இணைய உலகில், பேஸ்புக், டிவிட்டர் தவிர விதவிதமான சமூக வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன. இவை பற்றி எல்லாம் விரிவாக தமிழ் இந்துவின் காமதேனு மின்னிதழில் விரிவாக தொடராக எழுதியிருக்கிறேன். எனவே, இப்போது நாம் பார்க்க இருக்கும் தவளை வலைப்பின்னல் மற்றுமொரு புதுமையான சமூக வலைப்பின்னல் தளம் என நினைத்துவிட வேண்டாம்.
தவளை கூச்சல் என பொருள் படும் இந்த தளம் உண்மையில் ஒரு சமூக ஊடக கேலி தளம். அதாவது நம்முடைய சமூக வலைப்பின்னல் பழக்கங்களை விமர்சிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தளம்.
பிராக்சோரஸ் (https://frogchorus.com/?pond=the_big_pond ) எனும் இந்த தளம் தவளைகளுக்கானது என சொல்லப்பட்டாலும், நாம் தான் இதில் உறுப்பினராக வேண்டும். அதாவது தவளையாக வேண்டும். அதன் பிறகு தவளை கூச்சல் போடலாம். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
தளத்தில் நுழைந்தவுடன் தோன்றும் தவளை உருவத்தை கிளிக் செய்தால், நம் சார்பில் அதன் கூச்சலை கேட்கலாம்.
வி பெக்கன்ஹன் எனும் இணைய கலைஞர், சக கலைஞர் விவியானேவுடன் இணைந்து இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார். இதன் உருவாக்கத்திற்கான காரணத்தையும் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். இணையத்தில் தான் எத்தனை சண்டைகள், எத்தனை வாதங்கள், அவரவர்க்கு கருத்துகள்… இதிலிருந்தெல்லாம் விடுபட்டு, அமைதியாக இணையத்தை அனுபவிப்பதற்கான இடம் என்பது போல தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் நடைபெறும் வம்பு வழக்கு இத்தியாதிகளால் வெறுத்துப்போயிருந்தால் தவளை பின்னல் தளத்தில் எட்டிப்பார்த்து ஆசுவாசம் கொள்ளலாம்.