இணையதளங்களை கைவிடாமல் ஆவணப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி எழுதியிருந்தேன்.
பொதுவாகவே இணையத்தில் ஆவனப்படுத்தல் என்பது முக்கியமாகிறது. இணைய காப்பகமான வெப் ஆர்க்கீவ் இதை அருமையாக செய்து வருகிறது.
இணைய ஆவணப்படுத்தலில் இணைய காப்பகம் மகத்தான முயற்சி என்றாலும், இதற்காக அதன் நிறுவனர் காலேவை எத்தனை பாராட்டினாலும் தகும் என்றாலும், இணைய ஆவணப்படுத்தல் இவரைப்போன்றவர்களின் பொறுப்பு என்று நாம் சும்மார் இருந்துவிடக்கூடாது. நம்மால் இயன்ற வகையில் இதற்கு கைகொடுக்கலாம்.
தனிநபர்கள் இன்னொரு முக்கிய விதத்திலும் இதில் பங்களிப்பு செலுத்தலாம். சொந்தமாக இணையதளம் துவங்கினால், அதை தொடர்ந்து நடத்த முடியாத போது, அந்த தளத்தின் அத்தியாயம் முடிந்ததாக கடந்து சென்றுவிடாமல், அந்த தளத்தை நீடிக்கச்செய்வது தான். அந்த தளம் பற்றி சின்ன குறிப்புடன் அதை பழைய வடிவத்தில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கலாம்.
இந்த இணைய நாகரீகம் அல்லது இணைய அறத்திற்கான அருமையான உதாரணமாக நீமென் லேபின், என்சைக்லோ (https://www.niemanlab.org/encyclo/ ) தளத்தை குறிப்பிடலாம். நீமென் லேப் இதழியல் ஆய்வுக்கான முன்னணி அமைப்புகளில் ஒன்று. இதன் சார்பாக, ஊடக களஞ்சியமாக என்சைக்லோ எனும் தளம் அமைக்கப்பட்டது. புதிய ஊடக தளங்களை அறிமுகம் செய்த இந்த தளம் தொடர்ந்து புதுப்பிக்கப்படவில்லை.
ஆனால் இன்னமும் இந்த தளத்தை அணுகலாம். எதிர்கால செய்திகளுக்கான கலைக்களஞ்சியமாக உருவாக்கப்பட்ட இந்த தளத்தில், உள்ள இணைப்புகளை கிளிக் செய்து உள்ளே சென்றால், 2014 ம் ஆண்டுக்கு பிறகு இந்த தளம் புதுப்பிக்கப்படவில்லை, எனவே இதில் உள்ள தகவல்கள் சீரற்று இருக்கலாம் என அதன் ஆசிரியர் குறிப்பு தெரிவிக்கிறது. அந்த காலகட்டத்தில் ஊடகத்துறையின் குறுக்கு வட்டுத்தோற்றமாக இந்த தளம் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அருமையான தளம் புதுப்பிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை அளித்தாலும், அதன் பழைய வடிவத்தை தொடர்ந்து அணுக முடிவது பெறும் ஆறுதலாக அமைகிறது.
ஆகவே இணையதளங்களை ஆவணப்படுத்துங்கள். பயனாளிகளாக ஆவணப்படுத்தலை கோருங்கள்.