ஒரு இணையதளத்தை உருவாக்குவது எப்படி என பாடம் நடத்த பலர் இருக்கின்றனர். இணையதளத்தை பிரபலமாக்குவது எப்படி என வழிகாட்ட அதைவிட அதிகமானவர்கள் இருக்கின்றனர். இதற்கு தேடியந்திரமாக்கல் ( எஸ்.இ.ஓ), டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கின்றனர்.
ஆனால், உருவாக்கிய இணையதளத்தை முறையாக பராமரிப்பது எப்படி என்பதற்கு தான் போதிய வழிகாட்டுதல் இல்லை எனத்தோன்றுகிறது. உண்மையில், இணையதளத்தை உருவாக்கவதைவிட அதை பராமரிப்பதே முக்கியம்.
இணையதளத்தை பராமரிப்பது எனும் போது அதன் உள்ளடக்கத்தை துடிப்புடனுன், காலத்திற்கு ஏற்பவும் வைத்திருப்பதோடு இன்னும் பல அம்சங்கள் இருக்கின்றன. அதோடு, ஏதேனும் காரணத்திற்காக இணையதளத்தை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் போனால் அந்த தகவலை தளத்தில் இடம்பெற வைப்பது முக்கியம். இதை குறைந்தபட்ச இணையதள பராமரிப்பு அறம் என கொள்ளலாம்.
இணையதளங்களை நாடிச் செல்லும் போது, அந்த தளம் புதுப்பிக்கப்படாமல் இருப்பது, தேடிச்சென்ற நண்பர் அல்லது உறவினர் வீடு பூட்டி கிடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இன்னும் சில நேரங்களில் அந்த வீடு பாழடைந்து கிடப்பது போல திகைப்பை ஏற்படுத்தலாம் அல்லது அந்த வீடு இருந்த இடமேத் தெரியாமல் மறைந்தும் போயிருக்கலாம்.
எனவே எந்த ஒரு நல்ல இணையதளமும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும். அல்லது அந்த தளத்தின் தேவை முடிந்திருந்தால், அதற்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் தேடி வரும் இணையவாசிகள் குழப்பத்திற்கும், ஏன் மன உளைச்சலுக்கும் உள்ளாவார்கள்.
எனினும், இணையதளத்தை தொடர்ந்து பராமரிக்க முடியாத அல்லது புதுப்பிக்க இயலாத நிலை ஏற்படலாம். இதற்கு பலவித காரணங்களும் இருக்கலாம். ஆனால், காரணம் என்னவாக இருந்தாலும், இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் அதன் தற்போதைய நிலையை விளக்கும் சிறு குறிப்பு இருப்பது அவசியம்.
’இந்த தளம் தொடர்ந்து புதுப்பிக்கப்படவில்லை, இதில் உள்ள பக்கங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன’ எனும் அறிவிப்பை ஒரு சில தளங்களில் காணலாம்.
குறிப்பிட்ட கால நோக்கிலான இணையதளம் எனில், அதை குறிப்பிடுவது பொருத்தமானது.
அதே போல, தளம் மூடப்பட்டது எனில் அதற்கான முறையான விளக்க அறிவிப்பு இருப்பது அவசியம். கைவிடப்படும் தளங்களுக்கும் இது பொருந்தும்.
இவை எல்லாம் சின்ன விஷயங்கள் தான் என்றாலும், இணைய நேர்மையின் அம்சமாக அமைகின்றன. இணையவாசிகளின் வருகையையும், ஆதரவையும் எதிர்பார்த்து தானே இணைய தளங்கள் அமைக்கப்படுகின்றன. எனில், அவற்றை நாடிவரும் பயனாளிகள் குழப்பமோ, ஏமாற்றமோ அடையாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது இணையதள உரிமையாளர்களின் கடமை தானே!
* இந்த பதிவுக்கு காரணமாக அமைந்த இணையதளம் பற்றிய அறிய..