அந்த கால இணையமும், இந்த கால சாட்ஜிபிடியும்!

இணையத் தேடலில் கிரேக் நோட்ஸ் என்பவரை கண்டறிந்திருக்கிறேன். கூகுள் தேடலில் அல்ல, காட்சித் தேடியந்திரங்கள் தொடர்பான தேடலில் பழைய விவிஸ்மோ பக்க இழையில் இருந்து எப்படியோ நோட்ஸ் வந்து நின்றார்.

வி்விஸ்மோ (Vivismo ) இழையில் இருந்து ஜோ பார்கர் (Joe Barker, ) என்பவரை தேடிச்சென்ற போது, இன்போவேர்ல்ட் இணைய இதழின் பழைய பக்கங்களில் கிரேக் நோட்ஸ் எழுதிய பத்தியை படித்த போது, யார் இந்த நோட்ஸ் என மேலும் அறியும் ஆர்வம் உண்டானது. தொழில்முறை நூலகரான நோட்ஸ், இணையம் தொடர்பாக 1990 களின் பிற்பகுதிகளிலேயே வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார்.

1990 களின் பிற்பகுதி இணையம் பிரபலமாகத் துவங்கிய காலம். இணையம் எனும் புதிய ஊடகத்தை எப்படி அணுகுவது எனும் குழப்பமும், தயக்கமும் பலருக்கு இருந்த நிலையில், இணைய நிகழ்வுகள், போக்குகள், நுட்பங்கள் குறித்து கேட்ஸ் எழுதி வந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அப்போது உருவாகத்துவங்கிய தேடியந்திரங்கள் தொடர்பாக விரிவாகவே எழுதியிருக்கிறார்.

தேடியந்திரங்கள் தொடர்பான கேட்ஸ் எழுத்துக்களில், கூகுளை விடவும், அல்டாவிஸ்டா, இன்போசீக் போன்ற அந்த கால தேடியந்திரங்கள் பற்றிய குறிப்புகளே அதிகம் உள்ளன. இன்னொரு ஆச்சர்யம் என்னவெனில், இப்போது இணையத்தில் இருந்து திடிரென மறைந்துவிட்ட கிகாபிளாஸ்ட் தேடியந்திரம் பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறார். அந்த காலத்தில் கிகாபிளாஸ்ட் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வந்த புதிய அம்சங்களை பார்த்தால், வரலாற்றில் அதற்கான இடம் மேலும் முக்கியமாகிறது.

நிற்க, கேட்ஸ் தொடர்ந்து எழுதிய ’ஆன் தி நெட்ஸ்’ எனும் பத்திகள் ஒன்றில், இணையம் என்பதை ஆன்லைன் சேவையாக கருதுவது எனும் தலைப்பில் ஒரு பத்தி எழுதியிருக்கிறார்.

இந்த பத்தியின் துவக்க வரிகளே கவர்கிறது.

’அறிவார்ந்த பல குரல்களை மீறி இணையம் தொடர்பான பொதுவான தப்பெண்ணம் என்னவெனில், உலகின் அனைத்து தகவல்களும் இணையத்தில் இருப்பதான கருத்து தான். ஆன்லைன் தகவல் எனும் உலகிற்கு புதிதாக வருபவர்கள், சுவாரஸ்யமான இணையதளங்களை மற்றும் பெருமளவிலான தகவல்களை கண்டறிகின்றனர், அதன் காரணமாக, மற்ற எல்லாமும் இணையத்தில் இருக்கும் என நினைத்துக்கொள்கின்றனர். “

இப்படி மக்களின் இணைய எண்ணம் பற்றி குறிப்பிடுபவர், அடுத்த வரியிலேயே இதிலிருந்து முரண்பட்டு, ஆன்லைன் வழிகளின், குறிப்பாக இணையத்தின் எல்லைகளை தொழில்முறை தகவல் அறிஞர்கள் அறிந்துள்ளனர் என எழுதுகிறார்.

ஆக, இணையத்தில் எல்லா தகவல்களும் இருக்கலாம் என கருதப்படுவது உண்மை அல்ல, இணையம் என்பது வரம்புகள் கொண்டது என நோட்ஸ் வாயிலாக புரிந்து கொள்ளலாம். நோட்ஸ் இந்த கருத்தை 1996 லேயே குறிப்பிட்டிருக்கிறார் என்பது தான் கவனிக்கத்தக்கது.

1996 க்கு பிறகு இணையம் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது என்றாலும், நோட்ஸ் கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. இணையத்தில் எல்லா தகவல்களும் கிடையாது. அது பிழை எண்ணம்!

இடைப்பட்ட ஆண்டுகளில், இணைய வளர்ச்சிக்கு மத்தியில் பல பழைய அரிய இணைய பக்கங்கள் காணாமல் போயிருப்பதோடு, பொய்த்தகவல்களும், பிழைத்தகவல்களும் மலிந்திருக்கின்றன என்பதே உண்மை.

இணையத்தில் எல்லாமும் இல்லை எனும் கருத்தை முன்வைத்து, சராசரி தேடலுக்கு வெளியே உள்ள தரவு தொகுப்புகள் பற்றி நோட்ஸ் விரிவாக குறிப்பிடுகிறார்.

இப்போது, நோட்ஸ் பத்தியை வாசிக்கையில், சாட்ஜிபிடியுடன் பொருத்திப்பார்க்கத்தோன்றுகிறது.

எப்படி இணையத்தில் எல்லா தகவல்களும் இருப்பதாக கருதப்பட்டாலும், அது உண்மை இல்லையோ அதே போல,சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்களால் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியும் எனும் எண்ணமும் பிழையானது தான். அதைவிட முக்கியமாக சாட்ஜிபிடிக்கள் அளிக்கும் பதில்களின் துல்லியத்தை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் போக்கு அபத்தம் மற்றும் ஆபத்து.

சாட்ஜிபிடி சாட்பாட்டுக்கு பயிற்சி அளிக்க மொத்த இணைய கருத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இணையமே மொத்த உலகமும் இல்லை எனும் போது, இணையம் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்ட சாட்ஜிபிடியை முழுமுதலான சேவையாக நம்புவது பிழை தான்.

கிரேக் நோட்ஸின் இணையதளம் ( புதுப்பிக்கப்படவில்லை). – http://notess.com/write/archive/9608.html

சாட்ஜிபிடி பற்றி அறிய; ’சாட்ஜிபிடி சரிதம்’ புத்தகம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *