பொதுவெளியில் உள்ள புத்தகங்களை இலவச மின்னூலாக வாசிக்க வழி செய்யும் குடென்பெர்க்,ஆர்க் இணையதளத்தை, இன்னொரு தளமாக அல்லாமல் ஆகச்சிறந்த இணையதளங்களில் முதன்மையானதாக கருத வேண்டும். இதற்கான முக்கிய காரணங்கள்:
வாசிப்பு வசதி: புத்தகங்களை எல்லோரும் எளிதாக அணுகும் வகையில் மின்னூலாக வழங்குவதன் மூலம் இணையத்தின் சாத்தியத்தை இந்த தளம் உணர்த்துகிறது. டிஜிட்டல் நூலகத்திற்கும் சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
பொதுவெளி நூல்கள்: குடென்பெர்க் தளத்தில் மின்னூல்களை இலவசமாக விரும்பிய கோப்பு வடிவில் வாசிக்கலாம் என்றாலும், எல்லா புத்தகங்களையும் வாசிக்க முடியாது. காப்புரிமை விடுபட்டு பொதுவெளியில் இருக்கும் நூல்களை மட்டுமே மின்னூலாக்கப்படுகின்றன. அந்த வகையில் காப்புரிமையை மீறாத இணையதளம்.
கூட்டு முயற்சி: குடென்பெர்க் தளத்தில் உள்ள மின்னூல்கள் இலவசம் என்றாலும், அவற்றின் மின்னுலாக்கத்தரம் சிறப்பானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மின்னூலாக்கும் போது உண்டாக கூடிய எழுத்து பிழைகள் போன்றவற்றை களைவதோடு, மற்ற பதிப்பு சார்ந்த பிழைகளையும் திருத்தி மூல வடிவிற்கு நிகராக மின்னூல்கள் இடம்பெறுகின்றன. தளத்தின் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியே இதற்கு காரணம். பிழை திருத்தம் பார்ப்பதற்கு என்று தன்னார்வலர்கள் உள்ளனர். இத்தகைய தயாரிப்பு நேர்த்தி எல்லா பொது திட்டங்களுக்கும் அவசியம்.
தொலைநோக்கு: குடென்பெர்க் திட்டம், மைக்கேல் ஹார்ட் எனும் தனிமனிதரின் முயற்சி. உலகின் முதல் நூலை உருவாக்கிய ஹார்ட் இந்த திட்டத்தில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல், கூட்டு முயற்சியால் மட்டுமே இது சாத்தியம் என்பதை உணர்ந்து, இதற்கான இணைய சமூகத்தை உருவாக்கியுள்ளார். திட்டத்திற்கான அடிப்படை நெறிமுறைகளை வகுத்து, மற்றவர்களிடம் அதை ஒப்படைத்துள்ளார். அதுவே தளத்தை வளர்த்தெடுகிறது.
துணை தளங்கள்: குடென்பர்க் தளத்தில் உள்ள புத்தகங்களை பயன்படுத்துவதில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதில் உள்ள மின்னூல்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மற்ற இணையதளங்களும் இருக்கின்றன. மெனிபுக்ஸ் (https://manybooks.net/about ) ஒரு உதாரணம்.
அப்டேட்: இந்த தளத்தின் வடிவமைப்பை ஆகச்சிறந்தது என சொல்ல முடியாது. ஆனால் பயன்பாட்டு எளிமை கொண்டது. தற்போது இதன் முகப்பு பக்கமும் சிறந்த முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.