’பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா !’ என்பதை போல, மாற்று தேடியந்திரமான பிரேவ், பிங்கின் தளைகளில் இருந்து விடுபட்டு முழுமுதல் தேடியந்திரமாகி இருப்பதாக அறிவித்துள்ளது. நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய அறிவிப்பு தான். ஏனெனில், பிங்கின் தேடல் பட்டியலை சார்ந்திராமல் இனி பிரேவ் முழு சுதந்திரமாக இயங்கும்.
பிரேவின் இந்த அறிவிப்பு ஏன் முக்கியமானது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், பிரேவ் தேடியந்திரத்தை அறியாதவர்களுக்கும், அறிந்தும் அலட்சியம் செய்தவர்களுக்கும் பிரேவ் பற்றிய சுருக்கமான அறிமுகம் அவசியம்.
மாற்று தேடியந்திரங்களில் ஒன்றான பிரேவ், கூகுளைப்போல பயனாளிகளின் தரவுகளை அறுவடை செய்யாமல் அவர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. இந்த வகையில், தனியுரிமை சார்ந்த தேடியந்திரமான டக்டக்கோ வரிசையில் பிரேவ் வருகிறது.
பிரேவ் பிரவுசர்
தேடியந்திரமாக அறிமுகமாவதற்கு முன், இதே பெயரில் தனியுரிமை பாதுகாப்பு கொண்ட பிரவுசர் சேவையை பிரேவ் வழங்கி வருகிறது.
பிரேவ் ஆகச்சிறந்த பிரவுசரா என்று தெரியவில்லை. ஆனால், மாற்று பிரவுசர் என்ற முறையில் முக்கியமானது. தவிர இணைய உலாவலில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
பிரேவ் தேடல் சேவையும் கூகுளுக்கு மாற்று என்ற வகையில் முக்கியமானது. பிரேவ் தனியுரிமை சார்ந்த தேடல் சேவையை வழங்கி வந்தாலும், அது ஒரு பகுதி தேடியந்திரமாகவே இருந்தது. அதாவது, தேடல் முடிவுகளை தொகுத்து வழங்க இணையத்தை தானே மொத்தமாக பட்டியலிடாமல், கூகுள் மற்றும் பிங் ஆகிய தேடியந்திரங்களின் இணைய பட்டியலையும் பயன்படுத்தி வந்தது.
படைப்பா படத்தில் ரஜினி சொல்லும் மாப்பிள்ளை இவர் தான் ஆனால் அவர் போட்டிருக்கும் சொக்காய் என்னுடையது என்பதை போல, பெரும்பாலான தேடியந்திரங்கள் தேடல் சேவையை வழங்கினாலும், அதற்கு அடிப்படையான இணைய பக்கங்கள் பட்டியலை சொந்தமாக கொண்டிராமல் கூகுள் அல்லது பிங்கின் இணைய பக்கங்கள் பட்டியலையே அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றன.
தேடல் விடுதலை
இவ்வாறு இல்லாமல் முழுவதும் தனது சொந்த தேடல் நுட்பம் மற்றும் இணைய பட்டியலை கொண்டுள்ள தேடியந்திரங்கள் முழு மூல தேடியந்திரங்களாக கொள்ளப்படுகின்றன. இணைய உலகில் விரல் கணக்கற்ற தேடியந்திரங்கள் இருந்தாலும் முழு மூல தேடியந்திரங்கள் என்று சொல்லக்கூடியவை விரல் விட்டு எண்ணக்கூடியவை தான். கூகுள், பிங் தவிர, ரஷ்யாவின் யாண்டக்ஸ் மற்றும் சீனாவின் பெய்டு இந்த பட்டியலில் உள்ளன.
இப்போது, பிரேவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. ஏற்கனவே கூகுளின் இணைய பட்டியலை பயன்படுத்துவதில் இருந்து விடுபட்ட பிரேவ் தற்போது மைக்ரோசாப்டின் பிங் இணைய பட்டியலையும் பயன்படுத்துவதை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் இணையத்தை முழுக்க முழுக்க சொந்தமாக தேடி முடிவுகளை அளிக்கும் திறன் பெற்றுள்ளது.
ஏஐ நுட்பம் தாக்கம் காரணமாக தேடல் உலகில் அடுத்த அலை வீசி வரும் நிலையில், பிரேவ் தளைகளற்ற முழு முதல் தேடியந்திரமாக இருப்பது கவனிக்கத்தக்கது. நீங்களும் பிரேவ் தேடியந்திரத்தை பயன்படுத்துப்பாருங்கள். முடிந்தால் கூகுளுக்கு குட்பை சொல்லுங்கள். அல்லது கூகுளை மட்டும் சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.
பிரேவ் தேடியந்திரம்: https://search.brave.com/