முதல் சாட்பாட்டான எலிசாவில் இருந்து நவீன ஏஐ சாட்பாட்டான சாட்ஜிபிடி தொழில்நுட்ப நோக்கில் மிகவும் முன்னேறி வந்திருக்கலாம். ஆனால், அடிப்படையில் எலிசாவில் இருந்து சாட்ஜிபிடி அதிகம் வேறுபட்டுவிடவில்லை. ஏனெனில் எலிசாவுக்கும் எதுவும் புரிந்ததில்லை. எலிசாவை விட லட்சம், கோடி மடங்கு மேம்பட்டதாக கருதப்படும் சாட்ஜிபிடியும் எதையும் புரிந்து கொள்வதில்லை.
சாடிஜிபிடியுடன் உரையாடி அதன் பதில் அளிக்கும் ஆற்றலால் வியந்து போனவர்களுக்கு, சாட்ஜிபிடியையும் எதையும் புரிந்து கொள்வதில்லை என சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தலாம். எதையும் புரிந்து கொள்வதில்லை எனில், சாட்ஜிபிடி எப்படி கேட்கும் கேள்விக்கு எல்லாம் சரியாக பதில் அளிக்கிறது என கேட்கலாம்.
சாட்ஜிபிடி எல்லாவற்றுக்கும் சரியாக பதில் அளிப்பதாக நினைப்பதே தவறு என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இப்போதைக்கு சாட்ஜிபிடி எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட, உண்மையில் அது எதையும் புரிந்து கொள்ளாமல் பதில் அளிக்கிறது. இதற்கான தொழில்நுட்ப விளக்கம் தேவை எனில், சாட்ஜிபிடி தொடர்பான தமிழ் இந்து தொடர் அல்லது யுவர்ஸ்டோரி கட்டுரை வரிசையை வாசிக்கவும்.
பேசும் இந்திர கிளி என வர்ணிக்கப்படக்கூடிய சாட்ஜிபிடி புத்திசாலி என்பதை விட அந்த சாட்பாட் புத்திசாலியாக இருக்கிறது என நாம் நினைக்கிறோம் என்பதே விஷயம். அதாவது அதன் புத்திசாலித்தனத்தை நாம் ஏற்கிறோம். அங்கீகரிக்கிறோம். இல்லை என்றால், சாட்ஜிபிடியின் மடத்தனம் வெளிப்பட்டுவிடும்.
இதை புரிந்து கொள்ள, சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்களுக்கு எல்லாம் தாயான எலிசா பற்றிய முக்கிய குறிப்பை பார்ப்போம்.
எலிசா முதல் சாட்பாட் என்ற வகையில் முன்னோடி சாட்பாட் என்றாலும், இப்போது திரும்பி பார்க்கும் போது அதன் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமாக எதுவும் இல்லை என தோன்றலாம். எலிசா மனிதர்களோடு எப்படி பேசியது என்றால், அவர்கள் டைப் செய்யும் வாசகத்தில் குறிப்பிட்ட சொற்களை அடையாளம் கண்டு அதற்கேற்ற பதில் மொழியை வழங்கியது.
உதாரணத்திற்கு, எலிசாவிடன் ஒருவர், அண்மை காலமாக நான் மிகவும் தனிமையை உணர்கிறேன் என்று கூறினால், அது உடனே, ஏன் அப்படி தனியாக உணர்கிறீர்கள் என்று கேட்கும்.
தனிமையை உணர்வதற்கான காரணத்தை சொன்னால், உடனே அதில் உள்ள ஒரு குறிச்சொல்லை பிடித்துக்கொண்டு அதற்கேற்ற வாசகத்தை டைப் செய்து உரையாடலை தொடரும். எலிசா அக்கறையோடு கேட்பதாக நினைத்துக்கொண்டு பயனாளிகள் உரையாடலை தொடர்ந்து மனதில் உள்ளதை எல்லாம் கொட்டிவிடலாம்.
பயனாளி கேள்வியில் உள்ள தனிமை என்பதை கவனித்து, ஏன் தனிமை என கேட்கும் திறன் பெற்றிருந்ததே தவிர, எலிசா தனிமையையும், அதன் வலியையும் புரிந்து கொண்டதே இல்லை.
ஆனால், தனிமையில் இருந்த மனித மனதுக்கு யாரோ ஒருவருடன் தனிமை பற்றி பேசுவது போல ஒரு சாட்பாட்டுடன் பேசுவது ஆறுதல் அளித்திருக்கலாம். அல்லது, யாரோ ஒருவருடன் பேசாமல், ஒரு முகமில்லா சாட்பாடுடன் பேசுகிறோம் எனும் உணர்வே, அதனோடு மனம் திறந்து பேச வைத்திருக்கலாம்.
இப்படி ஒரு சாட்பாட்டை மனிதர் போல நினைத்து மனதில் உள்ளதை எல்லாம் பேச முற்படும் தன்மையை எலிசா விளைவு என்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், எலிசாவுடன் உரையாடக்கூடிய தன்மையே அதற்கு ஒருவித மனித தன்மையை அளித்துவிடுகிறது. அந்த மனித தன்மை எலிசா மீது பயனாளிகள் மனதில் உண்டாவது.
இது உணர்வு சார்ந்த அலசல் என்றாலும், அறிவு நோக்கில் எலிசா போன்ற சாட்பாட்களின் புத்திசாலித்தனத்திற்கும் இது பொருந்தும். சாட்பாட்கள் எதையும் புரிந்து கொள்ளாமல் வெறும் புள்ளியியல் கணிப்பு அடிப்படையில் தொகுத்து வழங்கும் ஆக்கங்களுக்கு நாமே பொருள் காண்கிறோம். நாம் அதன் ஆக்கங்களை புரிந்து கொள்வதால், அவை புத்திசாலி என நம்புகிறோம். மற்றபடி எலிசாவும் புத்திசாலி இல்லை. சாட்ஜிபிடியும் புத்திசாலி இல்லை.
எலிசாவை விட சாட்ஜிபிடி மேம்பட்ட திறன் பெற்றிருந்தாலும் அடிப்படையில் சாட்பாட்களின் செயல்பாடு உத்தியில் பெரிய மாற்றமில்லை.
–
* மனித தன்மை மிக்கதாக உணர்வதாலேயே சாட்பாட்களை சிறந்த ஏஐ சேவைகள் என கருதிவிடக்கூடாது என எச்சரிக்கும் இந்த கட்டுரையையும் வாசிக்கவும்.