திரெட்ஸ் சேவை நன்றாக தான் இருக்கிறது. இப்படி நினைக்க வைத்த ஒரு விவாத நூலை இப்போது பார்க்கலாம்.
பெல்லோ எனும் திரெட்ஸ் பயனாளி ஒருவர் தனது திரெட்ஸ் பக்கத்தில் இந்த நூலை உருவாக்கியிருந்தார்.
அமெரிக்க தேசிய கொடி படத்துடன், கூகுள் செய்யாமல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களை சொல்லவும் என கேட்டிருந்தார்.
இந்த கேள்விக்கு, சமூக ஊடகம், கம்ப்யூட்டர், தொலைபேசி, விமானம், ஜிபிஎஸ், பல்ப் என ஒருவர் பதில் அளித்திருந்தார்.
இதற்கு இன்னொருவர் அளித்திருந்த பதில்; (பதிலடி)
Social Media: Sweden
Computers: England
Phone: Italy
Airplanes: ‘Murica
GPS: Murica
Light Bulb: Germany
இதன் பொருள், நீங்கள் குறிப்பிட்ட எதுவும் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதாகும்.
இதற்கு இன்னொருவரு பதிலாக ஒரு கேள்வியை கேட்டிருந்தார். ‘ நீங்கள் எந்த சமூக ஊடகத்தை குறிப்பிடுகிறீர்கள். ஐ.ஆர்.சி.கேலரியா பின்லாந்தில் 2000 ல் உருவானது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் சிக்ஸ்டிகிரீஸ் உருவனது.
இதுவே ஆச்சர்யம் அளிக்கிறது என நினைத்தால், இந்த கேள்விக்கு முதலில் பட்டியலை சமர்பித்தவர் விரிவான பதில் அளித்திருந்தார். லூனார்ஸ்டிராம் எனும் ஸ்வீடன் நாட்டு வலைப்பின்னல் 1996 ல் அறிமுகமானது. அதுவே உலகின் முதல் சமூக ஊடகம் என வர்ணிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.
இதன் கீழ், இன்னொருவர் ஏ.ஓ.எல், கம்ப்யூசர்வ்,எம்.ஐஆர்சி எல்லாம் என்னாச்சு என கேட்டிருந்தார்.
இவை எல்லாம், சமூக வலைப்பின்னல் தளங்கள் கிடையாது என்பதாக, பட்டியல் பயனாளி பதில் அளித்திருந்தார்.
இதற்குள், இந்த நூலில், சமூக ஊடகத்தின் ஆரம்ப கால வரலாறு கிட்டத்தட்ட வந்துவிட்டது. லூனார்ஸ்டிராம் முதல் சமூக ஊடகம் என கொள்ள முடியாவிட்டாலும், ஆரம்ப கால வலைப்பின்னல் சேவைகளில் ஒன்று. அமெரிக்க உருவாக்கம் அல்ல.
ஆனால், அதற்கும் முன்னதாக அமெரிக்காவில் கம்ப்யூசர்வ் , தகவல் பலகை எனும் பிபிஎஸ் எல்லாம் இருந்தது. இதையும், ஒருவர் சுட்டிக்காட்டி சமூக ஊடக காலவரிசை தகவல்களையும் பகிர்ந்திருந்தார்.
ஆக இந்த திரெட்ஸ் நூல், சுவாரஸ்யமான கேள்வி ஒன்றுடன் துவங்கி சமூக ஊடக வரலாற்று விவாதமாக வளர்ந்து நிற்கிறது. சிக்கலான இந்த வரலாற்றை மிக அழகாக ஒரு சில பதிவுகளில் விளக்கும் இந்த நூலிழை, சமூக ஊடக விவாத தன்மையின் அடையாளமாகவும் விளங்குகிறது.
திரெட்ஸ் தளத்திற்குள் நுழையாமலே இந்த விவாத நூலை பார்க்க முடிந்தது இன்னும் சிறப்பு. ஒற்றை பக்கத்தில் சமூக ஊடக வரலாற்றின் சுருக்கம் என இந்த நூலை வர்ணிக்கலாம்.
–