எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? அதெப்படி பாடப்புத்தகங்களே இல்லாமல் போகும் என கேட்காதீர்கள். ஏனெனில் ஏஐ நுப்டத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
நிற்க இது என் சொந்த கருத்து அல்ல: டேவிட் வெய்லி என்பவர், ஏஐ தாக்கம் தொடர்பாக எழுதி வருபவர், தனது வலைப்பதிவில், எதிர்கால பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அந்த பதிவில் தான், பாடப்புத்தகங்களே எழுதப்படாமல் போகும் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறார்.
அதாவது பாடப்புத்தகங்கள் இருக்கும், ஆனால் அவை வழக்கமான பாடப்புத்தகங்களாக இருக்காது. மாறாக, ஏஐ காலத்திற்கு ஏற்ற புதுமையான பாடப்புத்தகங்களாக இருக்கும் என்கிறார். இதற்கு வெய்லி அளிக்கும் விளக்கம் இப்படி அமைகிறது:
எதிர்கால கல்வியாளர்கள் பாடப்புத்தகங்களை எழுதாமல், ஏஐ சேவைகளுக்கு கட்டளையிடும் கோரிக்கைகளின் (prompts) தொகுப்புகளை மட்டும் கொண்டதாக இருக்கும். வழக்கமான புத்தகம் மூலமான நேர்கோட்டிலான வாசிப்புக்கு பதிலாக மாணவர்கள், இந்த கோரிக்கைகளை கொண்டு மொழி மாதிரிகளுடன் உரையாடி கற்றுக்கொள்வார்கள்.
குறிப்பிட்ட பாடத்தலைப்பு தொடர்பாக பறவை பார்வை புரிதலை அளிக்கவும் அல்லது ஆழமான விளக்கத்தை தரவும் என்று கேட்பதன் மூலம் மாணவர்கள் நன்றாக பாடத்தை உள்வாங்கி கொள்வார்கள். கேள்விகள் கேட்கச்செய்து பதில் அளித்து பரிசோதித்துக்கொள்வார்கள்.
இதையே இன்னும் கொஞ்சம் விரிவாக்கினால், எல்லா பாடபுத்தகங்களையும் எடுத்தி அவற்றில் உள்ள பாடங்களின் தலைப்புகள் தவிர மற்ற எல்லா உள்ளடக்கத்தையும் அழித்துவிட்டு, தலைப்புகளை எல்லாம் கோரிக்கைகளாக மாற்றிவிட்டால் போதும். அந்த கோரிக்கைகள் கொண்டு மாணவர்கள் இன்னும் நன்றாக கற்றுக்கொள்வார்கள்.
இப்படி ஏஐ சேவைகள் கொண்டு உருவாக்கப்படும் பாடம் இல்லா புத்தகங்களை ஆக்கத்திறன் புத்தகங்கள் அல்லது உருவாக்கப்பட்ட புத்தகங்கள் என அழைக்கலாம் என்கிறார் வெய்லி.
ஏஐ சாட்பாட்கள் பின்னே இருக்கும் மொழி மாதிரிகள் எல்லாம் வல்லவை எனும் அடிப்படையில் இந்த பதிவு அமைந்துள்ளது. ஏஐ சேவைகளை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது எனும் கருத்துடன் இந்த பதிவை துவக்கி, வெய்லி கற்றலில் ஏஐ பயன்பாட்டிற்கான வழிகளை இவ்வாறு விவரித்துள்ளார். மனப்பாட கல்விக்கு மாறாக, மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மேலான புரிதலை பெறும் கல்வியாக இது அமையும் என்றும் கருதுகிறார்.
இந்த மாற்றங்கள் எல்லாம் வருமா எனத்தெரியாது. வெய்லி சொல்வதை முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவரது வாதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏஐ சேவைகளின் தாக்கம் குறித்து அவர் தொடர்ச்சியாக தனது வலைப்பதிவில் எழுதி வருகிறார். ஏஐ பயன்பாடு தொடர்பான சாத்தியங்களை புரிந்து கொள்ள இது உதவும்.- https://opencontent.org/blog/archives/7238
—