நல்ல பல் மருத்துவர் அல்லது குழாய் பழுது பார்ப்பவரை தெரியுமா? என நட்பு வட்டத்தில் விசாரிக்க பேஸ்புக்கை எப்போதேனும் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இது தொடர்பான உங்கள் அனுபவம் ஒரு பக்கம் இருக்கட்டும், இப்படி நண்பர்களிடம் இருந்து உள்ளூர் சேவைகளுக்கான பரிந்துரைகளை பெறுவதற்கு என்றே ஒரு பிரத்யேக சமூக வலைப்பின்னல் இருந்தது தெரியுமா? கிக்பார்க் (GigPark) எனும் அந்த சமூக வலைப்பின்னல் சேவையை யெல்ப் போன்றது ஆனால், நண்பர்கள் பரிந்துரைக்கானது என டெக்கிரஞ்ச் தளம் பொருத்தமாக வர்ணித்திருந்தது.
கனடாவைச் சேர்ந்த நோவா காட்பிரே (Noah Godfrey ), பெமா ஹேகன் என்பவருடன் இணைந்து இந்த சமூக வலைப்பின்னல் சேவையை துவக்கியிருந்தார்.
சமூக வலைப்பின்னல் சேவை அலைக்கு மத்தியில் 2008 ம் ஆண்டு வாக்கில் அறிமுகமான இந்த கிக்பார்க், பேஸ்புக் பாணியில் இருந்து விலகி, பயன்பாடு சார்ந்த வலைப்பின்னலாக அமைந்தது. பேஸ்புக் போல, நட்பு வலை வீசுவதோ, அல்லது நண்பர்கள் வலையை விரிவாக்கி கொள்வதோ இந்த தளத்தின் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, ஏற்கனவே இருந்த நண்பர்கள் வட்டம் வாயிலாக, பயன்பாடு சேவை சார்ந்த பரிந்துரைகளை பெற வழி செய்தது.
இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவுடன், இமெயில் பட்டியலில் உள்ள நண்பர்களை இதில் இணைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு, பயன்பாடு சேவை தொடர்பான பரிந்துரை வேண்டும் எனில் நண்பர்களிடம் விசாரிக்கலாம். இணைய வடிவமைப்பாளர் துவங்கி, மின் மோட்டர் பழுது பார்ப்பவர் வரை எந்த சேவையாளரையும் இந்த தளத்தின் வாயிலாக நண்பர்கள் மூலம் கண்டறியலாம்.
பலரும் நிஜ உலகில் பின்பற்றும் செயல்முறை தான் இது என்றாலும், கேட்ட வேகத்தில் பதில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். உடனடியாக நட்பு வட்டத்தில் உள்ள அனைவரையும் தொடர்பு கொண்டு கேட்பதும் சாத்தியம் இல்லை. சில நேரங்களில் தேவை முடிந்த பிறகு தற்செயலாக நல்ல பரிந்துரை கிடைக்கலாம்
ஆனால், நண்பர்கள் பரிந்துரை பெறுவதற்கு என்றே ஒரு வலைப்பின்னல் தளம் இருந்தால் நன்றாக இருக்கும் எனும் எண்ணத்தில் கிக்பார்க் தளம் உருவாக்கப்பட்டது. எப்போது பரிந்துரை தேவை என்றாலும், கிக்பார்க்கில் நண்பர்களிடம் விசாரிக்கலாம். நட்பு வட்டத்தில் தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள். அதே போல, நமக்குத்தெரிந்த பரிந்துரைகளையும் வழங்கலாம். நண்பர்கள் மட்டும் அல்ல, நண்பர்களின் நண்பர்களிடமும் பரிந்துரை கேட்கலாம்.
உறுப்பினர்களுக்கான பக்கத்தில், அவர்களின் பரிந்துரைகள், நண்பர்கள் பரிந்துரைகளை, நண்பர்களின் நண்பர்கள் பரிந்துரைகளை பார்க்கலாம். அதே பக்கத்தில் நண்பர்களிடம் கோரிக்கை வைக்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கி கொள்ள கோரிக்கை வைக்கலாம். பல்வேறு தலைப்புகளின் கீழ் பரிந்துரைகள் வகைப்படுத்தப்பட்டிருப்பதால் அவற்றை அணுகுவதும் அணுகலாம். பேஸ்புக்குடன் இணைக்கப்பட்ட சேவையாகவும் இது அமைந்திருந்தால், பேஸ்புக கணக்கு மூலமும் அணுகலாம்.
ரெஸ்டாரண்ட்கள், பூக்கடை, குழாய் பழுது பார்ப்பு, ரியல் எஸ்டேட் முகவர், இணைய வடிவமைப்பாளர் என பலவிதமான சேவைகளுக்கான பரிந்துரைகள பெறலாம், வழங்கலாம்.
சமூக வலைப்பின்னல் கருத்தாக்கத்தை, பயன்பாடு சார்ந்த பகிர்வாக மாற்றிய இந்த சேவை சில ஆண்டுகளில் கேன்பேஜஸ் எனும் மற்றொரு கனடா நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது.
யெல்ப் போல வையம் தழுவிய அளவில் இந்த பரிந்துரை வலை வளர்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
யெல்ப் உள்ளூர் சேவைகள், வணிகங்களுக்கான பயனாளிகளின் விமர்சன இணையதளமாக விளங்குகிறது.
–
( கிக்பார்க்கின் சுவட்டை கூட இப்போது இணையத்தில் பார்க்க முடியாது. இணைய காப்பகத்தில் மட்டும் பழைய டெக்கிரஞ்ச் செய்தி மூலம் மட்டுமே இதன் சிறப்பை அறிய முடிகிறது. நிற்க இதே போலவே டிரஸ்டட் ஓபினியன் (Trusted Opinion) எனும் இணையதளமும், நண்பர்கள் வாயிலாக நம்பகமான விமர்சன கருத்துக்களை பெறுவதற்காக உருவாக்கப்பட்டது.
Shahar Smirin என்பவர் தன் மனைவி முதல் முறையாக கர்பம் அடைந்த போது, குழந்தை பேறு மருத்துவர் சேவை தொடர்பாக நம்பகமான கருத்துக்களை பெறுவதற்கு எளிய வழி தேவை என உணர்ந்து இந்த தளத்தை உருவாக்கினார்.