சாட்ஜிபிடி ஒரு புதிய அறிமுகம்

சாட்ஜிபிடியையும், அதன் சகம் பாட்களையும் ஒற்றை அறிமுகம் மூலம் புரிந்து கொள்ள முடியாது. படையப்பா போல இந்த சாட்பாட்களுக்கு இன்னொரு முகம் என பல முகங்கள் இருப்பதால், பலரும் சாட்ஜிபிடியை எப்படி அறிமுகம் செய்கின்றனர் என்று கவனிப்பது அவசியம். அந்த வகையில் ஜோஷ் பெர்சின் (https://joshbersin.com/2023/01/understanding-chat-gpt-and-why-its-even-bigger-than-you-think/ ) என்பவரின் சாட்ஜிபிடி அறிமுகத்தை இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொருக்கும் சாட்ஜிபிடி பற்றியும், ஏஐ பற்றியும் ஒரு கருத்து இருக்கிறது என தனது அறிமுகத்தை துவங்கும் பெர்சின், எளிமையாக கூறுவது என்றால், சாட்ஜிபிடியும் அதைப்போன்ற இன்னும் பிற நுட்பங்களும் மொழி இயந்திரங்கள் (“language machine” ) என அழைக்கப்படுவை, புள்ளியியல், மறு உறுதி கற்றல் மற்றும் மேற்பார்வை கற்றல் ஆகியவை கொண்டு வார்த்தைகள், சொற்றொடர்கள், மற்றும் வாசகங்களை பட்டியலிட்டு கொள்கின்றன என்கிறார்.

இந்த நுட்பங்களிடம் உண்மையான நுண்ணறிவு (“intelligence”  ) என்பது இல்லை என்றாலும், இவை செயல் திறனோடு கேள்விகளுக்கு பதில் அளிக்கும், ஆக்கங்களை உருவாக்கும், தகவல்களை சுருக்கும் மற்றும் இன்னும் பிற திறன் படைத்தவை. (இந்த நுட்பங்களுக்கு ஒரு சொல்லின் பொருள் புரியாது என்றாலும், சொற்கள் பயன்படுத்தப்படும் விதம் தெரியும்.)

சாட்ஜிபிடி போன்ற இயந்திரங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. அதாவது மனித எழுத்தை, குறிப்பிட்ட எழுத்து பாணியை, போலவே உருவாக்க, புரோகிராம் செய்யப்பட்டு, மறு உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் சில வகையான உரையாடல்களை தவிர்க்கவும், கேள்விகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட மாதிரிகள், அதிக கேள்விகள் கேட்கப்படும் போது பதில்களை பட்டை தீட்டிக்கொண்டு, இந்த கற்றலை நினைவில் சேமித்துக்கொள்கின்றன.

சாட்பாட்கள் பழைய சங்கதி என்றாலும், ஜிபிடியின் ஆற்றல் வியக்க வைப்பதாக இருக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *