தாமஸ் பெக்டல் என்பவரின் பழைய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. தனியுரிமையின் முதல் விதி எனும் தலைப்பில், அந்த விதியை விவரித்திருக்கிறார்.
” நான் என்ன பகிர விரும்புகிறேன் என்பதை தீர்மானிப்பது நான் மட்டுமே’ என்பதாக அந்த விதி அமைகிறது.
எளிய விதி தான், ஆனால் தனியுரிமை தொடர்பான எல்லா சூழல்களுக்கும் பொருந்தும் என்கிறார் பெக்டல்.
இந்த விதியை இப்படி புரிந்து கொள்ளலாம், இணையத்தில் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள், ஆனால் எதை பகிர்வது என தீர்மானிப்பது நீங்களாக மட்டுமே இருக்க வேண்டும். எதை பகிர்வது எனும் முடிவை எக்காரணம் கொண்டும், யாரிடமும், எந்த நிறுவனத்திடமும் அல்லது எந்த அல்கோரிதமிடமும் விடக்கூடாது என்கிறார் பெக்டல்.
இணைய சேவைகளை உருவாக்கும் எந்த ஒரு நிறுவனமும், இந்த விதையை மீறக்கூடாது என்கிறார்.
பெக்டல் சொல்லும் இந்த விதி, தனியுரிமையின் முதல் விதியாக எங்கும் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆனால், இந்த விதியை தனியுரிமையின் பொன் விதியாக கொள்ளலாம் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், இணையத்தில் எதை பகிர்வது என தீர்மானிக்கும் உரிமை பயனாளிகள் வசம் மட்டுமே இருப்பது எல்லா விதங்களிலும் சிறந்தது.
இந்த விதியை அளவுகோளாக வைத்துக்கொண்டால், பேஸ்புக், வாட்ஸ் அப், ஆப்பிள், கூகுள் என பெரும்பாலான நிறுவனங்களில் பயனாளிகளின் தனியுரிமையுடன் விளையாடிக்கொண்டிருப்பதை உணரலாம். பேஸ்புக்கின் நண்பர்கள் பரிந்துரை துவங்கி, டைம்லைன் செய்திகள் வரை எல்லாமே தனியிரிமை மீறல்கள் தான். ஆண்ட்ராய்டு போனில் கூகுள் பழைய படங்களை நமக்கு நினைவூட்டுவதும், கூகுள் வரைபடத்தில் நாம் சென்று வந்த இடங்களை காட்டுவதும் மீறல் தான்.
தனியுரிமையின் முதல் படி, தரவுகள் திரட்டும் போது பயனாளிகளிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பதாகும். இந்தியாவின் தரவு பாதுகாப்பு சட்டத்தில் கூட இந்த அம்சம் முதன்மையாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இதில் மிகத்தீவிரமாக இருக்கிறார்கள்.
பெக்டல் விதி பற்றிய அறிய: https://www.baekdal.com/trends/the-first-rule-of-privacy