அனலாக் எழுதிகள்- தட்டச்சாளர்களுக்கு உதவிய கம்ப்யூட்டர்

எலெக்ட்ரிக் பென்சில் மென்பொருளை முதல் சொல் தொகுப்பான் என  கூறுவதோடு, பரவலாக அறியப்பட்ட எம்.எஸ்.வேர்டு மென்பொருளுக்கு முன்னோடி என்பது பொருத்தமாக இருக்கும். மைக்கேல் ஷரேயர் என்பவர் 1976 ல் உருவாக்கிய இந்த மென்பொருள், கம்ப்யூட்டர்களில் எளிதாக திருத்தி எழுதுவதை முதல்முறையாக சாத்தியமாக்கியது.

சொல் செயலி அல்லது சொல் தொகுப்பான என கொள்ளப்படும் வேர்டு பிராசஸர் மென்பொருள் கீழ் எலெக்ட்ரிக் பென்சில் வருகிறது. வேர்டு பிராசஸர் வகை மென்பொருளுக்கு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. நாம் மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் வேர்டு உள்ளிட்ட சொல் தொகுப்பான்கள் உருவாகி வந்த பாதையில் எலெக்ட்ரிக் பென்சிலை முக்கிய மைல்கல் எனலாம்.

இந்த மின் பென்சிலுக்கு முன் உருவாக்கப்பட்ட சொல் தொகுப்பான்கள் மென்பொருளாக அல்லாமல் அவையே ஒரு சாதனமாக இருந்தன. இயந்திர சொல் தொகுப்பான்கள் என குறிப்பிடப்படும் இந்த சாதனங்களை எழுதுவதற்கான இயந்திரங்கள் என புரிந்து கொள்ளலாம். எனினும், இவை கம்ப்ய்யூட்டரும் அல்ல, டைப்ரைட்டரும் அல்ல, இரண்டுக்கும் இடையே பாலமாக அமைந்த நவீன சாதனங்கள்.

இன்று சொல் தொகுப்பான்கள் பெரும்பாலும் கம்யூட்டருடனே அடையாளப்படுத்தப்பட்டாலும், இதன் வரலாறு டைப்ரைட்டரில் இருந்து துவங்குகிறது.

சொல் தொகுப்பான்களின் வரலாற்றை தனியே விரிவாக பார்க்க வேண்டும் என்பதால், இப்போதைக்கு இந்த வரலாற்றின் ஒரு சிறு கீற்றை மட்டும் பார்க்கலாம். மின் பென்சிலுக்கு முன்னர் அறிமுகமான ஆஸ்ட்ரோடைப் (Astrotype ) சொல் தொகுப்பான் பற்றி பார்க்கலாம்.

ஆஸ்ட்ரோடைப் ஒரு மென்பொருளாக அறிமுகம் ஆகவில்லை. மாறாக, ஒரு கம்ப்யூட்டராக அறிமுகமானது. பிசி என அறியப்படும் தனிநபர்களுக்கான கம்ப்யூட்டர்கள் அறிமுகமாக இன்னமும் பத்தாண்டுகளுக்கு மேல் இருந்த காலகட்டத்தில் 1968 ல், இந்த கம்ப்யூட்டர் அறிமுகமானது. 4 கேபி நினைவுத்திறன் கொண்ட இந்த கம்ப்யூட்டர், டைப்ரைட்டருடன் கண்ணுக்குத்தெரியாத வகையில் இணைக்கப்பட்டிருக்கும். தட்டச்சு செய்யப்படும் ஆவணம் இதில் சேமிக்கப்பட்டு, பின்னர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம். அந்த வகையில், தட்டச்சாளர் தான் தட்டச்சு செய்த ஆவணத்தில் திருந்த்தங்கள் செய்து பிழைகளை நீக்கலாம்.

திருத்தங்கள் என்றால், ஆவணத்தில் மறு தட்டச்சு செய்வது மட்டும் தான். மற்ற திருத்தங்களை அடிக்குறிப்பாக தெரிவித்தால், அவை சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனிச்செயலாளர்களாக பணியாற்றக்கூடிய தட்டச்சாளர்களுக்கான கம்ப்யூட்டர் உதவி சாதனம் என இந்த செய்தியை வெளியிட்ட கம்ப்யூட்டர் வேர்ல்டு பத்திரிகை வர்ணித்திருந்தது. சொல்லப்போனால் கம்ப்யூட்டர் உதவும் டைபிஸ்ட் என்றே தலைப்பிடப்பட்டிருந்தது.

எழுதுவதற்கான ஏஐ உதவியாளர் என பல செயற்கை நுண்ணறிவு சார்ந்த எழுத்து சேவைகள் வர்ணிக்கப்படும் நிலையில், இந்த வரலாற்று குறிப்பை நினைவில் கொள்வது பொருத்தமாக அமையும்.

ஆஸ்ட்ரோடைப் கம்ப்யூட்டர் பற்றிய குறிப்பிற்கு டெக்னோலைசர் வலைப்பதிவுக்கு நன்றி.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *