வலைப்பதிவு உள்ளிட்ட சமூக ஊடகங்கள் எல்லோரையும் உள்ளட்ட உருவாக்குனர்களாக மாற்றியுள்ள நிலையில் இப்போது ஏஐ வீசும் ஏஐ அலை எல்லோரையும், எல்லாவற்றையும் உருவாக்கி கொள்ள வழி செய்வதாக அமைந்துள்ளது. அண்மை உதாரணம், கேஸெட்.ஏஐ (https://cassetteai.com/ ). இந்த தளம், உங்களுக்கான கனவு இசையை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள் என்கிறது.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படுவதாக சொல்லப்படும் இந்த தளத்தில் பயனாளிகள் தங்கள் தேவைக்கேற்ற இசையை உருவாக்கி கொண்டு காப்புரிமை கவலை இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். உருவாக்கப்படும் இசை, எந்த வகையில், எவ்வளவு கால அவகாசம் கொண்டதாக இருக்க வேண்டும், என்ன மனநிலையை பிரதிபலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களை பயனாளிகளே உள்ளீடு செய்து அதற்கேற்ற இசையை பெறலாம்.
சாட்ஜிபிடி போல, ஆனால் இசை உருவாக்கத்திற்கான சேவை என இதை புரிந்து கொள்ளலாம். அகில் டலோனி எனும் இளைஞர் தனது நண்பரோடு சேர்ந்து இந்த தளத்தை உருவாக்கி உள்ளார். இதன் பின்னே உள்ள ஏஐ நுட்பம், இவர்கள் உருவாக்கிய மூல நுட்பமா அல்லது, மற்ற ஏஐ சேவையை அடிப்படையாக கொண்டதாக எனத்தெரியவில்லை. ஆனால், ஏஐ உருவாக்கு தளத்தில் இன்னொடு தளமாக கவர்கிறது.