இணையதளத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போகும் போது தள உரிமையாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச நாகரீகம் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இது தனிநபர் பிரச்சனை அல்ல இணைய ஆவணப்படுத்தலுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. இதற்கான இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம்.
மீடியம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாஷ்டர் (Mashster) வலைப்பதிவை அறிவியல் தளங்கள் தொடர்பான தேடலில் கண்டறிய நேரிட்டது. அறிவியல் கற்றுக்கொள்ள உதவும் 20 இணையதளங்கள் எனும் தலைப்பிட்ட இந்த பதிவு பயனுள்ளதாகவே இருக்கிறது.
மேலும் பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் இணையதளத்தை நாடவும் என இந்த பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ள இணைப்பிற்கு சென்று பார்த்தால், மாஷ்டர் எனும் அந்த தளம் காலவதியாக தற்போது வெறும் விளம்பர இணைப்புகளுடன் (https://www.brandbucket.com/names/mashster?source=ext) ஏமாற்றம் தருகிறது. வலைப்பதிவில் இது பற்றி எந்த குறிப்பும் இல்லை.
முரண் என்னவெனில், இந்த பதிவில் ’பிசிக்ஸ் செண்ட்ரல்’ (https://physicscentral.com/ ) எனும் இணையதளமும் தற்போது பயன்பாட்டில் இல்லை. ஆனால், அந்த தளத்தில் நுழையும் போது, ‘இந்த தளம் இப்போது ஓய்வு பெற்றுவிட்டது” எனும் அறிவிப்பின் கீழ் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த தளம் தற்போது தொடர்ந்து இயங்கவில்லை என்றாலும், இதன் தாய் நிறுவனமான அமெரிக்க இயற்பியல் கழகம் தொடர்ந்து இயற்பியலை மக்களுக்கு கொண்டு செல்வதில் உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தின் பழைய பக்கங்களை அணுக முடியவில்லை என்றாலும், தளம் மூடப்பட்டது தொடர்பான முறையான தகவல் தற்செயலாக தேடி வரும் இணையவாசிகள் முதல் இணைய வரலாற்றில் ஆர்வம் உள்ள வல்லுனர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஆசுவாசம் தரும்.
இணையதள உரிமையாளர்களிடம் எதிர்பார்ப்பது இந்த எளிய தகவலை தான்.
–