ஸ்டிரீமிங் யுகத்தில் ’சிடி’க்கள் வழக்கொழிந்து போய்விட்டன. சிடி பிளேயர்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. சிடிக்களின் அடுத்த வடிவமான டிவிடிகளும் காணாமல் போய்விட்டன.
சிடிகள் பெளதீக வடிவில் மறைந்து போனாலும், கருத்தாக்கம் மற்றும் செயல்வடிவில் அவை தொடர்வே செய்கின்றன.
இந்த பின்னணியில், தற்செயலாக கண்ணில் பட்ட, சிடி தொடர்பான டைம் இதழ் கட்டுரை வியக்க வைக்கிறது.
லட்சக்கணக்கான இசை ரசிகர்கள், சிடிக்களின் துல்லியமான ஒலிக்கு அடிமையாகி கொண்டிருக்கின்றனர். அவர்களின் இசை அலமாரிகளில், கேசட்கள், வினைல்களுக்கு பதிலாக சிடிக்கள் இடம் பெறத்துவங்கியிருப்பதாக துவங்கும் இந்த சிறிய செய்திக்கட்டுரை, இசையை அடுத்து இப்போது கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கும் சிடிக்கள் தயாராவதாக தெரிவிக்கிறது.
ஒரு சிறப்பு டிஸ்க் சாதனம் மூலம் சிடியை கம்ப்யூட்டரில் இணைத்தால், ஒரு சிடியில் 1500 பிளாப்பி டிஸ்க்களில் இடம்பெறக்கூடிய தரவுகளை பதிவேற்றலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சியாட்டிலில் நடைபெற்ற சிடி மாநாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புக்ஷெல்ப் எனும் சிடியை 295 டாலர் விலையில் வெளியிட்டது. பத்து பிரபலமான ஆவணத்தொகுப்புகளை இந்த சிடி கொண்டிருந்தது. இந்த சிடி, கம்ப்யூட்டர் மற்றும் சிடி டிரைவ் சாதனம் இருந்தால் ஒரு எழுத்தாளர் தனது சொல் தொகுப்பானில் தடையில்லாமல் பணியாற்ற தேவையான பெரும்பாலான தகவல்களை பெறலாம்.
கட்டுரை வெளியான 1987 ம் ஆண்டு இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கவில்லை என்பதால் சிடி வழியே தகவல்களை அணுகுவது என்பது புதிய வசதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கட்டுரையின் மூன்றாவது பத்தியில், சிடியின் தொழில்நுட்ப தன்மை விவரிக்கப்பட்டுள்ள விதத்தை இதழியல் கவிதை என்று வர்ணிக்கலாம்.
“இசை மற்றும் தரவுகளை எளிதாக சேமிக்கும் இந்த டிஸ்க் ஒரு தொழில்நுட்ப அற்புதம். குண்டு துளைக்காத கண்ணாடி ஜன்னல்களுக்கான பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த டிஸ்கில் லேசர் கதிர்கள் கொண்டு கீறல் போடப்படுகின்றன. இதன் காரணமாக உண்டாகும், குழி மற்றும் தட்டை நிலைகள் பைனரி இலக்கங்களை சேமிக்கின்றன. ஒவ்வொரு குழியும் ஒரு பேக்டிரியா அளவு இருக்கிறது. 4.72 அங்குளம் கொண்ட டிஸ்கில் மொத்தம் 2 கோடி பேக்டீரியம் குழிகளில், வட்ட வடிவில் 3 மைல் நீளத்திற்கு அமைந்துள்ளன. இந்த ஒற்றை டிஸ்கில் 2,50,000 பக்கங்களை சேமிக்கலாம். “
இப்படி விவரிக்கும் கட்டுரை அடுத்த இரண்டு பத்திகளில் அதன் சாத்தியங்கள், வரம்புகளை பேசுகிறது. சிடிக்கள் மீண்டும் எழுதப்பட முடியாதது மற்றும் அதன் விலை ஆகிய அம்சங்கள் குறிப்பிடப்படுகின்றன. ரைட் செய்யக்கூடிய சிடிகள் பின்னர் வந்தன.
இந்த கட்டுரையை இப்போது படித்துப்பார்க்கும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.
தொழில்நுட்ப பாய்சல்களில், நாம் அவற்றின் அப்டேட்களில் கவனம் செலுத்துவதோடு, வரலாறு மற்றும் ஆதார அம்சங்களிலும் அக்கரை கொள்ள வேண்டும்.
சிடி எனும் வடிவம் அல்லது நுட்பம் புதிய ஊடகத்தின் வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது. சோனி டிஸ்க்மேன் பற்றி இந்த வரிசையில் தனியே பார்க்கலாம்.
நிற்க, இந்த கட்டுரைக்கான டைம் இதழ் தலைப்பு, கம்ப்யூட்டர்ஸ்: மொசார்ட் முதல் மெகாபைட் வரை”
தமிழில் நான் கொடுக்க விரும்பும் தலைப்பு: முத்துத்தாண்டவர் முதல் மெகாபைட் வரை!
கட்டுரைக்கான இணைப்பு! https://time.com/archive/6708608/computers-from-mozart-to-megabytes/