கல்வி போராளியாக அறியப்படும் மலாலாவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை எனும் பொறுப்பு துறப்புடன் இந்த பதிவுக்குள் செல்லலாம். ஏனெனில், இந்த பதிவு, கூகுள் தேடல் முடிவுகளில் எதிர்கொள்ளக்கூடிய போதாமைகள் தொடர்பானது. மலாலா இதில் ஒரு குறிச்சொல்லாக இடம்பெறுகிறார்.
அது மட்டும் அல்ல, இணைய தேடலை பொருத்தவரை மலாலா எனும் பெயர் அல்லது சொல் மிகுந்த செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது. இந்த பெயருக்கான தேடலில், மலாலா யூசப்சாயே ஆதிக்கம் செலுத்துகிறார் அல்லது முன்னிலை பெறுகிறார்.
மலாலா என கூகுளில் தேடினால், அவரது மலாலா நிதி இணையதளமே முதல் முடிவாக வருகிறது. அருகாமையில் அவரது விக்கிபீடியா பக்கம், இரண்டாவதாக முடிவாக இன்ஸ்டாகிராம் பக்கம், தொடர்ந்து அவரது எக்ஸ் பக்கம், நோபல் பரிசு பக்கம் என வருகிறது.
முதல் சில பக்கங்களுக்கு மலாலா பெயரில் வேறு மலாலாக்கள் யாருமே வரவில்லை. மலாலா அதிகம் தேடப்படும் பெயராக இருப்பது உள்ளிட்ட காரணங்களினால் இதை புரிந்து கொள்ளலாம்.
ஆனால், ஆச்சர்யம் என்னவெனில் 1997 இணையதளங்கள் (1997 websites ) எனும் தேடலிலும் மலாலா முன் வந்து நிற்பது தான். 1997 இணையதளங்கள் என தேடும் போது கூகுள் எட்டாவது முடிவாக மலாலா நிதி (https://malala.org/malalas-story ) பக்கத்தை முன்னிறுத்துகிறது.
1997 இணையதளங்கள் தொடர்பான தேடலில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காத ஏமாற்றத்தை மீறி, மலாலா இணையதளம் வந்து நிற்பது ஆச்சர்யத்தை அளித்தது. மலாலாவுக்கும், 1997 இணையதளத்திற்கும் என்ன தொடர்பு. நேரடியாக ஒன்றும் இல்லை. ஆனால், 1997 மலாலா பிறந்த ஆண்டு என அறிய முடிகிறது. மலாலா தளத்தில், அவர் பிறந்த ஆண்டு 1997 எனும் ஒற்றை குறிப்பால், 1997 இணையதளங்கள் தேடலில் கூகுள் மலாலா இணையதளத்தை முன்னிறுத்துகிறது.
இதை கூகுளின் போதாமை என்பதைவிட, மலாலாவின் டிஜிட்டல் புத்திசாலித்தனம் எனலாம். கூகுள் தேடலில் தனது தளத்தை எப்படி முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என அவருக்குத் தெரிந்திருக்கிறது. அல்லது அவரது டிஜிட்டல் குழுவுக்கு தெரிந்திருக்கிறது.
மேலும் வாசிக்க: கூகுளை கேள்வி கேளுங்கள்!
டிஜிட்டல் மார்க்கெட்டிங், எஸ்.இ.ஓ உத்தி என்றெல்லாம் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு இந்த பதிவு. கூகுள் தேடல் முடிவுகள் என்பது நீங்கள் அறிய முடியாத கருப்பு பெட்டி.
பி.கு: 1997 ல் பிறந்தவர்கள் என தேடினால், 1997 ல் பிறந்தவர்களில் மலாலாவும் ஒருவர் என சுட்டிக்காட்டும் ஆன் திஸ் டே (https://www.onthisday.com/birthdays/date/1997 ) எனும் தளம், தேடல் பட்டியலில் இடம்பெறுகிறது. ஆனால், 1997 ல் பிறந்தவர்களுக்கான விக்கிபீடியா பக்கத்தில் மலாலா பெயரை காண முடியவில்லை. – https://simple.wikipedia.org/w/index.php?title=Category:1997_births&from=M
–