திரங்கள் கேள்வி பதில் திறன் கொண்ட ஏஐ நுட்பங்களை தங்கள் சேவையில் ஒருங்கிணைத்து வருவதன் தொடர்ச்சியாக டக்டக்கோவும் தனது தேடல் வசதியில் ஏஐ கேள்விபதிலை, இணைத்துள்ளது.

’டக் அசிஸ்ட்’ எனும் பெயரில் அறிமுகம் ஆகியுள்ள இந்த வசதி மூலம், பயனாளிகள் டக்டக்கோவில் தேடும் போது, ஏஐ அளிக்கும் பதிலை பெறலாம். ஆனால், எல்லா தேடலுக்கும் இது பொருந்தாது என்றும், நேரடியான பதில் சாத்தியமாக கூடிய கேள்வி வடிவிலான தேடலுக்கு மட்டுமே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏஐ அளிக்கும் பதில் சுருக்கமான முறையில் அமைந்திருக்கும். பெரும்பாலும், விக்கிபீடியா தரவுகளில் இருந்து பெறப்பட்டதாக இந்த சுருக்கம் அமைந்திருக்கும். சாட்ஜிபிடி பின்னே உள்ள ஓபன் ஏஐ மற்றும் அதன் போட்டி நிறுவனம் ஆந்த்ரோபிக் ஆகியவற்றின் ஏஐ நுட்பத்தை கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

டக்டக்கோ ஏற்கனவே தேடலுக்கு பொருத்தமான முடிவை முன்வைக்கும் உடனடி தேடல் வசதியை கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது டக் அசிஸ்ட் சேவை அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

டக்டக்கோ தேடலை முயன்று பாருங்கள்.

டக்டக்கோட் தொடர்பான முந்தைய பதிவுகள்:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *