’சர்வதேச தாளம், உள்ளூர் வரிகள்” என்பது நம் காலத்திற்கான சிந்தனையாகவோ, சித்தாந்தமாகவோ தோன்றுகிறது. ஏஐ சார்ந்த இசை சேவை அளிக்கும் இணையதளத்திற்கான விளம்பர வாசகமாகமாக இது அமைவது தான் ஆச்சர்யம். உண்மையில், சாங்சென்ஸ்.ஏஐ (https://songsens.ai/ ) எனும் அந்த தளத்தின் நோக்கத்தையும் விளக்கும் வாசகமாக இது அமைகிறது.
மோலோட்டமாக பார்த்தால் இது ஒரு ஏஐ மொழிபெயர்ப்பு சேவை. பிற மொழி அல்லது பல மொழி பாடல்களை மொழிபெயர்த்து தரும் சேவையை அளிக்கிறது.
ஆனால், பாடல் மொழிபெயர்ப்பு சேவை என்பதை கடந்து இந்த தளம் நுட்பமான சில அம்சங்களை கொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஏனெனில், அந்நிய மொழி பாடல்களை மொழிபெயர்க்க விரும்பினால் கூகுள் மொழிபெயர்ப்பு அல்லது சாட்ஜிபிடி சேவையை நாடலாம். இருப்பினும், இந்த முறையில் பிற மொழி பாடல்களை எந்த அளவு புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை.
இந்த இடத்தில் தான் பாடல் மொழிபெயர்ப்புகான பிரத்யேக சேவையாக சாங்சென்ஸ்.ஏஐ அமைகிறது.
இசையை கேட்டு ரசிப்பதில் மொழி வரம்புகளுக்கு விடை கொடுங்கள் என சொல்லும் இந்த தளம், எந்த ஒரு மொழியில் இருக்கும் பாடல் வரிகளையும் உங்கள் மொழியில் மாற்றித்தருவதோடு, மூல மொழியில் பாடல்களின் உண்மையான பொருளை புரிந்து கொள்ளவும் உதவுவதாக கூறுகிறது.
அதாவது, பாடல்களை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து தருவதோடு நின்று விடாமல், குறிப்பிட்ட ஒரு பாடல் எந்த சூழலில், எந்த பொருளில், எந்த தன்மையில் பாடப்படுகிறது எனும் உணர்வை தருவதாகவும் கூறுகிறது.
அடுத்த கட்டமாக, அந்த பாடலில் வரும் வார்த்தைகளை மூல மொழியின் உச்சர்ப்பில் கேட்டு பயிற்சி செய்து கொள்ளலாம். கொஞ்சம் விரிவாக வார்த்தைக்கு வார்த்தை என்ன பொருள் என்றும் அறிந்து கொள்ளலாம்.
ஸ்பாட்டிபை யுகத்தில் ஏஐ திறனோடு உலக இசையை கேட்டு ரசிக்க பயனுள்ள சேவை தான்.
இந்த சேவையை, இசை வாயிலாக இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளும் உத்தியாகவும் பயன்படுத்தலாம். இசை மூலம் பிற மொழியை கற்றுக்கொள்ளும் சொந்த முயற்சியின் பயனாகவே இந்த சேவைக்கான எண்ணம் உண்டானதாக இந்த சேவையை உருவாக்கியவர் பிராடகட் ஹண்ட் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த தளத்தின் இசை மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். அறிமுக சலுகையாக முதல் மூன்று மொழிபெயர்ப்புகள் இலவசம் என்றாலும் கூடுதல் சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.