ஒரு இணையதளத்தை துவக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதே போல, அந்த தளத்தை தொடர்ந்து பராமரிக்காமல் கிடப்பில் போடுவதற்கும், கைவிடுவதற்கும் நூறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், என்னவாக இருந்தாலும் சரி, நீங்கள் துவங்கிய இணையதளத்தை ஆவணப்படுத்தாமல் இருக்காதீர்கள் என வேண்டுகோள் வைக்கிறேன்.
இணையதளத்தை ஆவணப்படுத்துவது என்றால், இணையத்தில் இருந்து மறைந்து போகாமல் இருக்கச்செய்வது. அதாவது அந்த தளம் தொடர்ந்து பயன்படுத்தகூடிய வகையில் இருக்கச்செய்வது.
தளத்தை புதுபிக்க கூட வேண்டாம். ஆனால், அந்த தளம் மூடப்படுவது அல்லது கைவிடப்படுவதற்கான காரணத்தை தெரிவித்து, அதன் பழைய வடிவத்தை தொடர்ந்து பராமரித்து வருவது அவசியம். தற்செயலாக அல்லது எதிர்பார்ப்புடன் அந்த தளத்திற்கு வரும் இணையவாசிகள் ஏமாற்றம் கொள்வதை தவிர்க்க இது உதவும். உங்கள் தளங்களை நாடி வரக்கூடிய இணையவாசிகளுக்கு நீங்கள் காண்பிக்கும் குறைந்தபட்ச மரியாதையாக இது அமையும்.
தவிர, ஒரு தளத்தை துவக்கும் போது இலக்கு பயனாளிகளை ஈர்க்க அதன் நோக்கம் பற்றி பலவிதமாக பறைச்சாற்ற முயற்சிப்பது இயல்பாக இருக்கிறது என்றால், தளத்தை கைவிடும் போது அதற்கான காரணத்தை தெரிவிப்பது தானே முறை.
தளத்தின் உரிமையாளருக்கு தனது தளத்தை மூட உரிமை இருக்கிறது தான். நியாயமான காரணங்களும் கூட இருக்கலாம். பிரச்சனை அதுவல்ல. ஆனால், ஒரு தளம் பயன்பாட்டில் இல்லாத போது, அதை நாடிவரும் பயனாளிகளுக்கு ஏற்படும் ஏமாற்றத்தை தவிர்ப்பது எப்படி?
வரவேற்பு செய்தி போல, தளத்தை தொடர்ந்து பராமரிக்காததற்கான காரணத்தை தளத்தின் உரிமையாளர் ஒரு விளக்க குறிப்பாக இடம் பெறச்செய்திருந்தால், இணைய பயனாளிகளுக்கு ஆறுதலாக இருக்கும் தானே. அதைவிட முக்கியமாக, தளத்தின் பழைய உள்ளடக்கம் பாதுகாக்கப்படுவது இன்னும் நல்லது.
மாறாக, இணையதளத்தை கைவிட்டு அதன் மீதான பொறுப்பை அலட்சியம் செய்வது அறமற்ற செயல்.
இணைய முகவரியை புதுப்பிக்கவும், தளத்தை பராமரிக்கவும் அதிக தொகை தேவையில்லை. பொது நோக்கிலான மற்றும் வரலாற்று அம்சம் கொண்ட தளங்களை அதன் உரிமையாளர்கள் தொடர்ந்து ஆவணப்படுத்துவது அவசியம்.
ஆனால், எப்போதோ நல்ல நோக்கத்துடன் துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த தளம், பின்னர் பராமரிக்கப்படாமல் இருப்பதை இணையத்தில் அடிக்கடி எதிர்கொள்ள நேர்கிறது. இதில் இன்னும் மோசம் என்னவென்றால், பல தளங்கள் அவற்றின் முகவரி உரிமை காலாவதியாகி, இணைய விஷமிகளால் வாங்கப்பட்டும் வெற்று விளம்பர தளமாக பராமரிக்கப்படுவது தான்.
இதற்கு உதாரணமாக, கொரானா காலத்தில் துவங்கப்பட்ட இலவச மருத்துவ ஆலோசனைக்கானh ttps://www.mdtok.com/org/covid19 இணையதளத்தை குறிப்பிடலாம்.
கொரானா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இணைய முயற்சிகளையும், இணையதளங்களையும் ஆர்வத்துடன் எழுதிய காரணத்தால், அட நல்லதொரு கொரோனா கால தளமாக இருக்கிறதே என இந்த தளத்திற்கு சென்று பார்த்தால் அதன் பழைய உள்ளடக்கம் எதுவும் இல்லாமல், கோ டாடி விளம்பர வாசகங்களே வரவேற்கிறது.
கொரோனா காலத்தில் இந்த தளம் எப்படி இருந்திருக்கும் என்பதை அறிய முடியவில்லை. ஏமாற்றம் தான்.
நிற்க, கொரோனா காலத்தில் துவக்கப்பட்ட தளத்தை கொரோனா பாதிப்பு நீங்கிய பின் அப்படியே நடத்த வேண்டிய தேவையில்லை தான். ஆனால், கொரோனா காலத்தில் துவக்கப்பட்ட நோக்கத்தை குறிப்பிட்டு, அந்த தளத்தை பழைய வடிவிலேயே ஆவணப்படுத்தி வைப்பது அடுத்தடுத்து தேடி வரும் இணையவாசிகளுக்கான செய்தியாக அமையும் அல்லவா?
இத்தனைக்கும் இந்த தளத்தை நடத்தியவர்கள் அமெரிக்க மருத்துவர் என அறிய முடிகிறது. ஒரு வரலாற்று இணையதளத்தை ஆவணப்படுத்த அவர்களால் சொற்ப டாலர்களை கூடவா செலவிட முடியாது? அல்லது அதற்கான மனம் இல்லையா?
அமெரிக்காவில் வசிக்கும் ஐஐடி பட்டதாரிகளுக்கான ஐஐடி பே ஏரியா இணையதளத்தில், கோவிட்-19 உதவி தளங்கள் பக்கத்தில் உள்ள பெரும்பாலான இணைப்புகள் இப்படி கைவிடப்பட்ட தளங்களாகவே இருக்கின்றன. இந்த தளங்களை எல்லாம் ஆவணப்படுத்த வேண்டும் என அதன் உரிமையாளர்கள் ஏன் நினைக்கவில்லை?
–