உயிரியல் நோக்கில் மண்புழுக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருந்தால் அல்லது இத்தகைய ஆர்வம் வரவேண்டும் என்றால், பயோமெடிகல் செண்ட்ரலின் வலைப்பதிவு தொடரில், மண்புழுக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பான பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
மண்புழு பரிணாம வளர்ச்சி தொடர்பான அண்மை ஆய்வுக்கட்டுரையை எழுதிய ஆய்வாளர்களான டாக்டர்.ஆண்டர்சனும், சாமுவேல் ஜேம்சும் (Dr. Frank Anderson & Dr. Samuel James ) இந்த பதிவை எழுதியுள்ளனர். ஆய்வு தகவல்கள் என்றாலும், எளிதாக படிக்கும் வகையில் சுவாரஸ்யமாகவே இந்த பதிவு அமைந்துள்ளது. – https://blogs.biomedcentral.com/bmcseriesblog/2017/06/01/the-evolution-of-earthworms/
உழவர்களின் நண்பன் என்று சொல்லப்படும் மண்புழுக்களின் மகத்துவத்தை அரிஸ்டாட்டில் அந்த காலத்திலேயே உணர்ந்திருக்கிறார். பூமியின் குடல் என்று அவர் மண்புழுக்களை குறிப்பிட்டிருக்கிறார். பரிணாம கோட்பாட்டை முன்வைத்த சார்லெஸ் டார்வினுக்கும் மண்புழு பிடித்தமானதாக இருந்திருக்கிறது. அவர் கடைசியாக எழுதிய புத்தகம் மண்புழு தொடர்பானது.
நிற்க, மண்புழுக்கள் தொடர்பாக எண்ணற்ற இணையதளங்கள் இருந்தாலும், ஆகச்சிறந்த மண்புழு தளம் எனும் பெருமையை, ’ஹெர்மன் புழுவின் சாகசங்கள்’ (https://web.extension.illinois.edu/worms/) எனும் இணைய பக்கத்திற்கு அளிக்கலாம்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக விரிவாக்கம் இணையதளத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட துணை பக்கம் என்றாலும், உள்ளடக்க நேர்த்தியில் இதை தனி இணையதளமாகவே கருதலாம்.
மண்புழுக்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான தகவல்களை அனைத்தையும் தொகுத்தளிக்கிறது இந்த தளம். ஆனால், தகவல்களை அடுக்கிச்செல்லாமல், சுவாரஸ்யமான முறையில் வாசித்து செல்லும் வகையில், இந்த தளம் அமைந்துள்ளது. சிறார்களுக்காக உருவாக்கப்பட்ட இணையதளம் என்பதால், இந்த அணுகுமுறையை பின்பற்றியிருக்கின்றனர் என்றாலும், இதன் வடிவமைப்பு அருமையாக இருக்கிறது.
முதல் பார்வைக்கு மண்புழு விளையாட்டு போல தோற்றம் தரும் இந்த தளம், நீல நிற பின்னணியில் ஒரு அனிமேஷன் மண்புழுவை மையமாக கொண்டுள்ளது. அதன் அருகாமையில் அமையும் உள்ளடக்க பட்டியலை ஒவ்வொன்றாக கிளிக் செய்தால், மண்புழு வரலாற்றில் துவங்கி, அதன் விலங்கு குடும்பம், உடல் அமைப்பு, உணவு பழக்கம் உள்ளிட்ட அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.
மண்புழுவே தன்னைப்பற்றி பேசுவது போன்ற நடையில் இருப்பதால் சிறார்கள் எளிதாக படித்து உள்வாங்கி கொள்ளலாம். அமெரிக்காவுக்கு நான் எப்படி வந்து சேர்ந்தேன் தெரியுமா, ஐரோப்பாவில் இருந்த குடியேறி வந்தவர்கள் தங்களை அறியாமல் என்னை கொண்டு வந்தனர் என்பது போல தகவல்கள் அமைகின்றன.
மண் புழுவின் விலங்கின குடும்பம் பற்றிய சிக்கலான தகவல்களை, விளையாட்டு போல தெரிந்து கொள்ளும் வகையில் மிகவும் சுவாரஸ்யமாக அமைத்துள்ளனர்.
மண் புழு உணவு தொடர்பான தகவல்களும் வினாடி வினா பாணியில் அமைந்துள்ளது.
மண்புழு பற்றி வியக்க வைக்கும் தகவல்களுக்கான தனி பகுதியில் அவற்றின் அதிகபட்ச நீளம், ஒரு ஏக்கரில் பத்து லட்சம் அளவுக்கு இருப்பவை போன்ற தகவல்களோடு, டார்வின் 39 ஆண்டுகளை மண்புழு ஆய்வுக்காக செலவிட்ட விவரமும் இடம்பெற்றுள்ளது.
முந்தைய பகுதியில், படிமங்கள் என்றதும் டைனோசர்களின் படிமங்கள் தான் நினைவுக்கு வரும், ஆனால், எங்களுக்கும் படிமங்கள் உண்டு, அளவில் சிறியதாலும், உடலில் எலும்புகள் இல்லை என்பதாலும், அவை சரியாக தெரிவதில்லை என மண்புழு குறிப்பிடுவது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
மண்புழு தொடர்பான பிற பயனுள்ள இணைய இணைப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. மண்புழு உரம் தயாரிப்பது தொடர்பான பயிற்சியை மாணர்வர்களுக்கு அளிக்க வழிகாட்டும் பகுதியும் இருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முந்தைய இணையதளம் என்றாலும், அனிமேஷன் உதவியோடு, சிறார்கள் விரும்பிய வகையில் தகவல்களை அணுக வசதியாக உரையாடும் தன்மையோடு ( இண்டரியக்டிவ்) அமைந்திருக்கும் நோக்கில் நவீன தளம் என்றே சொல்லலாம்.
இந்த தளம் பற்றி இன்னொரு முக்கிய தகவலையும் சொல்லியாக வேண்டும். வழக்கமான கூகுள் தேடலில் இந்த தளத்தை கண்டறிவது கடினம். புழுக்களுக்கான சிறந்த தளம் என தேடினால் கூகுள் இந்த தளத்தை பட்டியலிடவில்லை. துணை பக்கமாக அமைந்திருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இதன் தாய் தளமான இல்லினாய்ஸ் பல்கலை இணையதளத்தில் இருந்து தேடினாலும் இந்த தளத்தை அணுகும் வழி இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன், கார்டியன் இணைதளத்தில் உயிரியல் தொடர்பான பயனுள்ள தளங்களின் பட்டியலில் இந்த தளம் பற்றி குறிப்பிடபட்டுள்ளது. புழுக்களின் உடல் அமைப்பு, வாழ்விடம், பரிணாமம் ஆகியவற்றுக்கான மானுடவியல் என இந்த தளம் வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த முழு வாசகத்தை டைப் செய்து தேடும் போதும் கூகுள் இந்த தளத்தை அல்லது கார்டியன் பட்டியலை சுட்டிக்காட்டுவதில்லை. – https://www.theguardian.com/education/netclass/schools/biology/0,,101591,00.html
இப்படி பல பயனுள்ள தளங்கள் கூகுளில் கண்டறிய முடியாத வகையில் தான் இருக்கின்றன.
–