மெலிசா மார்ஷல் (MELISSA MARSHALL ) என்ற பெயரில் புகைப்பட கலைஞர் ஒருவர் இருக்கிறார். மெலிசா மார்ஷல் என்ற பெயரில், காட்சி விளக்க கலையின் வல்லுனர் ஒருவரும் இருக்கிறார். இதே பெயரில் மேலும் எண்ணற்றவர்கள் இருக்கின்றனர் என்றாலும், கூகுள் தேடலில் முதல் பத்து பட்டியலில் பொருட்படுத்தப்படும் மெலிசா மார்ஷல்’கள்’ பற்றி மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன்.
இந்த இரண்டு மெலிசா மார்ஷல்களில், புகைப்பட கலைஞர் மெலிசா மார்ஷல் தான் சிறந்தவர் என்று கூகுள் எண்ண வைக்கிறது. ஆனால், நான் காட்சிவிளக்க கலை வல்லுனரான மெலிசாவை எதிர்பார்த்தே தேடியதால், கூகுள் தேடல் பட்டியலில், இந்த மெலிசாவுக்கு பதில் அந்த மெலிசா முதலில் வந்தது நெருடலாக அமைந்தது.
புகைப்பட கலைஞர் மெலிசா மார்ஷல் பெயரிலேயே சொந்த இணையதளம் இருப்பதால் அவரது தளம் முதலில் வந்ததாக கருதலாம். இன்னொரு மெலிசாவின் இணையதளம், அவரது காட்சி விளக்க கலையை குறிக்கும் வகையில் பிரசண்ட் யுவர் சயின்ஸ் (https://www.presentyourscience.com/ ) எனும் பெயரில் அமைந்திருப்பதால் கூகுளில் பின்னுக்குத்தள்ளப்பட்டுவிட்டதாக கருதலாம். இதே பெயரில் உள்ள பாப் இசைக்கலைஞரின் இணையதளம் இவருக்கு பின்னால் வருகிறது.
நிச்சயம், இந்த முதன்மை வரிசையில், தேடியந்திரமயமாக்கல் உத்தி முன்னுரிமை பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதே தேடலை பிங் தேடலில் நிகழ்த்திய போது, காட்சிவிளக்க கலைஞர் மெலிசாவின் இணையதளம் முதலிலும், புகைப்பட கலைஞர் தளம் இரண்டாவதாகவும் வருகிறது. கூகுள் தேடலில் கூட, காட்சிவிளக்க கலைஞர் மெலிசாவின் லிங்க்டுஇன் பக்கம் இரண்டாவது இடத்தில் வருகிறது.
கூகுளின் இந்த பட்டியலிடலில் அதற்கான அல்கோரிதம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், வணிக நோக்கலான காரணங்கள் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியுமா என்ன? கூகுள் தேடலில் கவனிக்கப்படாத பிரச்சனைகள் இவை.
நீங்களும் தேடிப்பார்த்து சொல்லுங்கள்!