’ஐடூல்ஸ்.காம்” (http://itools.com/ ) தளத்தை இணையத்தின் ஆகச்சிறந்த தளங்களில் ஒன்று என்று சொல்வதற்கில்லை. ஆனால், மோசமான தளமும் அல்ல. முக்கியமாக விளம்பர நோக்கிலான குப்பை தளம் அல்ல: இருப்பினும், இந்த தளம் கூகுளின் தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது கூகுள் தேடல் பக்கத்தில் முன்னிலை பெறாமல் பின்னுக்குத்தள்ளப்படுவது.
இந்த தளம் கூகுள் தண்டனைக்கு உள்ளானது ஏன்?
ஐடூல்ஸ், இணையத்தில் தகவல்களை தேடுவதற்கான தேடியந்திரங்களையும் தேடல் சேவைகளையும் ஒரே பக்கத்தில் பட்டியலிடுகிறது. இன்னும் சரியாக சொல்வது என்றால், இணைய கருவிகளை தொகுத்தளிக்கிறது. பயனுள்ள சேவை தான். ஆனால், இதன் பயன்பாடு என்பது வெறும் தொகுத்தளித்தால் தான். கொஞ்சம் புத்திசாலித்தனமாக, வலை கருவிகள் என்பதை மையமாக வைத்துக்கொண்டு இதன் வரையறை கீழ் வரக்கூடிய சேவைகளை எல்லாம் தொகுத்தளிக்கிறது. இதற்கான இடைமுகமும் புத்திசாலித்தனமாக இருக்கிறது.
’உங்கள் தேவை எதுவாக இருந்தாலும் அதற்கான சிறந்த வலை கருவிகளை கண்டறிந்து பகிர்கிறோம்’ எனும் அறிமுகத்துடன் தேடல், மொழி, ஊடகம், இணையம் மற்றும் பணம் என தனித்தனி தலைப்புகளில் தொடர்புடைய கருவிகளை அதாவது இணைய சேவைகளை பட்டியலிடுகிறது.
உதாரணமாக, தேடல் எனும் தலைப்பின் கீழ், வலை (web ) என்பதை தேர்வு செய்தால், கூகுள் தேடலை பிரதானமாகவும், அதன் கீழ் டக்டக்கோ, பிளக்கோ, ஆஸ்க்ஜீவ்ஸ் உள்ளிட்ட மற்ற தேடியந்திரங்கள் தரப்பட்டுள்ளன. அருகே தொடர்புடைய கருவிகள் எனும் தலைப்பின் கீழ், துணைத்தலைப்புகள் உள்ளன. எதை கிளிக் செய்தாலும் இதே போன்ற இணைய பக்கத்தை காணலாம்.
இதன் தொகுப்பில் ஒரு சில பரிந்துரைகள் பயனுள்ளதாக இருக்கின்றன. இன்னும் சில தட்டையாக இருக்கின்றன.
ஆனால், அங்கும் இங்கும் அலையாமல் ஒற்றை பக்கத்தில், தேவையான இணைய சேவைகளை கண்டறியும் வகையிலான இதன் இடைமுகம் சிறப்பானதாக தோன்றுகிறது.
மைய பட்டியல் தவிர, புதிய கருவிகள், பிரபலமான கருவுகள், முன்னிறுத்தப்படும் கருவுகள் எனும் தலைப்புகளுடன், வேகமான தேடலுக்கு, குறிச்சொற்கள் சார்ந்து கருவிகளை அடையும் வழியாக தொடர்புடைய முக்கிய சொற்களும் உள்ளன. இடையே, நேரடி தேடல் வசதியும் இருக்கிறது.
இதன் அறிமுக பக்கம், உரிமையாளர் விவரம் கொண்டிருக்காவிட்டாலும், இணைய சேவைகளை கண்டறிய உதவும் நோக்கத்தை தெரிவிக்கிறது.
ஆச்சர்யம் என்னவெனில், 1995 ம் ஆண்டு முதல் இந்த சேவை செயல்பட்டு வருகிறது. தற்போதைய வடிவம் தவிர, 2012 க்கு முந்தைய அந்த கால வடிவமைப்பை அணுகும் வசதியும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இணைய சேவைகளின் தொகுப்பைத்தவிர, வேறு பெரிய மெனக்கெடல் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்றாலும், பயனுள்ள சேவையாக குறித்து கொள்ளலாம். இந்த தொகுப்பே கூட விளம்பர நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை மீறி, விளம்பர குப்பை தளங்கள் போல் அல்லாமல், பயன்பாட்டை முன்னிறுத்துகிறது.
இந்த தளத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கின்றனவா எனத்தெரியவில்லை. ஆனால், தேடல் கருவிப்பெட்டிகள் ( ) என தேடும் போது இந்த தளத்தை முன்னிறுத்தவில்லை.
இணையத் தேடல் தொடர்பான சேவைகளின் தொகுப்பு என புரிந்து கொள்ளக்கூடிய தேடல் கருவிப்பெட்டிகள் தேடலுக்கு, ஐடூல்ஸ் தளம் நிச்சயம் பொருத்தமாக இருக்கும் என்பதை மீறி இதற்கான கூகுள் தேடலில் இந்த தளம் கண்ணில் படவில்லை. மாறாக, மைக்ரோசாப்டின் பிங்கில் இதே தேடலுக்கு ஐடூல்ஸ் தளம் முன்னிறுத்தப்படுகிறது.
கூகுளில் ஐடூல்ஸ் என குறிப்பிட்டு தேடினால் கூட, இந்த தளம் முதலில் இடம்பெறலாமல் இதே பெயரிலான வைரஸ் நீக்க சேவையை முன்னிறுத்தப்படுகிறது.
ஏதோ சில காரணங்களுக்காக, ஐடூல்ஸ் தளம் கூகுளால் தண்டிக்கப்பட்டிருக்கிறது. வெறும் விளம்பர நோக்கிலான தளம் என்பது காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இத்தகைய தளங்கள் பல கூகுளால் முன்னிறுத்தப்படுவதை பார்க்கலாம். இந்த தளத்தின் உள்ளடக்கம் பெரிதாக புதுப்பிக்கப்படவில்லை என்பதையும் ஒரு காரணமாக சொல்ல முடியாது. புதுப்பிக்கப்படாத தளங்களும் கூகுளால் முன்னிறுத்தப்படுகின்றன.
அல்லது ஐடூல்ஸை முன்னிறுத்துவதால் கூகுளுக்கு எந்த விளம்பர லாபமும் இல்லை என்பதால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதாக கருதலாம்.
எது எப்படியோ, தேடலுக்கான உத்திகள் தொடர்பான ஆய்வில், தேடல் கலை வல்லுனர்களில் ஒருவரான ரீட்டா வைன் (Rita Vine ), நம்பகமான தேடலுக்கான வழியாக இணையத்தேடலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான தேடல் கருவிபெட்டியை (“search toolbox”- ) கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிடுகிறார். இந்த பெட்டி தொடர்பாக மேலும் அறிய கூகுளில் தேடிய போது ஏமாற்றமே மிஞ்சியது. எந்த பயனுள்ள, பொருத்தமான தகவலையும் சுட்டிக்காட்டவில்லை.
அதோடு, இந்த தேடலுக்கு பொருத்தமாக இருக்கும் ஐடூல்ஸ் தளத்தையும் முன்னிறுத்தாமல் இருக்கிறது.
இணையத்தில் தேடும் போது, கேள்விகளை எழுப்புங்கள்!
–