மொழி மாதிரி- ஆக்கத்திறன் ஏஐ வேறுபாடு என்ன?

இணையமும், வலையும் வேறு வேறு என்று விளக்குவது போல, சமூக வலைப்பின்னல் தளமும், சமூக ஊடகமும் வேறு வேறு என்பது போல, சமகாலத்தில், ஆக்கத்திறன் ஏஐ வேறு, மொழி மாதிரிகள் வேறு வேறு என்று வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

ஏஐ தொடர்பான விவாதங்களிலும், பயன்பாட்டிலும், ஆக்கத்திறன் ஏ.ஐ மற்றும் மொழி மாதிரிகள் ஆகிய சொற்களும் அதிகம் இடம்பெற்றாலும், அடிப்படையில் இரண்டும் மாறுபட்டவை.

ஏஐ பயன்பாட்டையும், அதன் தாக்கத்தையும், புரிந்து கொள்ள இந்த வேறுபாட்டை அறிவது அவசியம்.

மொழி மாதிரிகள் பொதுவாக எல்.எல்.எம் என குறிப்பிடப்படுகின்றன. ஆக்கத்திறன் ஏஐ, ஜெனரேட்டிவ் ஏஐ என அறியப்படுகிறது.

இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை என்றாலும், வேறுபாடு கொண்டவை.

ஆக்கத்திறன் ஏஐ என்பது, புதிய எழுத்து ஆக்கம், உருவங்கள், ஒலி மற்றும் காணொலி வடிவங்களை உருவாக்கத்தரும் ஒரு வகை ஏஐ திறனை குறிக்கிறது. இந்த உருவாக்கத்திற்கு அடிப்படையாக ஒரு மாதிரி தேவை. அந்த மாதிரி, பெரும்திரளான தரவுகள் கொண்டு ஆக்கத்தில் ஈடுபடுகிறது.

மொழி மாதிரி என்பது, மனித உள்ளீட்டை கொண்டு மனிதர்கள் உருவாக்க கூடியது போன்ற எழுத்து வடிவத்தை உருவாக்கி தரக்கூடியது. இதற்காக பயன்படுத்தப்படும் நுட்பமே மொழி மாதிரி எனப்படுகிறது.

மொழி மாதிரியை ஆக்கத்திறன் ஏஐ நுட்பத்தின் ஒரு பகுதி என கொள்ளலாம். ஆக்கத்திறன் ஏஐ என்பது செய்யறிவு நுட்பத்தின் உருவாக்கத்தரும் திறனை குறிக்கிறது. மொழி மாதிரி என்பது, இதன் ஒரு பகுதியாக அமையும் எழுத்து வடிவிலான ஆக்கத்தை உருவாக்குத்தரும் நுட்பம்.

எல்லா வகையான மொழி மாதிரிகளும் ஆக்கத்திறன் நுட்பத்தின் கீழ் வரும். ஆனால், மொழி மாதிரிகள் தவிர வேறு பல விதமான ஆக்கத்திறன் ஏஐ நுட்பங்கள் உள்ளன. உதாரணம்: மிட்ஜர்னி. இது உருவங்களால் அளிக்கப்பட்ட பயிற்சி கொண்டு புதிய உருவங்களை உருவாக்கித்தருகிறது. இன்னும் பல வகை ஆக்கத்திறன் நுட்பங்கள் உள்ளன.

ஏஐ அடிப்படைகள் மற்றும் வரலாற்றை அறிய:

ஏஐ ஒரு எளிய அறிமுகம் புத்தகம் வாசிக்கவும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *