ஊடக அறிஞரான டேன் கில்மரை (Dan Gillmor ) தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்யும் தேவை இருக்கிறது. ஆனால், இது கில்மர் பற்றிய விரிவான அறிமுகம் அல்ல: மாறாக, நோக்கியா போன் தொடர்பாக அவரது பழைய கணிப்பு தொடர்பான சிறு குறிப்பு மட்டுமே.
கில்மருக்கான முழுமையான அறிமுகம் இல்லை என்றாலும், இந்த குறிப்பு அவரை பற்றி தெரிந்து கொள்வதற்கு பொருத்தமானதானவே அமைகிறது. கில்மரின் நோக்கியா தொடர்பான கணிப்பு பொய்யாகிப்போனலும், அதில் வரலாற்று நோக்கில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி இருக்கிறது.
2007 ம் ஆண்டு கிலர் தனது, மக்கள் ஊடக மையம் வலைப்பதிவில், அப்போது அறிமுகம் ஆகியிருந்த நோக்கியாவின் ’இ 90 கம்யூனிகேட்டர்’ போன் பற்றி எழுதியிருந்தார்.
வன்பொருளும், மென்பொருளும் வலுவாக இணைந்த கலவை என இந்த போனை வர்ணித்த கில்மர், ஒரு கையடக்க கம்ப்யூட்டர் அல்லது போனில் எண்ணற்ற செயல்பாடுகளை கொண்டுள்ளதால், அதன் சமரசங்களை மீறி இதழாளர்களுக்கும், வர்த்தக புள்ளிகளுக்கும் மிகவும் ஏற்ற போன் என குறிப்பிட்டிருந்தார்.
அது மட்டும், அல்ல ஆப்பிளின் ஐபோனில் தவறும் தன்மையை இந்த போன் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஐபோன் போல அல்லாமல், தீவிரமான பணிகளுக்கான இந்த போனின் பல்லூடக அம்சத்தையும் பாராட்டியிருந்தார்.
நோக்கியா போன்களில் அந்த காலத்தில் இடம்பெறத்துவங்கியிருந்த நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப அம்சங்களையும் குறிப்பிட்டு வீடியோ மற்ற அம்சங்களில் ஐபோனைவிட மேம்பட்ட போன் என தெரிவித்திருந்தார்.
இப்போது திரும்பி பார்க்கையில் கில்மர் இந்த கணிப்பில் ஐபோனின் வெற்றியை கோட்டைவிட்டு விட்டாரோ என்று நினைக்கத்தோன்றலாம். சொல்லப்போனால், ஐபோன் அறிமுகமான போது அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளத்தவறிய வல்லுனர்களில் ஒருவராக கில்மரை வாக்ஸ் இணைய இதழின் அலசல் கட்டுரை மேற்கோள் காட்டுகிறது.
கில்மர் கணித்த அளவுக்கு நோக்கியா கம்யூனிகேட்டர் போன் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் போயிருக்கலாம். அவரது விமர்சனத்தை கீறி ஐபோன் அபார வெற்றி பெற்று அடுத்தடுத்து பல பதிப்புகளை கண்டு முன்னேறி வந்திருக்கலாம். ஆனால், இதை எல்லாம் வைத்து கில்மரை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ஏனெனில், இந்த பதிவில் கில்மர் ஐபோனின் எழுச்சியை கவனிக்கத்தவறியதாக கருதினாலும், செல்போன் இதழியலின் முக்கியத்துவத்தை மிகச்சரியாக கணித்திருந்தார் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்.
நோக்கிய கம்ப்யூனிகேட்டர் போனை அவர், இதழாளர்கள் கைகளில் இருக்க வேண்டிய போன் என குறிப்பிட்டிருந்ததை கவனிக்கவும். அதோடு, நான் மட்டும் செய்தி அறையின் தலைமை பொறுப்பில் இருந்தால், எனது இதழாளர்களில் சிலருக்கு இந்த போனை வாங்கி கொடுத்து முயற்சித்து பார்க்க சொல்வேன் என்றும் குறிப்பிட்டுருந்தார்.
நவீன இதழாளர்கள் கைகளில் வேறு எந்த சாதனமும் இல்லாவிட்டாலும் கூட, ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், அவர்கள் எங்கிருந்தும் செய்தி சேகரித்து வழங்க முடியும் எனும் தற்போதைய நிலையில் இருந்து பின்னோக்கி பார்தால், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே கில்மர் இந்த நிலையை கணித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் செல்போன் இதழியலின் எழுச்சியை கணித்தவர்களில் ஒருவராக கில்மரை கருதலாம்.
செல்போன் என்பது பெரும்பாலும் பேசுவதற்கான சாதமாக மட்டுமே பார்க்கப்பட்ட காலத்தில், கில்மர் நோக்கியாவின் நவீன போன், இதழாளர்களுக்கான முக்கிய சாதனமாக விளங்கும் என்பதை எதிர்பார்த்திருப்பதை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. செல்போனின் செயல்திறன் வரம்புகளை கொண்டிருந்த காலத்தில், நோக்கியாவின் கம்யூனிகேட்டர் வரிசை போன்கள் அதன் தொழில்நுட்ப அம்சங்களால், எல்லாம் வல்ல சாதனமாக உருவாகும் என்றும் அவரது நம்பிக்கையாக இருந்திருக்கிறது.
நோக்கியாவை விட ஐபோன் இந்த மாற்றத்தை கச்சிதமாக சாத்தியமாகியது என்றாலும், ஸ்மார்ட்போனின் தேவையும், எழுச்சியையும் சரியாக புரிந்து கொண்டவர்களில் ஒருவராக கில்மரை கருதலாம். அது மட்டும் அல்ல, செல்போன் இதழியல் வரலாற்றின் துவக்க புள்ளிகளில் ஒன்றாக நோக்கியா போன்களே அமைந்தன என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
நோக்கியா அறிமுகம் செய்த என் 95 முன்னோடி போனை கொண்டே ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செல்போன் இதழியலுக்கான முன்னோடி முயற்சியில் ஈடுப்பட்டதையும் நினைவில் கொள்வது அவசியம். கில்மரின் பதிவில் நோக்கிய என் 95 போன் பற்றியும் குறிப்பு இருக்கிறது.
- செல்போன் இதழியல் பற்றி மேலும் அறிய விரும்பினால் வாசிக்க: மொபைல் ஜர்னலிசம் கையேடு.